
ஒரே நிமிடத்தில்
உலகின் எல்லா
சந்தோஷங்களையும்
தந்திட முடியுமா??
முடியும்!!!!
ஒரே நிமிடத்தில்
உலகின் எல்லா
சந்தோஷங்களையும்
பெற்றிட முடியுமா??
முடியும்!!!
முதல் முறையாய்
அவள், அவனுடன்
அலைபேசியில்!!!
எட்டாமலே இருக்கும்
வட்ட நிலா -அன்று
சற்றே நட்சத்திரங்களின்
வனமிரங்கி வந்தது!
அவன் நிலைக்கண்டு -தன்
மனமிரங்கி வந்தது
நிலவின் ஒளியை
நீங்கள் அறிவீர்கள்!
நிலவின் ஒலியை
அவன் அறிவான்!
செவிவழியே சென்று!
மூளையை முட்டி,
இதயத்தில் இறங்கியது....
அவள் இதழ்வழி பிறந்த
ஒரு கோடி பட்டாம்பூச்சிகள்...
ஆயிரமாயிரம் மாற்றங்கள்
அந்த கணப்பொழுதில்!!!
அவன் இதயத்தை
திறந்து பாருங்கள்!!
நரம்புகளுக்கு பதிலாய்
இதயத்தில் எங்கெங்கும்
பூக்களின் மெல்லிய காம்புகள்!
வானவில்லை உருக்கி,
ஏழுவண்ணங்களில் பாய்ந்தன!
இரத்தம் முழுதும் புதிதாக!!
சிவப்பு நிறத்திற்கு பதிலாக...
குருதியில் ஓடுகின்ற
அந்த ஏழுவண்ணணுக்களை
சோதித்துப்பாருங்கள்...
உறுதியாய் சொல்கிறேன்!
ஒவ்வொன்றிலும்
அவள் பெயர்
பொறித்திருக்கும்!
மீண்டும்....
சந்திப்போமென்று சொல்லி
மீண்டும்....
எட்டாத உயரத்திற்கு
சிட்டாக சென்றது -அந்த
வட்ட நிலா!
நீலவானில் விழிகளை
நிலைநிறுத்தி.. நிலவின்
நினைவுகளை மீட்டெடுத்தான்...
அந்த ஒற்றைநிமிட
கிளியின் குரல் மட்டும்
இதயத்தின் ஓரத்தில் மீண்டும்
ஒலிக்க ஆரம்பித்தது!
ஷீ-நிசி
13 comments:
ஓல்ட் மாங்க் இருந்தால் உலகின் எல்லா சந்தோஷங்களையும் ஒரே நொடியில் பெற்று விட முடியும் தல...
அருமையான கவிதை
நட்புடன்
சம்பத்குமார்
அற்புதம்
கவிதையான அந்த ஒரு கணத்தை
அருமையான கவிதையாக்கி
அனைவருக்குள்ளும் இருக்கும்
அந்த ஒரு கணத்தை மிக
அழகான நினைவாக மலரச் செய்தமைக்கு
மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
த.ம1
அழகான கவிதை அருமை
அருமையான கவிதை வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ........
மனதை வருடும் கவிதை சூப்பர் நண்பா
அருமையான கவிதை
"கவிதை அருவி" என பட்டம் கொடுத்து மகிழ்கிறோம்....!!!
உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றிகள் பல நண்பர்களே!
கவிதை அருமை நண்பா
கொடி முல்லை பூத்தது போல்
நீண்ட கவிதை!
நன்று!நன்றி!
புலவர் சா இராமாநுசம்
Post a Comment