இந்த விஜய் டி.வியின் விளம்பர பிரிவில் இருப்பவர்களுக்கு நிச்சயம் ஒரு வாழ்த்து சொல்லியே ஆகவேண்டும்... உண்மையிலேயே எப்படித்தான் இவங்க இப்படில்லாம் சிந்திக்கறாங்களோன்னு தெரியலை...
விஜய் டிவி.. சூப்பர் சிங்கர் ஜீனியர் வரப்போகும் இந்த நிகழ்ச்சிக்கான விளம்பர பாடலாக சமீபநாட்களாக திரையில் தோன்றிக்கொண்டிருக்கிறது இந்த விளம்பரம்...
இதில் தோன்றும் குட்டிப்பையனை அவங்க அம்மா டேய் போய் கடையில் கால் கிலோ கருப்பு புளி, மஞ்சா தூள் வாங்கிட்டு வாடானு சொல்றாங்க.. அந்த குட்டி பையன் அந்தப்பொருட்களை பாடிக்கொண்டே கடைக்கு செல்வது போல விளம்பரம். அந்தப்பையனின் நடிப்பும் ரொம்பவும் ரசிக்கவைக்கும்படியாய்... அந்தப் பாடல் ரிதமும் கூட நம் தலையை ஆட்டி ரசிக்க வைக்கிறது...
கடைக்கு சென்றவுடன் "காலு கிலோ கருப்பு புளி மஞ்சா தூளுடா... " என்று பாட... கடைக்காரர் என்னடா "டா"னு சொல்றன்னு கேட்டதும், அந்த குட்டி பையன் வாய்ஸ் டோனை குறைச்சி அதேப் பாட்டை காலு கிலோ கருப்பு புளி மஞ்சா தூளுனா... என்று 'னா' போட்டு மாற்றி பாடுவான்... கடைக்காரரிடம் பொருளை வாங்கி கொண்டதும் மறுபடியும் அதே பாட்டை "டா" போட்டு பாடிக்கொண்டு ஓடுவான்... கடைக்காரர் முறைப்பார்..
இப்படி ஒரு குட்டி விளம்பரத்திலும் ஒரு சின்ன ஹூயூமர் சேர்த்திருப்பது நிச்சயம் ரசிக்க வைக்கின்றது.
இவர்களின் இது போன்ற தனித்து நிற்கின்ற விளம்பரங்கள்தான், இவர்களை ஜெயிக்க வைக்கிறது. ஒவ்வொரு முறையும் புதிய முறையில் ஒரு நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தி மக்களை ரசிக்க வைக்கிறார்கள்.
இனி ஒவ்வொரு வீட்டிலும் அவர்களின் வாண்டுகள் சில நாட்களுக்காகிலும் "காலு கிலோ கருப்பு புளி மஞ்சா தூளுடா" என்று பாடிக்கொண்டிருப்பார்கள்...

ஷீ-நிசி
15 comments:
உண்மைதான் நண்பரே ஒருசில விளம்பரங்கள் அந்த வீட்டு குழந்தைகளின் மனதில் பதிந்து சில நாட்கள் அவர்கள் வாய் விட்டு சொல்லி வருவது வாடிக்கை தான்
தமிழ் மணம் ஒன்று
ம்ம்ம்... நான் கூட பார்த்தேன்... நல்லா இருக்குது...
அந்த விளம்பரத்தை நானும் பார்த்தேன்.. அருமையாக இருந்தது
அதே போல் கலைஞர் டி வி யில் பாடவா டூயட் பாடவா வை சொல்லலாம்
ஆனால் சிறுவர்களிடம் மரியாதை எண்ணத்தை வளர்ப்பதை விட்டு விட்டு ஏமாற்றும் எண்ணத்தை விதைப்பது நியாயமில்லை, என்ன தான் நகைச்சுவை என்றாலும்... அத விடுங்க.. எனக்கு ஒரு டவுட், இந்த சூப்பர் சிங்கர் க்கு வோட்டு போட எஸ் எம் எஸ் அனுப்ப எவ்வளவு காசு பிடிக்கிறாங்க ?
சில சமயங்கள்ல நிகழ்ச்சிகளை விட விளம்பரங்கள் சுவாரஸ்யமா அமைஞ்சுடுது :-)
ஆமாம் உண்மை. சில சமயம் விளம்பரங்கள் அசத்தலாக இருக்கும்..
நீங்கள் சொல்வது உண்மைதான் மக்கா....
தமிழ்மணம் ஏழு குத்தியாச்சு...
மிகவும் சுவாரஸ்யமான விளம்பரம்
குழந்தைகள் நடித்திருக்கும்
பல விளம்பரங்கள் மனதை கொள்ளை கொள்கிறது
நன்றி நண்பர்களே!
சில சமயம் நிகழ்ச்சிகளை விட விளம்பரங்கள் சுவாரஸ்யமா அமைஞ்சுடுது...
நானும் இந்த லிங்க தேடிட்டு இருந்தேன் ..உங்க பதிவ பார்க்க நேர்ந்தது! லிங்க் இதோ
http://www.youtube.com/watch?v=vL2GTD3sjJY&feature=player_embedded
நான் எவ்வளவோ தேடியும் கிடைக்கலை இந்த லிங்க். ரொம்ப நன்றி ராஜா...
Post a Comment