Tuesday, 13 September 2011

இன்று ஒருநாள் மட்டும் இந்த உலகம் என் வசப்பட்டால்....





நீலவானத்தின் மேலேறி சென்று,
மின்னலில் கிளையொன்றை வெட்டி,
நட்சத்திரங்களை அதில் கோர்த்து,
நிலவினையும் கூட சேர்த்து..

நீ அணிந்திட, உனக்காக
நட்சத்திரமாலை செய்திடுவேன்!!

மழையின் தூறலை
தரியினில் வைத்து,
வானவில்லின் சாயங்கள்
ஏழையும் குழைத்து,

நீ உடுத்திட, உனக்காக
மழையாடை நெய்திடுவேன்!!

ஆகாய விரிப்பினை
ஒரு பாதி கிழித்து,
தவழ்கின்ற மேகங்களை
அதில் முழுதும் சேமித்து,

நீ உறங்கிட, உனக்காக
வான்மெத்தை செய்திடுவேன்!!

கடலின் அடியில் சென்று,
எரிமலையின் தலையை வெட்டி,
அதில் வழியும் நெருப்பினை மூட்டி,
களைப்பு தீர..

நீ குளித்திட, உனக்காக
கடல்நீரை வெந்நீராக்கிடுவேன்!!

காலை சூரியனின்
மஞ்சள் வெயிலெடுத்து,
உன் கன்னங்களுக்கு
சந்தனம் பூசிடுவேன்!!

மாலை சூரியனின்
சிவந்த வண்ணமெடுத்து,
உன் உதடுகளுக்கு
வர்ணம் பூசிடுவேன்!!

புல்லின் மீதமர்ந்திருக்கும்
பனித்துளிகளுக்குப் பதிலாய்,
உன் வியர்வைத்துளிகளை,
அமரவைத்து அழகுப் பார்ப்பேன்!!

கூவுகின்ற குயில்களைப் பிடித்து,
அவைகளிடம் வேண்டுகோள் விடுத்து,
இன்று முழுவதுமுனக்கு
பிறந்த நாள் பாடல்களை
பாடிட செய்திடுவேன்!

இன்று ஒரு நாள் மட்டும்
இந்த உலகம்,
என் வசப்பட்டால்.....


ஷீ-நிசி

15 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வாவ் கவிதை மழை பொழியுது அசத்தல்...!!!

Philosophy Prabhakaran said...

தல... இங்கே நக்கலடிக்கும் பின்னூட்டங்கள் போடலாமா... (முதல்முறை என்பதால் பர்மிஷன் கேட்டுக்கொள்கிறேன்...)

ஷீ-நிசி said...

நன்றி மனோ....

@பிரபா.
கவிதை கண்ணீர் விடாத அளவிற்கு பின்னூட்டங்கள் இடலாம் நண்பா!!!

K.s.s.Rajh said...

அழகான கவிதை

Ramani said...

அருமையான கற்பனை அருமையான கவிதை
வியர்வைத் துளிகள் மட்டும் கொஞ்சம் இந்தச் சூழலுக்குப்
பொருந்தாதது போல் பட்டது
இந்த அழகிய கற்பனைக்காக உலகை நிச்சயம்
ஒரு நாள் உங்கள் வசம் தரலாம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 4

மாய உலகம் said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

அமைதிச்சாரல் said...

கவிதை நல்லாருக்கு.. உலகம் வசப்படட்டும் உங்களுக்கு :-)

தமிழ்வாசி - Prakash said...

கவிதை சூப்பர்

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை நீட்

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
அவளுக்காக, உலகத்தை மாற்ற நினைக்கும் கவிஞனின் உணர்வுகளை இக் கவிதை தாங்கி வந்துள்ளது.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஒரு அருமையான கவிதை..

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமை ....அருமை ....அருமை ....அருமை ....அருமை ....அருமை ....அருமை ....அருமை ....அருமை ....அருமை ....அருமை ....அருமை ....அருமை ....அருமை ....அருமை ....அருமை ....அருமை ....அருமை ....அருமை ....அருமை ....அருமை ....

ஷீ-நிசி said...

அனைவருக்கும் என் நன்றிகள்!

மகேந்திரன் said...

மழைச்சாரல்
நெஞ்சை நனைக்கும்
அழகிய கவிதை.

வைரை சதிஷ் said...

அருமை அருமை