
மங்காத்தா சனிக்கிழமை காலை தேவி பாரடைஸில் சென்று பார்த்தேன்.
அஜித் இதுவரை அவர் நடித்த படங்களிலேயே இதை தி பெஸ்ட் என்று சொல்லலாம்.... இதுவரை ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்திருக்கும். பரவாயில்லை.. ருசிச்சவன் சாப்பிட்டதைபத்தி சொல்லாம இருக்க முடியாது. படம் பரவாயில்லை ரகமாகத்தான் இருக்கும் என்று நினைத்தபடிதான் நான் படம் பார்க்க சென்றேன். ஆனால் அஜித் தன் ஸ்டைலால் எல்லாரையுமே கவர்ந்துவிட்டார் என்பதை மறுக்கமுடியாது. வெங்கட்பிரபு அஜித்தை மிக அழகாக ஸ்கோர் செய்ய வைத்திருக்கிறார்.
ரசிச்ச விஷயங்கள்
அஜித் தன் பிஸ்டல் எடுத்து பூட்டை உடைக்கும்போது சொல்வார் இப்ப பாரு அலறி அடிச்சிட்டு வருவானுங்கனு... நானும் நினைச்சேன் ரெண்டு பேரும் என்ட்ரி ஆவாங்கனு.. ஆனால் அப்படி நடக்கல... பொதுவா ஹீரோ இது மாதிரி சொல்றாங்கன்னா அது அடுத்தது அப்படியே நடக்கும்.. அப்படி இல்லாம வெங்கட்பிரபு ஸ்க்ரீன்ப்ளே செய்திருக்கற இது போல சின்ன சின்ன விஷயங்கள் ரசிகர்களை அடுத்தது என்னன்னு யோசிக்க முடியாத அளவுக்கு பார்க்க வைச்சிருக்கு..
அந்த பைக் வீலிங் சீன்லாம் செம அசத்தல்.. பின்னாடி உட்கார்ந்திருக்கற வைபவ் செம பயத்தோட உட்கார்ந்துட்டு இருக்கறமாதிரியே இருந்தது..
ஆக் ஷன் கிங்னு அஜித் அர்ஜீனை போன்ல கூப்பிடறதும், க்ளைமாக்ஸ்ல அர்ஜீன் என்ன தல அப்படின்றதும் நிச்சயம் அஜித் ரசிகர்களை தாண்டி எல்லா தரப்பு ரசிகர்களையும் ரசிக்க வைச்சிருக்கும்..
மச்சி ஓப்பன் த பாட்டில்... என்ற பாடலில் அஜித் டான்ஸ் ரசிக்க வைத்தது
படம் முடிஞ்ச பிறகு ஓடற அந்த சின்ன சின்ன சூட்டிங் ஸ்பாட் க்ளிப்ஸ் எல்லாமே ரசிக்கவைத்தது என்றாலும், அஜித் அர்ஜீன் போலீஸ் டிரஸ்ல நிக்கற அந்த குரூப் போட்டோ ஷாட்ல அஜித் சின்னதா ஒரு டான்ஸ் மூவ்மெண்ட் பன்றது நிச்சயம் உங்களை கை தட்ட வைக்கலாம்...
ரசிக்காத விஷயங்கள்..
நிறைய கெட்ட வார்த்தை பேசறார். லிப் மூவ்மெண்ட் தெளிவா சொல்லுது... அந்த கேரக்டர் அப்படித்தான் பேசும்னு சொன்னாலும், எல்லாரும் ரசிக்கற 'தல ' பேசறது ஏனோ என்னால ரசிக்கமுடியல..
50வது படம் வெற்றியா அமையனும்னு எல்லோரும் விரும்புவாங்க... ஆனா அஜித்க்கு இது மாபெரும் வெற்றின்னு தான் சொல்லனும். நான் யாருக்கும் ரசிகன் கிடையாது.. ஆனா நானே இரண்டுமுறை பார்த்துட்டேன்...
மீண்டும் பார்க்கனும் போல இருக்கு..
வாழ்த்துக்கள் அஜித்!!!!
ஷீ-நிசி


17 comments:
ஊருக்கு போனதும் முதல் வேலையா
படத்த பார்த்துர வேண்டியதுதான் நண்பரே...
விமர்சனம் அருமையா இருக்கு.
விமர்சனம் நீட்..
ஆனா வாலி, பில்லா, ஆசை அதுக்குபிறகுதான் மங்காத்தா
@சிபி...
வாலி - செம ஸ்ட்ராங் கதை
பில்லா - ரீமேக் (தெரிந்த வெற்றி)
ஆசை - வசந்த்+பிரகாஷ்ராஜ் பங்கும் உண்டு
வாலி, பில்லா, ஆசை இந்த மூன்று படங்களிலும் அஜித்க்குப் பதில் யாரை போட்டிருந்தாலும் படம் நிச்சயம் வெற்றிதான்..
---------
ஆனால் மங்காத்தாவில்
அஜித்தை தவிர்த்து அந்த கேரக்டரில் வேறொருவரை நினைத்து பார்க்கமுடிகிற ஒரே ஆள் ரஜினி மட்டுமே...
அந்த ஸ்டைல், அந்த பாடி லாங்குவேஜ்..
அதனால்தான் சொல்கிறேன் மங்காத்தா அஜித்தின் தி பெஸ்ட் என்று..
நன்றி மகேந்திரன்... :)
நல்லா விமர்சனம் செய்துள்ளீர்கள் நண்பரே .
நேற்றுதான் படம் பார்த்தேன்
பகிர்வுக்கு நன்றி நண்பரே
ஒரு சிறந்த நடிகர் பார்முக்கு திரும்பியது மகிழ்ச்சிதான் ..
மங்காத்தா தலையின் வெறியாட்டம்
இயக்குனர்களே ஒரு நடிகன அங்கயும் இங்கயும் நடக்கவிடாம வெங்கட் மாதிரி பயன்படுதுங்கபா
அருமையான விமர்சனம். பகிர்வுக்கு நன்றி.
எனக்கும் இந்த படம் ரொம்ப பிடிச்சிருந்தது..
அருமையான விமர்சனம்.... தியேட்டரிலும், அஜித்தின் ஒபெனிங் செம சூப்பர்...
நன்றி நண்பர்களே!
அஜித் ரசிகர்களுக்கு மட்டும் பிடிக்கும் என்று என் நண்பர் சொல்கிறார்.
நீங்க இப்படி சொல்றிங்க..
படம் பார்க்க வச்சிடுவீங்க போல?!
படம் நல்லா இருக்குங்க ரிஷபன்!
நானும் தங்களைப்போல யாருக்கும் ரசிகன் இல்லை
என்வே தங்கள் விமர்சனம் படத்தை பார்க்கும் ஆவலைத்
தூண்டிப்போகிறது. யெஸ் ஓட்டும் போட்டாச்சு
தங்கள் பைக் கிடைத்துவிட்டதா?
Nice! i'll see this week end! :-)
@ரமணி...
பைக் இன்னும் கிடைக்கல நண்பரே
Post a Comment