Monday, 8 August 2011

பாரதி காணாத புதுமைப் பெண்




எட்டி நிற்கும்
நிலவு மட்டுமல்ல,
சுட்டெரிக்கும்
சூரியனும் தான் நீ!!

முகமூடிகளை
அணியாதவள்!
முகம் வாடி தலை
குனியாதவள்!

உன் விரல் சிந்தும்
வார்த்தைகளோ
ஞானிகளின் ரகம்!

உன் இதழ் சிந்தும்
புன்னகைகளோ,
ராணிகளின் ரகம்!

வாழ்வின் ஒரு பாதி,
கற்றுக்கொள்ளாமலே
பெற்றுக்கொண்டவள்!

மறுபாதி,
பெற்றுக்கொள்ளாமலே
கற்றுக்கொண்டவள்!

தமிழ் மொழியென்றால்
உன் விழிகளிரண்டும்
பரவசமடையும்!

கலாச்சாரமும், பண்பாடும்
உன் மொழிகளிலின்று
மறு பிரசவமடையும்!

இன்று!
பாரதியிருந்தால்
சொல்லியிருப்பான் -நீதான்
புதுமைப் பெண்னென்று!

அன்று,
சொன்னவளுக்கு
இட்டிருப்பான் பேரை
முதுமைப் பெண்னென்று!


ஷீ-நிசி

25 comments:

மகேந்திரன் said...

புதுமைப் பெண்ணிர்க்கோர் புதிய இலக்கணம்.
அருமை.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இந்தக் கவிதையில் தமிழ் விளையாடி இருக்கிறது..

Chitra said...

அழகு. :-)

ரிஷபன் said...

வாழ்வின் ஒரு பாதி,
கற்றுக்கொள்ளாமலே
பெற்றுக்கொண்டவள்!

மறுபாதி,
பெற்றுக்கொள்ளாமலே
கற்றுக்கொண்டவள்!

அருமை.. அருமை.. வரிகள் அனாயசமாய் வந்து விழுந்திருக்கின்றன..

பலே பிரபு said...

ஆம் பல புதுமை பெண்களை பாரதி காணவில்லை.

வார்த்தை விளையாட்டுக்கு கவிதை என்றும் பெயரோ?

அமைதிச்சாரல் said...

அருமையாயிருக்கு..

கார்த்தி said...

இத சுட்டுட்டு போயி யாருக்கும் குடுத்தா! நிச்சயமா அந்த பொண்ணு கவுழுறது நிச்சயம்! நல்ல கவிதை

ஷீ-நிசி said...

நன்றி நண்பர்களே

koodal bala said...

ஆஹா ...என்ன அருமையான வார்த்தை ஜாலம் !

நிரூபன் said...

வணக்கம் சகோ,
இன்றைய காலப் பெண்கள் பற்றிய, காத்திரமான வரிகளைக் கவிதையாக்கியிருக்கிறீங்க.

ரேவா said...

வாழ்வின் ஒரு பாதி,
கற்றுக்கொள்ளாமலே
பெற்றுக்கொண்டவள்!

இன்று!
பாரதியிருந்தால்
சொல்லியிருப்பான் -நீதான்
புதுமைப் பெண்னென்று!

அன்று,
சொன்னவளுக்கு
இட்டிருப்பான் பேரை
முதுமைப் பெண்னென்று!

புதுமைப் பெண்ணென்றும், முதுமைப் பெண்ணென்றும் விளையாடும் உங்கள் வார்த்தைகளை ரசித்தேன்...கவிதை அருமை...வாழ்த்துக்கள்

பாச மலர் / Paasa Malar said...

அனாயாசமாய் வந்து விழுந்த வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள்..வாழ்த்துகள்..

சி.பி.செந்தில்குமார் said...

ஈகரை வெற்றிக்கு வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

//முகமூடிகளை
அணியாதவள்!
முகம் வாடி தலை
குனியாதவள்! //

அருமையான வரிகள். அத்தனையுமே.

ஷீ-நிசி said...

வாழ்த்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் நன்றிகள் நண்பர்களே!

சி.பி.செந்தில்குமார் said...

நீட் , டைட்டில் மட்டும் இன்னும் புதுமையாய் வைக்கலாம்

ஷீ-நிசி said...

நன்றி சி.பி. அவர்களே.....

இதுவே புதுமைன்னுதான் நினைச்சேன்.... :)

உங்கள் எண்ணத்தை கவனத்தில் எடுத்துக்கொள்கிறேன்...

M.R said...

புதுமைப் பெண் துணிந்த பெண்
அருமை

ஹேமா said...

கவிதை முடித்த விதம்தான் சிறப்பு !

thiruchchikkaaran said...

இந்திய சமதாயத்தின் உயிர் பெண்தான்.

இந்தியப் பெண்கள் அன்பும், தியாகமு, பொறுமையும்,
நேர்மையும் ....இல்லாதவர்களாய் இருந்திருந்தால், இந்திய சமுதாயம் இல்லாமல் போயிருக்கும்.

இந்தியப் பெண்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் புதிய சக்தி பெற்று வருகின்றனர். ஆனால் எந்தப் பெண்ணையும் முதுமை என சொல்ல முடியாது.

கண்ணகி போன்ற , ஜான்சி ராணி போன்ற பெண்கள் என்றும் புதுமைப் பெண்களே

Ramani said...

வாழ்வின் ஒரு பாதி,
கற்றுக்கொள்ளாமலே
பெற்றுக்கொண்டவள்!

மறுபாதி,
பெற்றுக்கொள்ளாமலே
கற்றுக்கொண்டவள்!


அருமை அருமை
இவளே நிச்சயம் புதுமைப் பெண்
சிறந்த படைப்பு தொடர வாழ்த்துக்கள்

ஷீ-நிசி said...

நன்றி நண்பர்களே...


@திருச்சிக்காரன்...

முதுமை என்ற வார்த்தை கவிதையின் நடைக்காக....

நன்றி!

! ஸ்பார்க் கார்த்தி @ said...

இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

சத்ரியன் said...

//வாழ்வின் ஒரு பாதி,
கற்றுக்கொள்ளாமலே
பெற்றுக்கொண்டவள்!

மறுபாதி,
பெற்றுக்கொள்ளாமலே
கற்றுக்கொண்டவள்! //

ஷீ-நிசி,

பெண்களைப் பற்றி புதிய பார்வையைக் கற்றுத்தரும் கவிதை.

ஷீ-நிசி said...

நன்றி சத்ரியன் அவர்களே