Thursday, 4 August 2011

இந்த நட்சத்திரங்கள்



எந்த வெள்ளை புறா
நடந்து சென்ற பாத சுவடுகள்
இந்த நட்சத்திரங்கள்?!

வானம் இரவு நேரங்களில்
போர்த்திக் கொள்ளும்
பொத்தல் நிறைந்த போர்வையா
இந்த நட்சத்திரங்கள்?!

பால் நிலா தோட்டத்தில்
பூத்திருக்கும்
தேன் மல்லிப் பூக்களா
இந்த நட்சத்திரங்கள்?!

வானம் சுத்தம்
செய்யப்படுவதற்காய்
தெளிக்கப்பட்ட சோப்பு நுரைகளா
இந்த நட்சத்திரங்கள்?!

மேக தேவதைகளின்
உறக்கத்திற்காய்
வான் மெத்தை மேல்
தூவப்பட்ட வெள்ளிப் பூக்களா
இந்த நட்சத்திரங்கள்?!

நிலாவிற்கு
வர்ணம் பூசினப்போது
சிந்தின துளிகளா
இந்த நட்சத்திரங்கள்?!

விதியினை எழுதும் எழுதுகோலில்
மை உள்ளதா என்று
இறைவன் உதறிப் பார்த்த துளிகளா
இந்த நட்சத்திரங்கள்?!

வானம் இரவு நேரங்களில்
கீழே விழுந்து விடாமலிருக்க
குத்தப்பட்ட குண்டூசிகளா
இந்த நட்சத்திரங்கள்?!

நட்சத்திரங்களிடமே கேட்டேன்?!

விடை கிடைக்குமுன்பே
விடை பெற்றுக்கொண்டது;
என் நட்சத்திர கனவு
அலாரத்தின் கதறலால்.....


ஷீ-நிசி

25 comments:

கந்தசாமி. said...

அழகான கற்பனைகள் ..

Chitra said...

Beautiful! அழகான கவிதை. :-)

Follow பண்றேன்.

அமைதிச்சாரல் said...

அழகான நட்சத்திரங்கள்..

koodal bala said...

கனவின் கற்பனைகள் அழகு ...வைர முத்துவை நியாபகப் படுத்துகிறது !

ஷீ-நிசி said...

நன்றி நண்பர்களே!

சி.பி.செந்தில்குமார் said...

மிஸ் பண்ணிட்டேன் இதுவரை. இனி ஃபாலோயிங்க்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

nanbaa
arumaiyaana kavithi..
karpanaiyum arumai..

ஜீ... said...

அழகான கவிதை பாஸ்!

M.R said...

நட்சத்திரங்களில் இத்தனை சந்தேகங்களா

அழகான கற்பனை ஊற்று

பகிர்வுக்கு நன்றி நண்பரே

ஷீ-நிசி said...

நன்றி நண்பர்களே

siva said...

மிஸ் பண்ணிட்டேன் இதுவரை. இனி ஃபாலோயிங்க்...me too

siva said...

all well said.

what i have to do...

great...

மகேந்திரன் said...

அருமையான கற்பனை ஊற்று
அழகுக் கவிதை

ஷீ-நிசி said...

உங்களின் அனைவரின் அன்பிற்கும் என் நன்றிகள் நண்பர்களே!

வெறும்பய said...

அருமையான கவிதை தோழரே.. இவ்வளவு நாள் எப்படி தவற விட்டேன் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்..

கூடிய விரைவில் படித்து முடிக்கிறேன் தங்களின் அத்தனை கவிதைகளையும்..

மனோ சாமிநாதன் said...

கற்பனைகள் அத்தனையுமே அற்புதம்! எதையென்று குறிப்பிட்டுப் பாராட்டுவது?
புகைப்படமும் பொருத்தமாய் அழகு சேர்க்கிறது.

அருமையான கவிதை! மனமார்ந்த பாராட்டுக்கள்!

ஹேமா said...

ஷீ-நிசி...நீங்க சொன்னப்புறம்தான் நானும் கற்பனை பண்ணிப் பாக்கிறேன்.இப்போ நட்சத்திரங்களும் நானும் மட்டுமே !

கார்த்தி said...

நடசத்திரத்துக்கே இவ்வளவு உவமையா! வாவ் நிங்க கில்லாடிதான் போங்க!!

நட்சத்திரம் எண்டா காத்தி என்கிறவர் அள்ளி தெளித்த மின்மினிப்பூச்சி! விளங்கிச்சுதா????

மாலதி said...

அழகான கவிதை

M.R said...

ஷீ - நிசி

நண்பருக்கு

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

ஷீ-நிசி said...

நன்றி நண்பர்களே

பலே பிரபு said...

நல்லா வானத்த பாத்து இருக்கீங்க.

வானம் முழுவதும் நட்சத்திரம் போல, வலைப்பூ முழுவதும் கவிதை கொட்டிக் கிடக்கிறது.

//சிற்பியின் உளிகளுக்கு சமம்,
உங்கள் சொற்களின் துளிகள்!//

இது அருமை.

ஷீ-நிசி said...

நன்றி நண்பரே

விக்கியுலகம் said...

அழகான கவிதை

ராமலக்ஷ்மி said...

அருமையான கனவு:)! மின்னும் நட்சத்திரமாக இக் கவிதை!