Saturday, 30 July 2011

இதயங்களின் சப்தங்கள்




நிசப்தமான இரவு நேரம்...

இரவு?!

பூமிராணிக்கு சூரியசேவகன்
போர்த்தும் போர்வை போலும்!

மரக்கிளையில்
அவ்வபோது மெட்டவிழ்த்தன,
சில பூங்குயில்கள்!

பூங்கிளையில்
அவ்வபோது மொட்டவிழ்த்தன,
சில பூக்கூட்டங்கள்!

சத்தமிட்ட சப்தங்கள் யாவும்
தடைசெய்யபட்டன!!

கதவுகளும், சில ஜன்னல்களும்
சாத்தப்பட்டதில்,

சத்தமிட்ட சப்தங்கள் யாவும்
தடைசெய்யப்பட்டன!!

பளிங்கு நிறத்திலொரு
வெண்மெத்தை!!! - அதே
நிறத்தில் அதின்மேலொரு
பெண் தத்தை!!

அவனும்! அவளும்!

கொஞ்சம் இடைவெளியில்
அமர்ந்திருந்தனர்..
கொஞ்சும் கடைவிழியால்
பேசிக்கொண்டிருந்தனர்..

பாஷைகளின்றி!
ஓசைகளின்றி!

புரிந்துகொள்ளப்பட்டன
ஆசைகள் யாவும்!

இருவரும் நெருங்கியதில்
இடைவெளி வெளியேறியது!
காற்றும் கூட புகமுடியாதபடி
தடை வேலி உருவானது!

கட்டிக்கொண்ட உடல்களால்,
ஒட்டிக்கொண்டன இதயங்கள்!

அருகருகே சந்தித்ததில்
இனம்புரியாத மகிழ்ச்சியில்,
படபடவென்று அடித்தன!
பட்டாம்பூச்சி இதயங்கள்!

அறையின் திசையெங்கும்
ஒலித்தது இசையொலி!

மெல்ல கண்மூடினாள் இளமங்கை!
இதயங்களின் சப்தங்களை ரசித்தபடி!


ஷீ-நிசி

22 comments:

மகேந்திரன் said...

ஓசையின்றி வந்த சப்தம்
அருமை அருமை.

கந்தசாமி. said...

உடல்களுக்கு இடையேயான ஊடல் ...கவிதை அழகு...

M.R said...

ரசித்தேன் கவிதை அருமை நண்பரே

ஹேமா said...

ஷீ-நிசி சுகம்தானே.ரொம்ப நாளுக்கப்புறம் பார்க்கிறேன்.
சுகம்தானே !

கவிதை வசந்தகாலம் !

ஷீ-நிசி said...

மகேந்திரன் said...

ஓசையின்றி வந்த சப்தம்
அருமை அருமை.////

நன்றி மகேந்திரன்

ஷீ-நிசி said...

கந்தசாமி. said...

உடல்களுக்கு இடையேயான ஊடல் ...கவிதை அழகு...///

நன்றி கந்தசாமி

ஷீ-நிசி said...

M.R said...

ரசித்தேன் கவிதை அருமை நண்பரே//

தொடர்ந்து வாங்க... நன்றி M.R

ஷீ-நிசி said...

Blogger ஹேமா said...

ஷீ-நிசி சுகம்தானே.ரொம்ப நாளுக்கப்புறம் பார்க்கிறேன்.
சுகம்தானே !

கவிதை வசந்தகாலம் !///

நன்றி ஹேமா.. நலமே!!!

கவி அழகன் said...

வாழ்த்துக்கள் நண்பரே...
//மரக்கிளையில்
அவ்வபோது மெட்டவிழ்த்தன,
சில பூங்குயில்கள்!//

அவ்வபோது

அவ்வப்போது

கவிதைக்கு பொய் வேண்டுமானால் அழகாக இருக்கலாம்... நிச்சயம்
பிழைகள் அழகல்ல...

மீண்டும் வாழ்த்துக்கள்!

ஷீ-நிசி said...

நன்றி கவி அழகன்...

பிழையென்று நினைத்து நீங்கள் சுட்டி காட்டியமைக்கு நன்றி...

ஆனால் அவ்வபோது என்பது சரியே... அங்கே 'ப்' வரவேண்டிய அவசியமில்லை..

உங்கள் ப்ளாகில் நான் எந்த வார்த்தைகளால் சொன்னேனோ அதே வார்த்தைகளாலேயே சொல்லியதை ரசித்தேன்...

///கவிதைக்கு பொய் வேண்டுமானால் அழகாக இருக்கலாம்... நிச்சயம்
பிழைகள் அழகல்ல...////

ஈரோடு தங்கதுரை said...

அருமையான கவிதை வரிகள் .. தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

சிவகுமாரன் said...

ஓசையின்றி வந்த சப்தம் .
உள்ளத்தை கொள்ளை கொண்டது ஓசையின்றி

ஷீ-நிசி said...

நன்றி சிவகுமாரன்.. அவர்களே!

ஷீ-நிசி said...

கவி அழகன்
புரிந்துகொள்ள( ப் )பட்டன

அருமை யான கவிதை நண்பரே கொஞ்சம் கொஞ்சமாய் ரசனை அதிகரித்துக்கொண்டே போகுது வரிகளில் //////

நன்றி கவி அழகன்..
திருத்திக்கொள்ளப்பட்டன.. :)

தொடர்ந்து வருகை புரியவும்!

ஷீ-நிசி said...

நன்றி தங்கதுரை அவர்களே!

Sridhar said...

Super !!!

நிரூபன் said...

பளிங்கு நிறத்திலொரு
வெண்மெத்தை!!! - அதே
நிறத்தில் அதின்மேலொரு
பெண் தத்தை!//

வணக்கம் சகோ,
சிற்றின்பத்தைச் சிறப்பாகச் சந்தம் கொண்டு கவியாக்கிருக்கிறீங்க. அருமையான கவிதை, ஆங்காங்கே குறியீட்டு வடிவங்கள் கவிதைக்குப் பக்க பலமாக இருக்கின்றது.

ஷீ-நிசி said...

நன்றி ஸ்ரீதர்...

நன்றி நிரூபன்...

தொடர்ந்து வருகை புரியவும்

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

அழகான ரசனை கவிதையில் கசிகிறது அருமையானப் படைப்பு . வாழ்த்துக்கள்

ஷீ-நிசி said...

நன்றி சங்கர் அவர்களே!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாலை வணக்கம் நண்பரே..
அருமையான கவிதை,,\

இனி தொடர்ந்து வருவேன்..

ஷீ-நிசி said...

நன்றி கருண் அவர்களே!