Monday, 18 July 2011

இரும்பிலே ஒரு சேலை - முதல் பரிசு பெற்ற கவிதை






செய்தி : உத்தரபிரதேசம் :மேலும் 3 சிறுமிகள் கற்பழிப்பு

நேற்றிரவு ஒரு கனவு

வெள்ளுடையில்,
அழுதுகொண்டிருந்தாள்;
ஒரு பெண்..

ஏன் அழுகிறாய்?!
என்ன வேண்டும் என்றேன்?

இரும்பிலே,
எனக்கொரு சேலை வேண்டும்!
கிடைக்குமா என்று கேட்டாள்....

நீ யாரென்று கேட்டேன்..

நானா?!! நான்.. நான்..
நான்தான்…..

“பாரதமாதா"

ஷீ-நிசி

ஈகரை தளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்றது இக்கவிதை. உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன்.
http://contest4.eegarai.com/p/blog-page_7751.html

8 comments:

ரேவா said...

அழகான கவிதை...இன்றைய சமுகத்தில் பெண் அதிலும் பச்சிளம் குழந்தைகள் கூட காமூகர்களால் வதைக்க படுகிறார்கள் என்பதை, சுருக்கமாய் நெற்றிப் பொட்டில் அடித்தார் போல சொல்லி இருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள் ஈகரையில் தங்கள் கவிதை இடம் பெற்றதற்கு....தங்கள் வெற்றி தொடர வேண்டுகின்றேன் நண்பரே

நட்புடன் ஜமால் said...

பரிசுக்கு பாராட்டுவதா
கவிக்காரணத்துக்கு வருந்துவதான்னு தெரியலை

She-nisi said...

நன்றி ரேவா..

நன்றி ஜமால்.

மஞ்சுபாஷிணி said...

வார்த்தைகள் இல்லை பாராட்ட... ஷீநிசியின் முத்திரை கவிதைகளில் பளிச்சிடும் என்றும்... அது போலவே முதல் பரிசுக்கான தகுதி பெற்றது இந்த கவிதை....எளிய நடை.. சாதாரண வரிகளில் அசத்தும் கருத்துகளை சொல்வது கண்டு பிரமித்திருக்கிறேன். அன்பு வாழ்த்துகள் ஷீநிசி...

She-nisi said...

நன்றி மஞ்சு அக்கா...

க.பாலாசி said...

வேதனையை உணரவைக்கும் நல்ல கவிதை. வாழ்த்துக்களும்..

திகழ் said...

சொல்ல வார்த்தை இல்லை

ஷீ-நிசி said...

நன்றி நண்பர்களே