Sunday, 11 October 2009

சாமிக்கு ஒரு கோவில்

சண்டை போட்டு
கட்டிட்டாங்க,

அவங்க சாமிக்கு ஒரு கோவில்,
இவங்க சாமிக்கு பக்கத்துலயே;

இப்போ சாமிங்க ரெண்டும்
ஒண்ணா நிக்குது!

கோவில் கட்டின ஜனங்க மட்டும்
பிரிஞ்சே நிக்குது!!

___________________________________


கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? - ஆம் / இல்லை

12 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

சில நூறு வருடங்கள் கழித்து பதிவுலகத்திற்கு மீண்டும் வந்திருக்கும் நண்பருக்கு வாழ்த்துகள்..

நட்புடன் ஜமால் said...

செம செம - நண்பா ...

ராமலக்ஷ்மி said...

//இப்போ சாமிங்க ரெண்டும்
ஒண்ணா நிக்குது!

கோவில் கட்டின ஜனங்க மட்டும்
பிரிஞ்சே நிக்குது!!//

உண்மை. சாமி என்னைக்கும் ஒரே சாமிதான். சனங்க நாமதான்...:(!

ஹேமா said...

ஷீநிசி,எங்கே ரொம்ப ரொம்ப நாளாக் காணோம்.சுகம்தானே.சின்னக்கவிதைதான் என்றாலும் மனசைக்
குத்துறமாதிரி.

ஒரு சந்தேகம்.மனுசன் பிரிஞ்சு நின்னாலும் உயிரோட இருக்கிற
வரைக்கும் சாமியைச் சேர விடமாட்டானே !

பாலா said...

yov ennaiya ninaichutu irukenga unga manasula
istaththuku vaareenga
istaththuku poreenga
ketka aalillainu ninaicheengala?

konnuduven

ozhunga kadai thoranthu yaavaram pannunga puriyuthaa??

ஆ.ஞானசேகரன் said...

வாங்க நண்பரே... நலமா? கவிதையும் குத்தலும் அருமை

யாழினி said...

ஹா...ஹா...ஹா... நல்லா சொன்னீங்க இப்பவாவது புரிஞ்சுக்கட்டும்.

ஷீ-நிசி said...

நன்றி கா.பா :)

நன்றி ஜமால்

நன்றி ராமலஷ்மி

நன்றி ஹேமா, நான் நலமே!

இனிமேல் ஒழுங்கா வரேன் பாலா!! :)

நன்றி ஞானசேகரன் நண்பரே

நன்றி யாழினி!

வால்பையன் said...

அருமை தல!

என் ஓட்டை சேர்த்துட்டேன்!

அகநாழிகை said...

ரொம்ப நாளைக்கப்பறம் வந்தாலும், சிந்திக்க வைக்கும் ஒரு நல்ல கவிதை.
வாழ்த்துக்கள் ஷீ-நிசி.

- பொன்.வாசுதேவன்

Ramani said...

மிகக் குறைந்த வரிகளில்
மிகச் சிறந்த கவிதை
வாழ்த்துக்களுடன்...

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

உரைக்கும் உண்மைதான் சொன்னவிதம் எதார்த்தம் சிறப்பு . பகிர்வுக்கு நன்றி