Saturday, 1 August 2009

கடவுளுக்கு ஒரு கேள்வி?!






தாலி கயிறொன்று
அவள் கழுத்தில் ஏறாததால்;
தாம்பு கயிறொன்று,
அவள் கழுத்தில் ஏறியது.

கடிதமொன்று அவளருகில்
படபடத்தது,

அதில்…..

கடவுளுக்கு ஒரு கேள்வி!

“கடைசி இரவை
கொடுத்தாயே இறைவா….
எனக்கு முதல் இரவை கொடுத்தாயா?! ”

___________________________________


கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? - ஆம் / இல்லை

22 comments:

அபுஅஃப்ஸர் said...

நச் கேள்வி!!

வரதட்சனை கொடுக்கமுடியாமல் திணறும் ஆயிரமாயிரம் ஏழைக்குமரிகளின் ஒற்றுமொத்த கேள்வி...

வாழ்த்துக்கள் ஷீநிசி

ஷ‌ஃபிக்ஸ் said...

படிப்பவர் அனைவரும் சிந்திக்க வேண்டிய கேள்வி!!

பாலா said...

சுரீர்

குடந்தை அன்புமணி said...

நச்சுன்னு முகத்தில் அறைந்தார்ப்போல் இருக்கிறது.
(அடிக்கடி எழுதுங்க.)

சொல்லரசன் said...

//குடந்தை அன்புமணி said...
நச்சுன்னு முகத்தில் அறைந்தார்ப்போல் இருக்கிறது.
(அடிக்கடி எழுதுங்க)//

ஆமாங்க இப்படி அடிக்கற மாதிரி அடிக்கடி எழுதுங்கோ

துபாய் ராஜா said...

வலிக்கும் வரிகள்.

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

நாணல் said...

:(((

sakthi said...

தாலி கயிரொன்று
அவள் கழுத்தில் ஏறாததால்;
தாம்பு கயிறொன்று,
அவள் கழுத்தில் ஏறியது.

என்ன செய்ய அது தான் பெண்களின் தலையெழுத்து

Suresh said...

செம்ம கவிதைங்க ... அந்த வார்த்தை சூளீர் என்று அடிச்சி போட்டது உண்மை ...
படமும் அந்த கவிதைக்கு உகந்து இருந்தது

ஹேமா said...

ஷீ-நிசி சுகமா? நிறைய நாட்களாகக் காணவில்லை.அருமையான சமூகச் சிந்தனையோடு ஒரு கவிதை.
சிந்திக்கச் சிலபேராவது இருப்பார்களா!

ஆ.ஞானசேகரன் said...

நச்...நச்... இதைதான் எதிர்ப்பார்தேன் கவிதைகளில்..

மிக நன்று

ஷீ-நிசி said...

நன்றி அபுஅஃப்ஸர்

நன்றி ஷஃபிக்ஸ்

நன்றி பாலா

நன்றி கு.அன்புமணி

நன்றி சொல்லரசன்

நன்றி துபாய்ராஜா

நன்றி நாணல்

நன்றி சக்தி

நன்றி சுரேஷ்

நன்றி ஹேமா

நன்றி ஞானசேகரன்

நட்புடன் ஜமால் said...

முதிர்கன்னி ...

கார்த்திகைப் பாண்டியன் said...

கலக்கிட்ட நண்பா.. ஏம்ப்பா.. உங்களை மாதிரி நல்ல கவிஞர்கள் அடிக்கடி எழுதக் கூடாதா?

ஷீ-நிசி said...

நன்றி ஜமால்...

நன்றி கார்த்தி!

வெ.இராதாகிருஷ்ணன் said...

அற்புத கவிஞரின் அற்புத கவிதை இது. பல பெண்களின் நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது.

thiru said...

Dear Friend!

Though your lines are heart rendering, One question still lingers, that

"is GOD responsible for the Dowry issue?" GOD did not create formalities of the marriage as well as the Dowry phenomenon. It's all man made...I felt that the realistic poem is bent on blaming the GOD for not providing the wealth for Wedding. Could have pointed out the society for not coming out of Dowry....

ஷீ-நிசி said...

நன்றி ராதாகிருஷ்ணன்.

நன்றி திரு... உங்கள் ஆதங்கம் புரிகிறது!!!

அன்புடன் அருணா said...

:(

Adlak's tiny world said...

Hm... worthy question to God... can feel the sharpness in each of yr lines sheenisi. me too started posting few of my lines in muthamil mandram.

yrs are nice poems.. good job sheenisi.

சக்தி த வேல்..! said...

பளார்..!

ராஜவம்சம் said...

ஒரே கேள்வி பலரின் வாழ்க்கை.