Saturday, 18 July 2009

அந்தி வானம்...




வானில் ஒரு கடல்சீற்றம்!
அங்குமிங்கும் சிதறியபடி,
எங்குமெங்கும் மேக அலைகள்...

அலைகின்ற ஒவ்வொரு
மேகலையும் சங்கமித்ததில்,
விலையற்ற ஓவியங்கள்,
ஒவ்வொன்றாய் கருவாகின!

உருவான கருயாவும்
கலைந்தபடியே இருந்தன!

கலைந்தாலும்... மேகங்கள்
அலைந்தபடியே இருந்தன!

ஏனிந்த சீற்றம்?!
ஏனிந்த மாற்றம்?!

அந்தரத்திலிருந்த கதிரவன்,
கடல் கன்னியின்,
அந்தப்புரத்தில் வீழ்ந்தானாம்!

மேகலையின் உடலெல்லாம்
கோபலைகளாய் மாறியது!

அந்த வானமானது..
அந்தி வானமானது!

___________________________________


கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? - ஆம் / இல்லை

12 comments:

"அகநாழிகை" said...

ஷி-நிசி,
கவிதை நன்றாக இருக்கிறது.
தொடர்ந்து இடைவெளி விடாமல் எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

பாலா said...

nalla irukku boss

குடந்தை அன்புமணி said...

நல்ல கற்பனை ஷி-நிசி. அடிக்கடி எழுதுங்கள். வாழ்த்துகள்.

சொல்லரசன் said...

கவிதை நல்லயிருக்குங்கோ,

//உருவான கருயாவும்
கலைந்தபடியே இருந்தன!//

இத‌னால்தான் அடிக்க‌டி க‌விதை எழுத‌முடிய‌வில்லையோ!!!!!!!

அபுஅஃப்ஸர் said...

Good Post thala
rasithen

நட்புடன் ஜமால் said...

ரொம்ப நாள் ஆச்சி போல

கவிதை நலம் நண்பரே!

ஆ.ஞானசேகரன் said...

//அந்த வானமானது..
அந்தி வானமானது!//



அருமையா இருக்கு நண்பா..

ஏன் இந்த நீண்ட இடைவெளி...?

சப்ராஸ் அபூ பக்கர் said...

///அலைகின்ற ஒவ்வொரு
மேகலையும் சங்கமித்ததில்,
விலையற்ற ஓவியங்கள்,
ஒவ்வொன்றாய் கருவாகின! ///

ரசித்த வரிகள் ....

அருமையாக இருந்தது.... தொடருங்கள்.....

reena said...

என்ன அழகான கற்பனை ஷு நிசி... நல்ல கவிதை தொடர்ந்து எழுதுங்கள்

Vidhoosh said...

http://vidhoosh.blogspot.com/2009/07/blog-post_3187.html

please visit here. There is a small gift for you:)

-vidhya

ஷீ-நிசி said...

நன்றி நண்பர்களே!

ஹேமா said...

//அந்தரத்திலிருந்த கதிரவன்,
கடல் கன்னியின்,
அந்தப்புரத்தில் வீழ்ந்தானாம்!//

ஷீ-நிசி,கற்பனை அற்புதம்.