Monday, 6 July 2009

தமிழ் செய்திகள் - உங்கள் அலைபேசியில்

நண்பர்களே!

அரிது அரிது மொபைலில் தமிழ் எழுத்தினை காண்பது அரிது. அதனினும் அரிது அந்த எழுத்துக்கள் ஒன்றின்மீது ஒன்று ஏறாமல் காட்சியளிப்பது!!!!

எதையோ தேடும்போது எதுவோ கிடைக்கும்னு சொல்வாங்க.. அப்படித்தான் இந்த மொபைல் மென்பொருள் ஒன்று எனக்கு இணையத்தில் கிடைத்தது. அடடா என்று போடவைக்கும் ரகம் இந்த மென்பொருள்... இலவசம் இது என்பதுதான் ஹைலைட்....

அவரவர் அலைபேசிக்கு ஏற்றவகையில் டவுண்லோட் செய்ய வழிசெய்திருக்கிறார்கள்.

பதிவுசெய்யனும் அப்படி இப்படின்னு தொந்தரவுலாம் இல்லாம்.. இந்தா வாங்கிக்கோ என்றதுபோல கொடுத்திருக்கிறார்கள்.

இது என்ன சிறப்பம்சம் என்றால் எந்தவித தமிழ் எழுத்துருவும் நம் மொபைலில் தரவிறக்கம் செய்யாமலே தினமலர் செய்திகளை இதில் வாசிக்கமுடிகிறது.

சரி நான் இதைப்பற்றி சொல்றதை விட நீங்க இதைப்பற்றி எனக்கு சொல்லுங்க....


http://www.newshunt.com

என்னுடைய மொபைல் ஸ்கிரீன்ஷாட்ஸ்







14 comments:

அபுஅஃப்ஸர் said...

நல்ல தகவல் பகிர்வு

ஒரு சில மொபைல் சப்போர்ட் பண்ணலே

என்னோடது Sony Ericson W960i

ஆ.ஞானசேகரன் said...

நல்ல செய்தி பயன்படுத்தி பார்க்கின்றேன்

ஆ.ஞானசேகரன் said...

மற்ற தமிழ் தளங்களை பார்க்க முடியுமா?

ஷீ-நிசி said...

மற்ற தமிழ் தளங்களை பார்க்க மொபைல் சிஸ்டம் எழுத்துருவை மாற்றவேண்டும்.. அப்படி மாற்றினாலும் தமிழ் எழுத்துக்கள் ஒன்றின் மீது ஒன்று ஏறி இருப்பதுபோல் காட்சியளிக்கிறது...

உதாரணம்.. கி, சி, மி போன்ற கொக்கிகளை கொண்ட எழுத்துக்களை அது இரண்டு எழுத்துருக்களாக எடுத்துக்கொள்கிறது. அதை எப்படி தீர்ப்பது என்று நெட்டில் மேய்ந்துக்கொண்டிருக்கிறேன். விடை கிடைத்தால் விரைந்து வருகிறேன்!

நட்புடன் ஜமால் said...

ஆஹா! நல்ல தகவல்

மிக்க நன்றி நண்பரே பகிர்தலுக்கு

திகழ்மிளிர் said...

அருமையான தகவல்

புதுப்பாலம் said...

இன்னொரு மென்பொருள் இதை பயன் படுத்தி பாருங்கள். தமிழ் நாளிதழ், தமிழ் வலைப்பக்கம், வலைப்பூ, தமிழ் ஈமெயில் அனைத்தையும் கைப்பேசியில் அழகாக காண முடிகிறது.

மென்பொருள் பெயர்: skyfire

சுட்டி: www.skyfire.com

அன்புடன்
இஸ்மாயில் கனி

சொல்லரசன் said...

தகவலுக்கு நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

பகிர்தலுக்கு நன்றி :-))))))

குடந்தை அன்புமணி said...

தமிழ் இனி மெல்ல மெல்ல மேலெழும்பும்... தகவலுக்கு நன்றி தோழரே.

புதுப்பாலம் said...

"Opera Mini" mobile browser.

இந்த செயலி உதவியுடன் கூட கைப்பேசியில் தமிழ் தளங்களை, நாளிதழ் காண முடியும்.

மொபைலில் தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை

1. உங்கள் மொபைலில் GPRS வசதியை உயிர்ப்பித்து கொண்டு, மொபைல் மூலம் http://www.opera.com/mini/ இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினி தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.

2. மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.
3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்

பாலா said...

athu enna eppa vachum vareenga adaikkadi vaanga

bossssssssssss

ஷீ-நிசி said...

புதுப்பாலம் அருமையப்பா....

நன்றி நன்றி! சூப்பர்ப்

ஊர்சுற்றி said...

ஹிஹி... நம்மளோட மொபைல்லாம் ரொம்ப பேசிக். இங்க இதெல்லாம் நடக்காது...!!!

இருந்தாலும் இப்படி ஒண்ணு இருக்கறத தெரிஞ்சிகிட்டேனே. நன்றி. :)