Friday, 22 May 2009

நடைபாதை மனிதர்கள்பூமிக்குள்ளே இயங்கிடும்
இது ஒரு தனி உலகம்!

இப்படியும் வாழ முடியுமென்று
வாழ்வியல் முறையையே
மாற்றிக் காட்டியவர்கள்!

இன்னமும் வறுமையின்
'மை' யிலேயே நின்றுக் கொண்டிருக்கும்
பூமியின் கடைசி செல்வந்தர்கள்!

உங்களுக்கெல்லாம் இது வீதி!
அவர்களுக்கோ இது வீடு!

சில பருவக்காலங்களில்
மழை பொய்த்துப்போவதும்
இவர்கள் மேலுள்ள
கருணையில்தானோ!?

உறக்கத்தைக் கூட
கிறக்கத்தோடு பார்த்திடும்
சில ஓநாய்கள்!

அவசரமில்லாத உறவுகளும் கூட
அமாவாசையின் புண்ணியத்தினால்!

தவறாமல் காணலாம்
இவைகளிரண்டும்!

ஒன்று
கண்ணீர் அஞ்சலி பலகை!
மற்றொன்று
ரசிகர் மன்ற பலகை!

சாதம் விற்று
சாதம் உண்ணும் -மிகச்
சாதாரண ஜீவன்கள்!

பல கல்யாணங்கள்
காதலில் நடந்தேறிடும -சில
பக்கத்து நடைபாதையினரோடு
மோதலில் நடந்தேறிடும்!

இவர்களின் அதிகபட்ச கனவே
அடுத்த வேளை சாப்பாடுதான்!

வரிஏய்ப்பு, நிலமோசடி
என்றெல்லாம்
பத்திரிக்கையில் அடிபடாதவர்கள்!

அவ்வப்போது லாரி ஏறியதென்று
ப(டு)த்திருக்கையில் அடிபட்டவர்கள்!!

1000 சதுர அடியிலும்
திருப்தியடையாதவனே!

இங்கே கொஞ்சம் பார்!

10 சதுர அடியில்
ஒரு பட்டாளமே இயங்குகிறது!

வாழ்க்கையில் சலிப்புற்றவர்களே!
வாழும் பாடம் இவர்கள்!
வாழக் கற்றுக்கொள்வோம்!

___________________________________


கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? - ஆம் / இல்லை

கவிதை படித்துமுடித்தீர்கள். இதோ இந்த கணத்தில் உங்கள் மனதில் ஒரு விமர்சகன் வந்தமர்ந்திருப்பான். அவன் என்ன சொல்கிறானோ அதை அப்படியே உங்கள் விமர்சனமாய் பதியுங்கள். இங்கே

31 comments:

நட்புடன் ஜமால் said...

\\அவசரமில்லாத உறவுகளும் கூட
அமாவாசையின் புண்ணியத்தினால்!\\

மிக அருமையா சொன்னீங்க

நட்புடன் ஜமால் said...

\\அவ்வப்போது லாரி ஏறியதென்று
ப(டு)த்திருக்கையில் அடிபட்டவர்கள்!!
\\

அற்புதமான வெளிப்பாடு

நட்புடன் ஜமால் said...

\\வாழ்க்கையில் சலிப்புற்றவர்களே!
வாழும் பாடம் இவர்கள்!
வாழக் கற்றுக்கொள்வோம்!
\\

தாக்கம் சொல்லி ஊக்கம்

கார்த்திகைப் பாண்டியன் said...

//சில பருவக்காலங்களில்
மழை பொய்த்துப்போவதும்
இவர்கள் மேலுள்ள
கருணையில்தானோ!?//

கடவுளின் கருணை அது என்றால் அவர்கள் தெருக்களில் இருப்பது ஏன்? பல கேள்விகளை எழுப்புகிறது கவிதை.. தெருவாசிகளின் நிலையை வலியோடு சொல்லி இருக்கீங்க ஷீ.. அப்பப்போ வலைப்பக்கம் வாங்கப்பா..

புதியவன் said...

//சில பருவக்காலங்களில்
மழை பொய்த்துப்போவதும்
இவர்கள் மேலுள்ள
கருணையில்தானோ!?//

//இவர்களின் அதிகபட்ச கனவே
அடுத்த வேளை சாப்பாடுதான்!//

//அவ்வப்போது லாரி ஏறியதென்று
ப(டு)த்திருக்கையில் அடிபட்டவர்கள்!!//

நடைபாதை மனிதர்களின் யதார்த்தம் சொல்லும்
யதார்த்தமான வரிகள் ஷீ-நிசி...

"அகநாழிகை" said...

//ஒன்று
கண்ணீர் அஞ்சலி பலகை!
மற்றொன்று
ரசிகர் மன்ற பலகை!//

இயல்பான வரிகள்.
நடைபாதை வாழ்க்கை குறித்தான காட்சியை இதைவிட எளிமையாய் கூற இயலாது.

வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்.

திகழ்மிளிர் said...

அருமை

ஆதவா said...

ரொம்ப நாளைக்கு அப்பறம்..... வெல்கம் ஷீ!

கவிதை மிக அழகு... கடைசியா முடிக்கிறத மட்டும் மறுபரிசீலனை செய்யலாம்.. வழக்கமான உங்களின் வார்த்தையாடல்!!!!

தொடர்ந்து எழுதுங்க... டச் விட்டுப்போயிடாதீங்க்.

ஆதவா said...

கார்த்திகைப் பாண்டியன்...

கடவுள் கருணையிருப்பதால்தான் மழை பொய்த்து அவர்கள் வாழ வழிவகுக்கிறார் என்று ஷீ சொல்லுகிறார்.....

சரிதானே ஷீ/?

ஆதவா said...

கார்த்திகைப் பாண்டியன்...

கடவுள் கருணையிருப்பதால்தான் மழை பொய்த்து அவர்கள் வாழ வழிவகுக்கிறார் என்று ஷீ சொல்லுகிறார்.....

சரிதானே ஷீ/?

ஆ.ஞானசேகரன் said...

//அவசரமில்லாத உறவுகளும் கூட
அமாவாசையின் புண்ணியத்தினால்!//

என்னபா இன்றைய தூக்கத்தை கலைத்துவிட்டாய்
அருமையா இருக்கு நண்பா

ஆ.முத்துராமலிங்கம் said...

எளிய வரிகள், அர்த்தப்படுகின்றது.
நல்ல கவிதை.

குடந்தை அன்புமணி said...

நடைபாதையில் நாட்களை கழிக்கும் மனிதர்களின் வாழ்க்கையை நயமான வரிகளில் எடுத்துரைத்து அதிலும் ஒரு நீதியை சொல்கிறது தங்கள் கவிதை! தாம்பரத்தில் 'சென்னைக்கு வெளியே' என்ற இலக்கிய அமைப்பு தொடங்கப்பட உள்ளது. ஆர்வமிருப்பின் தொடர்பு கொள்க... என் தொலைபேசி எண்: 9840992769

பாலா said...

nalla paarvai aanal valikkum unmai

reena said...

நல்ல கவிதை... மனதை பாதித்தது

sakthi said...

உறக்கத்தைக் கூட
கிறக்கத்தோடு பார்த்திடும்
சில ஓநாய்கள்!

அவசரமில்லாத உறவுகளும் கூட
அமாவாசையின் புண்ணியத்தினால்!

valikuthu pa

sakthi said...

சாதம் விற்று
சாதம் உண்ணும் -மிகச்
சாதாரண ஜீவன்கள்!

பல கல்யாணங்கள்
காதலில் நடந்தேறிடும -சில
பக்கத்து நடைபாதையினரோடு
மோதலில் நடந்தேறிடும்!

yatharthamana kavithai shi

valthukkal

குமரை நிலாவன் said...

பல கல்யாணங்கள்
காதலில் நடந்தேறிடும -சில
பக்கத்து நடைபாதையினரோடு
மோதலில் நடந்தேறிடும்!

அவ்வப்போது லாரி ஏறியதென்று
ப(டு)த்திருக்கையில் அடிபட்டவர்கள்!!

யதார்த்தமான வரிகள்

சாதம் விற்று
சாதம் உண்ணும் -மிகச்
சாதாரண ஜீவன்கள்!

வலிக்கும் உண்மை

சொல்லரசன் said...

நடைபாதை வாசிகளின் வாழ்க்கையை யதார்த்த‌மாக சொல்லியிருக்கிங்க.

//வாழ்க்கையில் சலிப்புற்றவர்களே!
வாழும் பாடம் இவர்கள்!
வாழக் கற்றுக்கொள்வோம்!//

அருமையான வரிகள் வாழ்த்துகள்

ஷீ-நிசி said...

நன்றி உறவுகளே!

mythees said...

நல்ல கவிதை...

Deepa said...

அற்புதமான பார்வை. மனிதநேயம் மிளிரும் சிந்தனை.
அருமை.

Gowripriya said...

அருமை... மனதை அசைத்துப் பார்க்கும் யதார்த்த வரிகள்..

சகாராவின் புன்னகை said...

என்ன நண்பரே "நான் கடவுள்" பாதிப்பா, இந்தமாதிரி விசித்திரங்களை செய்ய மனிதனால் மட்டும்தான் முடியும், விண்வெளிக்கு ஏறினாலும் இன்னொருவனை படுகுழியில் தள்ளிவிட்டு ஏறுவான்

சரி எப்படி சுகம்
ஜமாலை கேட்டதாகச் சொல்லுங்க

கிருஷ்ணா said...

அருமை நண்பா..!

யதார்த்தத்தை எளிமையாக..
உண்மைகளை உணர்ச்சியோடு..
வர்ணனையை வலிகளோடு..
எழுதி இருக்கிறீர்கள்..

நல்ல கவிதையை ரசித்த திருப்தி!

" உழவன் " " Uzhavan " said...

ஆம்.. இவர்கள் வாழ்வது நூறடி ரோட்டில் இருக்கும் பத்தடி வீட்டில். அருமை.

ஊர்சுற்றி said...

இயல்பான வரிகள்....

உங்கள் புகைப்படங்கள் தொடர்பாக ஒரு சந்தேகம்... நீங்களே இந்த படங்களை எடுக்கிறீர்களா?

ஷீ-நிசி said...

நன்றி நண்பர்களே!

@ஊர் சுற்றி!

இல்லை இல்லை.. எல்லாமே இணையத்திலிருந்து எடுத்தவைகள் தான்... பொருத்தமான படங்கள் கிடைக்கும்வரை எளிதில் திருப்தியடையமாட்டேன்.. அதுமட்டுமே இந்த புகைப்படங்களில் எனது பங்கு!

Evanjelin said...

\\சாதம் விற்று
சாதம் உண்ணும் -மிகச்
சாதாரண ஜீவன்கள்!\\

ippadeyum siru jeevangal vazugindradae........yen manadhai urukeyadu....!aam vizigalil sela neerthuligaludan soluginrean !arpudam........

Neelakantan said...

நண்பரே, உங்கள் எல்லா கவிதைகளுமே அருமை. குறிப்பாக இந்த கவிதை , ஏழ்மையிலும் ஏழ்மையாக நம்மிடையே வாழும் மக்களை உமது சிறப்பு வார்த்தைகளால் "படம்" பிடித்து காட்டி உள்ளீர்கள்., .மனதை தொட்ட கவிதை. மனம் நிறைந்த பாராட்டுக்கள் அன்பரே . தொடரட்டும் உமது பணி.
நல வாழ்த்துக்களுடன் நீலகண்டன் சீ எஸ். பாலக்காடு கேரளா

She-nisi said...

நன்றி இவாஞ்சலின்,மற்றும் நீலகண்டன்