Sunday, 10 May 2009

பிஞ்சு மேகம்!




வானுக்கும், பூமிக்குமான
வானுயர்ந்த பாதையில்....

வெள்ளை மேகமொன்று,
பிள்ளை வடிவில் இறங்கியது!
பூமியின் எல்லையில்!

எந்த தேவதைக்கு
பிறந்த தேவதையோ?!

தேவதைகள்,
வானில்தானே இருக்கும்!!

பூமிக்கு இறங்கியதால்,
இந்த பூமியும் வானமாகியது!!
கருப்பு வெள்ளை வர்ணமாகியது!

தேவதை பிரசவித்த..
தேவ பிள்ளையின்
பிம்பத்தை பிரசவித்ததில்..

நீரலைகளெல்லாம்,
தேனலைகளாய் ஆனது!

பிஞ்சு மேகத்தின்
பஞ்சு பாதம் பட்டதும்...

நீரிலிருந்த செவ்விதழ்களெல்லாம்,
ஒவ்வொன்றாய் மேலேறி,
செந்நிறப் பூக்ககளாகின!
மேக குழந்தையின்,
பொன்னிறப் பூக்கரங்களிலே!

வெட்கமென்ன?!
வெள்ளுடை தரித்த,
வெண்பிஞ்சுமேகமே!

கொஞ்சம் நிமிர்ந்து பார்..
உன் பார்வையில்,
பஞ்சாக மாறட்டும் -எங்களின்
நஞ்சான மனங்கள்!

___________________________________


கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? - ஆம் / இல்லை

கவிதை படித்துமுடித்தீர்கள். இதோ இந்த கணத்தில் உங்கள் மனதில் ஒரு விமர்சகன் வந்தமர்ந்திருப்பான். அவன் என்ன சொல்கிறானோ அதை அப்படியே உங்கள் விமர்சனமாய் பதியுங்கள். இங்கே

21 comments:

sakthi said...

வானுக்கும், பூமிக்குமான
வானுயர்ந்த பாதையில்....

வெள்ளை மேகமொன்று,
பிள்ளை வடிவில் இறங்கியது!
பூமியின் எல்லையில்!


alagana arampam

sakthi said...

நீரிலிருந்த செவ்விதழ்களெல்லாம்,
ஒவ்வொன்றாய் மேலேறி,
செந்நிறப் பூக்ககளாகின!
மேக குழந்தையின்,
பொன்னிறப் பூக்கரங்களிலே!

சொல்ல வார்த்தையில்லை

gayathri said...

mmmmmmm ivalavu azaka eluthuna ennatha solla nalla iruku pa

த.ஜீவராஜ் said...

////தேவதைகள்,
வானில்தானே இருக்கும்!!

பூமிக்கு இறங்கியதால்,
இந்த பூமியும் வானமாகியது!! ///


அரு்மையாக இருக்கிறது..
வாழ்த்துக்கள் நண்பரே

வழிப்போக்கன் said...

அருமை...
நல்ல கவிதை..

அபுஅஃப்ஸர் said...

//கொஞ்சம் நிமிர்ந்து பார்..
உன் பார்வையில்,
பஞ்சாக மாறட்டும் -எங்களின்
நஞ்சான மனங்கள்!
///

நஞ்சான மனங்களில் மாற்றம் வேண்டி பிஞ்சுக்கரங்களின் கெஞ்சல்கள்

அழகான படத்துடன் ஒரு கவிதை தொகுப்பு

வாழ்த்துக்கள் தல நல்லாயிருக்கு அசால்ட் பண்ணுங்க‌

முனைவர்.இரா.குணசீலன் said...

/கொஞ்சம் நிமிர்ந்து பார்..
உன் பார்வையில்,
பஞ்சாக மாறட்டும் -எங்களின்
நஞ்சான மனங்கள்!/

அரு்மையாக இருக்கிறது

தாரணி பிரியா said...

அருமையா இருக்குங்க. எல்லா வரியும் அருமை. வாழ்த்துக்கள் நண்பரே

ஆ.முத்துராமலிங்கம் said...

நல்லா இருக்கு கவிதை,

"அகநாழிகை" said...

வாங்க சார், எந்த ஊர்ல இருக்கீங்க...
அடிக்கடி வந்துபோங்க..


//நீரிலிருந்த செவ்விதழ்களெல்லாம்,
ஒவ்வொன்றாய் மேலேறி,
செந்நிறப் பூக்ககளாகின! //

இந்த வரிகள் மிகவும் பிடித்திருந்தது.
வாழ்த்துக்கள்.

வேத்தியன் said...

நீரிலிருந்த செவ்விதழ்களெல்லாம்,
ஒவ்வொன்றாய் மேலேறி,
செந்நிறப் பூக்ககளாகின!
மேக குழந்தையின்,
பொன்னிறப் பூக்கரங்களிலே!
//

ரசனை மிகுந்த வரிகள்...
அருமை...

வேத்தியன் said...

வழமை போலவே கலக்கல்...

mythees said...

http://shenisi.blogspot.com/

கவிதைக் காதலன்.....

இது உங்க blog-ஆ

mythees said...

நான் ஒரு வாரம் முன்னாடியே படித்தச்சு கவிதை நல்ல இருக்கு..........

கார்த்திகைப் பாண்டியன் said...

கவிதை நல்லா இருக்குண்ணே.. எங்க சத்தத்தையே காணோம்? ஐயா படுபயங்கர பிசியா?

புதியவன் said...

//கொஞ்சம் நிமிர்ந்து பார்..
உன் பார்வையில்,
பஞ்சாக மாறட்டும் -எங்களின்
நஞ்சான மனங்கள்!//

கவிதை முழுதும் அழகு...
முடித்திருக்கும் விதம் வெகு அழகு ஷீ-நிசி...

குமரை நிலாவன் said...

கொஞ்சம் நிமிர்ந்து பார்..
உன் பார்வையில்,
பஞ்சாக மாறட்டும் -எங்களின்
நஞ்சான மனங்கள்!


கவிதை அருமை அண்ணா

கவின் said...

அழகு கவிதை

reena said...

மிக அழகாக இருந்தன கவிதையும் படமும்... எங்கே அந்த குட்டி தேவதை நிமிர்கிறாளோ என்று அடிக்கடி பார்த்து கொண்டே இருந்தேன்

ஆ.ஞானசேகரன் said...

//கொஞ்சம் நிமிர்ந்து பார்..
உன் பார்வையில்,
பஞ்சாக மாறட்டும் -எங்களின்
நஞ்சான மனங்கள்!//

நன்று

ஷீ-நிசி said...

நன்றி நண்பர்களே!