Wednesday, 15 April 2009

மின்சார (ரயில்) தேவதைமின்சார இரயிலில்
உட்கார்ந்துக் கொண்டிருந்தது தேவதை!
இறகுகளோடு அல்ல...
இரு பை நிறைய உடைகளோடு!!

பரிச்சயமான முகமென்று
மூளை எண்ணியது!

பேசச் சொல்லி,
மனசு உறுத்தியது!

திட்டிவிட்டால்...
பயம் உறுத்தியது!

பரவாயில்லை,
தேவதைதானே!

பயத்தின் உறுத்தலை விட,
மனதின் உறுத்தல்
அதிக நாள் நீடிக்கும் என்பதால்,
தேவதையிடம் பேசிவிட்டேன்...

நீங்க அந்த ஸ்கூல்லதான படிச்சீங்க!!
அதிர்ஷ்டம்!
ஆமாம் என்றாள்;

நானும் அந்த ஸ்கூல்ல......
துரதிர்ஷ்டம்!
அது பெண்கள் பயிலும் பள்ளி!

எப்படியோ சமாளித்துவிட்டேன்!!

ஏதேதோ பேசினோம்,
அவ்வப்போது சிரித்தோம்!

பிரியும்போது,
கேட்டதனால் கூறினாள்;
அவளது அலுவலக எண்னை!

மறு நாள்..

தேவதையை தொடர்பு
கொள்ளும் எண்களை
அழுத்தினேன்;

மிகவும் பயத்துடன்!!

என் மூச்சுக்காற்றின் வேகம்
எனக்கே வியப்பானது!

எதிர்முனையில் ஆண்குரல்!

நான்தான் எடுப்பேன் என்று
அவள் கூறியிருந்ததால்,

ஆண்குரலிடம் பேச
ஆர்வமில்லாமல்
தொடர்பை துண்டித்தேன்...

அடுத்து வந்த,
இரு தினங்களும் விடுமுறை!

அந்த இரண்டு தினங்கள்
என் வாழ்வின் வறண்ட தினங்கள்;

பறிகொடுத்தவனின் பரிதவிப்பு
தொலைத்தவனின் அழுகை,
இவர்களின் உணர்வுதான்
எனக்கும் ஏற்பட்டது!

விடுமுறைகளின் மீதே
கசப்பு உண்டானது!

வாரத்தின் முதல் நாள்!

தேவதையை தொடர்பு
கொள்ளும் எண்களை,
இம்முறை கூடுதல்
பயத்துடன் அழுத்தினேன்;

கூடவே பதற்றத்துடன்...

மீட்டினால்தானே வரும்
வீணையின் ஒலி; -இங்கே
தொலைபேசியில் எண்களை
அழுத்தினாலே வருகிறது!

ஆம்! தேவதையின் குரல்!!

பேசினோம்!
சிரித்தோம்!
பழகினோம்!

உம்! அப்புறம்! என்ற
வார்த்தைகள் மட்டும்
கண்டுபிடிக்கபடாமலிருந்தால்..

எங்கள் உரையாடல்களின்
நீளங்கள் குறைந்து போயிருக்கும்!

இன்றும்,
பல தொலைபேசி காதல்கள்
துளிர்த்துக்கொண்டிருக்காது!!

நாட்கள் கடந்தன!

வெளியில்
சந்திக்க மட்டும் மறுத்தாள்!

மீண்டும் மீண்டும்
முயற்சித்தேன்!
மீண்டும் மீண்டும்
மறுத்தாள்!

மறுக்க ஒரு காலம்
உண்டென்றால் -இணங்க
ஒரு காலம் உண்டல்லவா!

இந்த இயற்கை விதிதான்
இன்றும் எனக்குள்,
நம்பிக்கை விதைகளை
தூவிக்கொண்டிருக்கிறது!

தேவதை இணங்கினாள்!
வெளியில் வர சம்மதித்தாள்!

கூட்டம் அதிகமாக
சேரும் இடத்தை
தேர்வு செய்தோம்!

என் சந்தோஷத்தின் பொழுதுகள்!
அவளை சந்தித்த பொழுதுகள்!

அந்த இடங்கள் எல்லாம்
அன்று புனிதப்பட்டன!
தேவதையின் பாதங்கள்
அங்கே பயணப்பட்டதால்!!

அன்றே என் காதலை
அவளிடம் சொல்ல
முயற்சித்தேன்;

என் பேச்சும், செயலும்
என் காதலை
அவளுக்கு வெளிப்படுத்தின!

சமயமும், காலமும்
வாய்க்காதலால்,
என் காதலை வெளிப்படுத்தவில்லை..

அவள் உறவுகளின் நிகழ்வுகளை
என்னிடம் கூறினாள்!
என் உறவுகளின் நிகழ்வுகளை
அவளிடம் கூறினேன்!

எல்லா நிஜங்களையும்
பரிமாறிக்கொண்டோம்!
காதலைத் தவிர..

என் நிலை தெரிந்தும்
தன் நிலை காட்டாமல்,
தன்னிலை மறைத்தாள்!

ஒரு மெல்லிய மாலைப் பொழுதில்,
காதல் வலி உண்டாகி,
என் காதலை பெற்றெடுத்தேன்!

--

--

--

தான் ஏற்கெனவே,
நிச்சயமானவள் என்றாள்!

துடிக்கின்ற இதயம்
அன்று கொஞ்சம் அழுதது!

அழுகின்ற கண்களோ
அன்று கொஞ்சம் துடித்தது!

உன் உறவுகளைப் பற்றி
பலமுறை கதைத்தாய்?! -இதை
மட்டும் ஏனடி என்னிடம் மறைத்தாய்?!

வலித்த இதயம்
எழுப்பிய கேள்வியை
உதடுகள் வெளியிடவில்லை!

நீயும் நிராகரிப்பில் சுகம் காணும்
சாதா(ரண) ரகப் பெண்தானா?!

இதயத்தை அமைதிபடுத்தினேன்.....

உன்னில் வசித்திட,
அவள் தகுதியானவளல்ல!

___________________________________


கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? - ஆம் / இல்லை

கவிதை படித்துமுடித்தீர்கள். இதோ இந்த கணத்தில் உங்கள் மனதில் ஒரு விமர்சகன் வந்தமர்ந்திருப்பான். அவன் என்ன சொல்கிறானோ அதை அப்படியே உங்கள் விமர்சனமாய் பதியுங்கள். இங்கே

52 comments:

புதியவன் said...

//பயத்தின் உறுத்தலை விட,
மனதின் உறுத்தல்
அதிக நாள் நீடிக்கும் என்பதால்,
தேவதையிடம் பேசிவிட்டேன்...//

அழகான உறுத்தல்...நல்லா இருக்கு ஷீ-நிசி...

புதியவன் said...

//நானும் அந்த ஸ்கூல்ல......
துரதிர்ஷ்டம்!
அது பெண்கள் பயிலும் பள்ளி!//

ஹா...ஹா...என்ன இதெல்லாம்...?

ஆ.ஞானசேகரன் said...

//உம்! அப்புறம்! என்ற
வார்த்தைகள் மட்டும்
கண்டுபிடிக்கபடாமலிருந்தால்..//

அய்யோ... என்னா அனுபவம்...

ஆ.ஞானசேகரன் said...

//தான் ஏற்கெனவே,
நிச்சயமானவள் என்றாள்!///

என்னபா நீயுமா?......

ஆ.ஞானசேகரன் said...

//உன்னில் வசித்திட,
அவள் தகுதியானவளல்ல!//

ஓஓஓஓ.... எல்லோரையும் போல் ... மனசே!!!!!

நட்புடன் ஜமால் said...

நீண்ட உரையாடலை கவிதை ஆக்கியிருக்கும் விதம் அருமை.

கவித்தனமான கதை படித்த திருப்தி

மிக அருமை ஷி-நிசி.

ஆ.ஞானசேகரன் said...

மொத்ததில் நல்ல காதல் கவிதை... பாராட்டுகள்...

புதியவன் said...

//இதயத்தை அமைதிபடுத்தினேன்.....

உன்னில் வசித்திட,
அவள் தகுதியானவளல்ல!//

சோகமான முடிவு என்றாலும் அருமை...

ஒரு கதையை அழகிய கவிதை வடிவில் கொடுத்திருப்பது வெகு அழகு ஷீ-நிசி...

//வீனையின் ஒலி;//

”வீணையின் ஒலி”

//நீயும் நிராகரிப்பில் சுகம் கானும்//

”நீயும் நிராகரிப்பில் சுகம் காணும்”

சொல்லரசன் said...

//பறிகொடுத்தவனின் பரிதவிப்பு
தொலைத்தவனின் அழுகை,
இவர்களின் உணர்வுதான்
எனக்கும் ஏற்பட்டது!//

உண‌ர்வுகளின் வெளிபாடா!
அற்புதம்.

ஆ.முத்துராமலிங்கம் said...

கவிதையில் சின்ன கதையே சொல்லிவிட்டீங்க. அழகான நடையில் இருந்தது.

/பயத்தின் உறுத்தலை விட,
மனதின் உறுத்தல்
அதிக நாள் நீடிக்கும் என்பதால்,
தேவதையிடம் பேசிவிட்டேன்...//

//உம்! அப்புறம்! என்ற
வார்த்தைகள் மட்டும்
கண்டுபிடிக்கபடாமலிருந்தால்..//

//ஒரு மெல்லிய மாலைப் பொழுதில்,
காதல் வலி உண்டாகி,
என் காதலை பெற்றெடுத்தேன்!//

//உன் உறவுகளைப் பற்றி
பலமுறை கதைத்தாய்?! -இதை
மட்டும் ஏனடி என்னிடம் மறைத்தாய்?!//

இவைகலெல்லாம் ரசிக்க வைத்தது.

//இன்றும்,
பல தொலைபேசி காதல்கள்
துளிர்த்துக்கொண்டிருக்காது!!//

உண்மை உண்மை

தமிழினி said...

உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

sakthi said...

பேசச் சொல்லி,
மனசு உறுத்தியது!

திட்டிவிட்டால்...
பயம் உறுத்தியது!

பரவாயில்லை,
தேவதைதானே!

athane devathai adithal kuda vangi kollalam thittinal vanga matoma enna

hahahaahha

sakthi said...

நீங்க அந்த ஸ்கூல்லதான படிச்சீங்க!!
அதிர்ஷ்டம்!
ஆமாம் என்றாள்;

நானும் அந்த ஸ்கூல்ல......
துரதிர்ஷ்டம்!
அது பெண்கள் பயிலும் பள்ளி!

ithui than super joke nu solratha

sakthi said...

alagana kavithai kavignare

konjam sogam jasthi

but really nice

valthukkal

Suresh said...

அருமையான நீண்ட( ரயில் போல் ) கவிதை ...

Suresh said...

//நானும் அந்த ஸ்கூல்ல......
துரதிர்ஷ்டம்!
அது பெண்கள் பயிலும் பள்ளி!

எப்படியோ சமாளித்துவிட்டேன்!!/

ஹ ஹா

Suresh said...

//உம்! அப்புறம்! என்ற
வார்த்தைகள் மட்டும்
கண்டுபிடிக்கபடாமலிருந்தால்..//

ஹ ஹ எல்லர்ரும் சொல்லும் வார்தைகள் கடலை போட உதவும் பிரம்மாஸ்திரம்

Suresh said...

//தேவதை இணங்கினாள்!
வெளியில் வர சம்மதித்தாள்!

கூட்டம் அதிகமாக
சேரும் இடத்தை
தேர்வு செய்தோம்!/

அருமை :-)

வழிப்போக்கன் said...

அந்த இரண்டு தினங்கள்
என் வாழ்வின் வறண்ட தினங்கள்;//

சூப்பர் சார்...

வழிப்போக்கன் said...

உம்! அப்புறம்! என்ற
வார்த்தைகள் மட்டும்
கண்டுபிடிக்கபடாமலிருந்தால்..

எங்கள் உரையாடல்களின்
நீளங்கள் குறைந்து போயிருக்கும்!

இன்றும்,
பல தொலைபேசி காதல்கள்
துளிர்த்துக்கொண்டிருக்காது!!//

அனுபவம் பேசுது...
:)))

Suresh said...

//என் சந்தோஷத்தின் பொழுதுகள்!
அவளை சந்தித்த பொழுதுகள்!//

உங்களுக்கு மட்டுமா

//அந்த இடங்கள் எல்லாம்
அன்று புனிதப்பட்டன!
தேவதையின் பாதங்கள்
அங்கே பயணப்பட்டதால்!!//

அது என்னவோ 100/100 உணமை

//அன்றே என் காதலை
அவளிடம் சொல்ல
முயற்சித்தேன்;

என் பேச்சும், செயலும்
என் காதலை
அவளுக்கு வெளிப்படுத்தின!

சமயமும், காலமும்
வாய்க்காதலால்,
என் காதலை வெளிப்படுத்தவில்லை..//

இப்படி சொல்லாமல் போன தருணங்களின் அனுபவம் அருமையாய் எல்லாருக்கும் உண்டு


//அவள் உறவுகளின் நிகழ்வுகளை
என்னிடம் கூறினாள்!
என் உறவுகளின் நிகழ்வுகளை
அவளிடம் கூறினேன்!

எல்லா நிஜங்களையும்
பரிமாறிக்கொண்டோம்!
காதலைத் தவிர..

என் நிலை தெரிந்தும்
தன் நிலை காட்டாமல்,
தன்னிலை மறைத்தாள்!

ஒரு மெல்லிய மாலைப் பொழுதில்,
காதல் வலி உண்டாகி,
என் காதலை பெற்றெடுத்தேன்!//

ஹ ஹா அருமை நான் கல்லுரி படிக்கும் போது ஆணுக்கு பிரசவலி வந்துள்ளாதா ஆம் கண்ணே எனக்கு .. என்று ஒரு மிக பெரிய கவிதையை எழுதியது இதே கரு அருமை ..

--

--

--

//தான் ஏற்கெனவே,
நிச்சயமானவள் என்றாள்!//

டைடானிக்கா ஹா ஹா

//துடிக்கின்ற இதயம்
அன்று கொஞ்சம் அழுதது!

அழுகின்ற கண்களோ
அன்று கொஞ்சம் துடித்தது!//

:-) சூப்பர்

உன் உறவுகளைப் பற்றி
பலமுறை கதைத்தாய்?! -இதை
மட்டும் ஏனடி என்னிடம் மறைத்தாய்?!

வலித்த இதயம்
எழுப்பிய கேள்வியை
உதடுகள் வெளியிடவில்லை!//

இப்படி பேசாமா தான் பசங்க பல்ப் வாங்குறாங்க

//நீயும் நிராகரிப்பில் சுகம் காணும்
சாதா(ரண) ரகப் பெண்தானா?!

இதயத்தை அமைதிபடுத்தினேன்.....

உன்னில் வசித்திட,//


அல்வா வா .. ஹ்ம்ம் அப்புறம் எதுக்கு வெளியே வந்தாங்க.. ஹ்ம்ம் நல்ல அனுபவம் உண்டு ;)

கார்த்திகைப் பாண்டியன் said...

ஒரு நல்ல காதல் கதை படித்த திருப்தி ஷீ-நிசி.. யதார்த்தமான கவிதை.. கடைசியில் அவளும் சாதரமானவள் தானா? ஹ்ம்ம்ம்ம்.. எல்லாம் நம்ம தலையெழுத்து..

அபுஅஃப்ஸர் said...

காதல் கதை கவிதை கலந்த ஒரு எழுத்தோட்டம்

ரொம்ப நல்லாயிருக்கு தல‌

வாழ்த்துக்கள்

அபுஅஃப்ஸர் said...

//அந்த இரண்டு தினங்கள்
என் வாழ்வின் வறண்ட தினங்கள்;

பறிகொடுத்தவனின் பரிதவிப்பு
தொலைத்தவனின் அழுகை,
இவர்களின் உணர்வுதான்
எனக்கும் ஏற்பட்டது!

விடுமுறைகளின் மீதே
கசப்பு உண்டானது!
//

ஒரு தடவை பார்த்தவுடனேவா... ம்ம் இருக்கலாம்

அபுஅஃப்ஸர் said...

//உம்! அப்புறம்! என்ற
வார்த்தைகள் மட்டும்
கண்டுபிடிக்கபடாமலிருந்தால்..
//

ஹா ஹா ரசிச்சேன்.. இது எல்லோருக்கும் எல்லாவகையிலேயும் பொருந்தும்

வேத்தியன் said...

நண்பா...
சிறிது இடைவேளைக்கு பிறகு கவிதை...
:-)

வேத்தியன் said...

பிரியும்போது,
கேட்டதனால் கூறினாள்;
அவளது அலுவலக எண்னை!//

எனக்கு மெயில் அனுப்பிவிடுங்க...
:-)

வேத்தியன் said...

விடுமுறைகளின் மீதே
கசப்பு உண்டானது!//

அப்ப இது அது தான்...
:-)

வேத்தியன் said...

மறுக்க ஒரு காலம்
உண்டென்றால் -இணங்க
ஒரு காலம் உண்டல்லவா!//

ஆமா ஆமா...
:-)

வேத்தியன் said...

என் நிலை தெரிந்தும்
தன் நிலை காட்டாமல்,
தன்னிலை மறைத்தாள்!
//

Superb...

வேத்தியன் said...

துடிக்கின்ற இதயம்
அன்று கொஞ்சம் அழுதது!

அழுகின்ற கண்களோ
அன்று கொஞ்சம் துடித்தது!
//

இது கலக்கல் வரிகள்...

வேத்தியன் said...

ரொம்ப ரசிச்சேன்...
நன்றி...

ஹேமா said...

நிறையவே நேரம் எடுத்து, காதல் தேவதை பற்றி ஒரு நீண்ட கவிதை.

//பேசச்சொல்லி,
மனசு உறுத்தியது!

திட்டிவிட்டால்...
பயம் உறுத்தியது!

பரவாயில்லை,
தேவதைதானே!//

பயந்து பயந்துதான் காதல் எப்பவுமே தொடங்குமோ !
ஒரு குட்டிக் காதல்கதை.

Mohan said...

Good! Keep it up.......

ஸ்ரீமதி said...

//உம்! அப்புறம்! என்ற
வார்த்தைகள் மட்டும்
கண்டுபிடிக்கபடாமலிருந்தால்..

எங்கள் உரையாடல்களின்
நீளங்கள் குறைந்து போயிருக்கும்!//

அருமை :)))

Poornima Saravana kumar said...

பறிகொடுத்தவனின் பரிதவிப்பு
தொலைத்தவனின் அழுகை,
இவர்களின் உணர்வுதான்
எனக்கும் ஏற்பட்டது!//

தவிப்பின் ஒப்பீடு அருமை!

thevanmayam said...

நல்ல ஒரு கதையை அழகாக சொல்லி விட்டீர்கள்!!

ஷீ-நிசி said...

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்!

செ.பொ. கோபிநாத் said...

//உம்! அப்புறம்! என்ற
வார்த்தைகள் மட்டும்
கண்டுபிடிக்கபடாமலிருந்தால்..//

இந்த வரிகள் யதார்த்தத்தின் பதிவு. கவிதை அற்புதம்...

அன்புடன் அருணா said...

ம்ம்ம்...மின்சாரக் கனவு!!!
அன்புடன் அருணா

sayrabala said...

ஒரு மெல்லிய மாலைப் பொழுதில்,
காதல் வலி உண்டாகி,
என் காதலை பெற்றெடுத்தேன்

ayyo eppa mudiyala

enakum piranthudumonnu payama irukku

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துக்கள் - விகடன் குட் ப்ளாக்சில் நம் மூன்று பேரின் படைப்புகளும் ஒரே நேரத்தில்.. அகநாழிகை - சொர்க்கத்தின் வாசல்கள்.. ஷீ-நிசி - மின்சார (ரயில்) தேவதை.. கார்த்தி - சிகரெட் - தனக்குத் தானே கொள்ளி..

ஆகாய நதி said...

//
ஒரு மெல்லிய மாலைப் பொழுதில்,
காதல் வலி உண்டாகி,
என் காதலை பெற்றெடுத்தேன்!

//

ஆஹா அருமை!

//
துடிக்கின்ற இதயம்
அன்று கொஞ்சம் அழுதது!

அழுகின்ற கண்களோ
அன்று கொஞ்சம் துடித்தது!
//

ரொம்ப அருமை!

ஊர் சுற்றி said...

அருமைங்க... அதுவும் அந்த மூணு கோடுகளுக்கு முன்னாடி இருக்கறது... அதுதான் எனக்கு பிடிச்சிருக்கு. :)

ஷீ-நிசி said...

நன்றி அன்பு உறவுகளே!

ஜகதீஸ்வரன் said...

அடேங்கப்பா எவ்வளவு பெரிய கவிதை.....
பொறுமையா படிச்சுட்டு கருத்து சொல்லறேன்...

ஜகதீஸ்வரன் said...

தேவதைகளுடன் பயணம் செய்வதே அலாதியான அற்புதம்.கவிதையின் கதையில் தேவதைக்கு நிச்சியம் ஆகியிருப்பது கொஞ்சம் வருத்தம்.

படித்ததில் மனம் இலகுவாய் மாரி கண்ணீரை சிந்துகிறது....

ஷீ-நிசி said...

நன்றி ஜகதீஸ்

Navish Senthilkumar said...

தண்டையார்பேட்டையிலிருந்து தாம்பரம் போகின்ற ரயில் தானே அது?
யார் சார் அந்த பிகரு?
கலக்குங்க!
அருமையா இருக்கு...

ஆதவா said...

ஷீ!! இக்கவிதையின் ஆழம் எனக்குத் தெரியும். நிராகரிப்பின் வலியை வாழ்க்கையில் பலமுறை தாங்கிக் கொண்டுவிட்டதால் இப்பொழுதெல்லாம் நிராகரிப்புகள் வெறும் பாத முற்களாகவே இருந்துவிட்டு மறைந்துவிடுகின்றன...

கவிதைக்கு வந்தனம்...

ஷீ-நிசி said...

அதே! அதே! அதேதான் நாவிஷ்!

நன்றி ஆதவா!

Annapurni said...

அற்புதம் நிசி, நீண்ட நாட்களுக்கு பிறகு கவிதை படிக்கிறேன்..... காதல் என்பது பொது, ஆண்களும் ஏமாந்து போகிறார்கள் பெண்களும் ஏமாற்றப்படுகிறார்கள்......உங்களின் இந்த உறுத்தல்கள் சமம் தான். வரிகளின் அழகு மனதை கொள்ளை கொண்டுவிட்டது. வாழ்த்துக்கள். தொடருங்கள்.....