Tuesday, 7 April 2009

உடைந்த ஜாடி




பெண்ணில் உண்டானது
அடைந்து கிடக்கிறது!
மண்ணில் உண்டானது
உடைந்து கிடக்கிறது!

இமைகளில் தெரிகிறது,
தூக்கமும், ஏக்கமும்!
உடைகளில் தெரிகிறது,
சூழ்நிலையும், ஏழ்(மை)நிலையும்!

ஆசைகளும், கனவுகளும்
அழகிய ஜாடிபோல்!

உடைந்துவிட்டால்,
உற்றுநோக்காதீர்கள்!

இதோ! உறங்கபோகிறான் அவன்!
வேறொரு கனவுக்காய்!
வேறொரு ஆசைக்காய்!

___________________________________


கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? - ஆம் / இல்லை

கவிதை படித்துமுடித்தீர்கள். இதோ இந்த கணத்தில் உங்கள் மனதில் ஒரு விமர்சகன் வந்தமர்ந்திருப்பான். அவன் என்ன சொல்கிறானோ அதை அப்படியே உங்கள் விமர்சனமாய் பதியுங்கள். இங்கே

55 comments:

நட்புடன் ஜமால் said...

அருமை ஓவியம்

அழகு சேர்க்கின்றன வரிகள்

நட்புடன் ஜமால் said...

இமைகளில் தெரிகிறது,
தூக்கமும், ஏக்கமும்!
உடைகளில் தெரிகிறது,
சூழ்நிலையும், ஏழ்(மை)நிலையும்!\\


ஆசைகளும்
கனவுகளும்
உடைந்துவிட்டால்,
உற்றுநோக்காதீர்கள்!\\

அருமை.

thevanmayam said...

கவிதை நன்றாக உள்ளது!!

ஷீ-நிசி said...

நன்றி ஜமால்!

அதெப்படி ஜமால் பதிவு வெளியான வேகத்தில் உங்கள் விமர்சனமும்..

(ஏதோ ட்ரிக் இருக்கு போல!) எப்படின்ன்னு தனிமடலிடுங்க!! :)

ஷீ-நிசி said...

நன்றி தேவா!

thevanmayam said...

இமைகளில் தெரிகிறது,
தூக்கமும், ஏக்கமும்!
உடைகளில் தெரிகிறது,
சூழ்நிலையும், ஏழ்(மை)நிலையும்!\///

கவிதையில் சொல்லப்பட்டுள்ளது ஏழ்மை
இயல்பாய்!

சொல்லரசன் said...

//ஆசைகளும், கனவுகளும்
அழகிய ஜாடிபோல்!

உடைந்துவிட்டால்,
உற்றுநோக்காதீர்கள்! //

அருமையான வரிகள். ஆசைகளுக்கும் கனவுக்களுக்கும்,வாழ்கையில் எவ்வளவோ இழக்கிறோம்.
அது உடைத்துவிட்டால்? நொறுங்கிய உள்ளங்களுக்கு ஆறுதலான கவிதை

ஆ.முத்துராமலிங்கம் said...

//பெண்ணில் உண்டானது
அடைந்து கிடக்கிறது!
மண்ணில் உண்டானது
உடைந்து கிடக்கிறது! //

உண்மையான வரிகள் மண்பான்டங்கள் உடைவது போலவே பென்னின் என்னங்கள் விருப்பங்கள் உடைந்து அல்லது அடைந்துதான் கிடக்கின்றது.



ஆசைகளும், கனவுகளும்
அழகிய ஜாடிபோல்!

உடைந்துவிட்டால்,
உற்றுநோக்காதீர்கள்!

அருமையான வரிகள்...

இதோ! உறங்கபோகிறான் அவன்!
வேறொரு கனவுக்காய்!
வேறொரு ஆசைக்காய்!

கற்பனையின் உச்சம்.

ஆதவா said...

ஆஹா!!! இந்த படமா!!! அது ஒரு கனாக்காலம் மாதிரி!! இந்த படத்திற்கு கவிதை எழுதின ஞாபகம் கொஞ்சம் மிச்சமிருக்கு!!

நல்ல கவிதை!! உங்க பாணீயிலிருந்து விலகி நிற்கும் ஒரு கவிதை!!

வாழ்த்துகள்!~

கலை - இராகலை said...

///ஆசைகளும், கனவுகளும்
அழகிய ஜாடிபோல்! ///

அருமையா சொன்னிங்க! இவை இரண்டுமே பார்ப்பதற்கு மாத்திரமே அழகாய் தெரியும்.

கலை - இராகலை said...

///இதோ! உறங்கபோகிறான் அவன்!
வேறொரு கனவுக்காய்!
வேறொரு ஆசைக்காய்!///

பட்ட பின்பும் ஞானம் பிறப்பது அரிது. ஏமாற்றங்களும் எதிர்பார்ப்புகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கும் என்பது அழகாக புலப்படுகிறது இவ்வரிகளில்.

கலை - இராகலை said...

இந்த கவிதயை இன்னும் கொஞம் நீளமாய் எதிர்பார்த்தேன்!

ஆ.ஞானசேகரன் said...

படமும்... வரிகளும் ஆகா....ஒன்றுகொன்று அழகுசேர்கின்றது நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//ஆசைகளும், கனவுகளும்
அழகிய ஜாடிபோல்!

உடைந்துவிட்டால்,
உற்றுநோக்காதீர்கள்! //

வாவ்வ்வ்வ்வ் என்ன எதார்த்த வரிகள் பாராட்ட வேண்டாமா?...

ஆ.ஞானசேகரன் said...

///இதோ! உறங்கபோகிறான் அவன்!
வேறொரு கனவுக்காய்!
வேறொரு ஆசைக்காய்!///

அன்புடன்

ஜகதீஸ்வரன் said...

a wonderful poem.
உடைந்துவிட்டால்,
உற்றுநோக்காதீர்கள்!
a valuable massage
lovable person,
jagadeeswaran.
http://jackpoem.blogspot.com

குடந்தைஅன்புமணி said...

உறங்கட்டும்! கனவுகளிலாவது அவன் கனவுகள் பலிக்கட்டும்! நல்லாருக்கு கவிதை! பதிவர் சந்திப்பு வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்...அடுத்தமுறை கண்டிப்பா வாருங்கள். சந்திக்கலாம்.

sakthi said...

பெண்ணில் உண்டானது
அடைந்து கிடக்கிறது!
மண்ணில் உண்டானது
உடைந்து கிடக்கிறது!

arampame arputham

sakthi said...

இமைகளில் தெரிகிறது,
தூக்கமும், ஏக்கமும்!
உடைகளில் தெரிகிறது,
சூழ்நிலையும், ஏழ்(மை)நிலையும்!

uvamai arumai

sakthi said...

உடைந்துவிட்டால்,
உற்றுநோக்காதீர்கள்!
valkai thathuvum

sakthi said...

இதோ! உறங்கபோகிறான் அவன்!
வேறொரு கனவுக்காய்!
வேறொரு ஆசைக்காய்!

superb alagai mudithuvitergal

sayrabala said...

உடைந்துவிட்டால்,
உற்றுநோக்காதீர்கள்

yethaarththam nanbare

pineeteenga

rasiththu rusith"then"

கார்த்திகைப் பாண்டியன் said...

படத்துக்கும் கவிதைக்கும் அவ்வளவு ஒற்றுமை.. அழகு ஷீ-நிசி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேறொரு கனவுக்காய்!
வேறொரு ஆசைக்காய்!//

வாழ்க்கையே நம்பிக்கை தானே..

அபுஅஃப்ஸர் said...

நல்ல வரிகள் தல‌

படத்துக்கேற்ற கவிதை வரிகள்

வாழ்த்துக்கள்

கவின் said...

படம்,கவிதை நல்லா இருக்கு

Poornima Saravana kumar said...

படமும் கவிதையும் அழகு:)

புதியவன் said...

//ஆசைகளும், கனவுகளும்
அழகிய ஜாடிபோல்!

உடைந்துவிட்டால்,
உற்றுநோக்காதீர்கள்! //

நிதர்சனமான வரிகள்...
படமும் அருமை...

Suresh said...

//மண்ணில் உண்டானது
உடைந்து கிடக்கிறது! //

அருமை தல

//இமைகளில் தெரிகிறது,
தூக்கமும், ஏக்கமும்!
உடைகளில் தெரிகிறது,
சூழ்நிலையும், ஏழ்(மை)நிலையும்! //
ஒரு ஏழ்மையை அழகாக சொல்லிருக்கிங்க

//ஆசைகளும், கனவுகளும்
அழகிய ஜாடிபோல்!

உடைந்துவிட்டால்,
உற்றுநோக்காதீர்கள்! //

ஒரு பெரிய தத்துவத்த அழகா சொல்லிடிங்க

//இதோ! உறங்கபோகிறான் அவன்!
வேறொரு கனவுக்காய்!
வேறொரு ஆசைக்காய்!//

விடா முயற்சி தெரியுது தல

ஷீ-நிசி said...

நன்றி சொல்லரசன்
நன்றி மு.ரா
நன்றி ஆதவா
நன்றி கலை
நன்றி ஞானசேகரன்
நன்றி ஜகதீஸ்வரன்
நன்றி அன்புமணி
நன்றி சக்தி
நன்றி சாய்ராபாலா
நன்றி கா.பாண்டி
நன்றி அபுஅஃப்ஸர்
நன்றி கவின்
நன்றி பூர்ணிமா
நன்றி புதியவன்
நன்றி சுரேஷ்

அகநாழிகை said...

ஷீ-நிசி,
கவிதை அருமை, இன்னும் நீளமாக இருந்திருக்கலாம். அதுசரி, படத்திற்காக கவிதையா கவிதைக்காக படமா ?

காமராஜ் said...

எளிமை மிக மிக அழகானது.
எளிய கவிதைகள் எதையும்
தாண்டி வேகமாகப்பாயும் வல்லமை
கொண்டது. நான் எப்போதும் புரிகிற
கவிதையின் பக்கமே.

//இதோ! உறங்கபோகிறான் அவன்!
வேறொரு கனவுக்காய்!
வேறொரு ஆசைக்காய்//

சபாஷ்.

mythees said...

அருமை.
-)))

SASee said...

ஷீ-நிசி,

//பெண்ணில் உண்டானது
அடைந்து கிடக்கிறது!
மண்ணில் உண்டானது
உடைந்து கிடக்கிறது! //

குழந்தையின் ஏக்கமும்
ஜாடியின் தாகமும் தெறிகிறது.!

//இமைகளில் தெரிகிறது,
தூக்கமும், ஏக்கமும்!
உடைகளில் தெரிகிறது,
சூழ்நிலையும், ஏழ்(மை)நிலையும்!//

இவனின் ஏழ்மைக்கு
சூழ்நிலை காரணமானதா..?

//ஆசைகளும், கனவுகளும்
அழகிய ஜாடிபோல்!

உடைந்துவிட்டால்,
உற்றுநோக்காதீர்கள்! //

உண்மைதான்
உற்று நோக்கி
உடைத்தவர்கள் அதிகம்

//இதோ! உறங்கபோகிறான் அவன்!
வேறொரு கனவுக்காய்!
வேறொரு ஆசைக்காய்!//

இவனது ஆசைகள்
கனவுக்குள் தான் கருவுருகிறது!
யார் கண்டுக்கொள்ள போவது
கவி வரிகளைத் தவிர!

ஹேமா said...

ஷி-நிசி கனவுகள்,ஒவ்வொருவரின் எண்ணங்களிலும் ஒவ்வொரு பிரதிபலிப்பு.கனவுகளும் இல்லாவிட்டால் வாழ்வு ஏக்கத்திலேயே முடியும்.
கனவுகளிலாவது கொஞ்ச நஞ்ச ஏக்கங்கள் நிறைவானதாய்.நல்ல கவிதை.அதைவிடப் படம் அருமை.

தாரணி பிரியா said...

//ஆசைகளும், கனவுகளும்
அழகிய ஜாடிபோல்!

உடைந்துவிட்டால்,
உற்றுநோக்காதீர்கள்//

நல்லா இருக்கே.

படம் கவிதைக்கு ரொம்பவே பொருத்தமா இருக்கு ஷீ நிசி

ஷீ-நிசி said...

அகநாழிகை said...
ஷீ-நிசி,
கவிதை அருமை, இன்னும் நீளமாக இருந்திருக்கலாம். அதுசரி, படத்திற்காக கவிதையா கவிதைக்காக படமா ?////

நன்றி நண்பா....

படத்தை வைத்துதான் கவிதை எழுதினேன்...

ஷீ-நிசி said...

காமராஜ் said...
எளிமை மிக மிக அழகானது.
எளிய கவிதைகள் எதையும்
தாண்டி வேகமாகப்பாயும் வல்லமை
கொண்டது. நான் எப்போதும் புரிகிற
கவிதையின் பக்கமே.///

நன்றி காமராஜ்! நானும் உங்கள் பக்கமே!

ஷீ-நிசி said...

நன்றி மைதீஸ்!

நன்றி சசி! வரிக்கு வரி அலசியமைக்கு!

ஷீ-நிசி said...

நன்றி ஹேமா! நீங்கள் சொல்வதும் மிகச்சரியே!

ஷீ-நிசி said...

நன்றி தாரணி!

யாழினி said...

//இதோ! உறங்கபோகிறான் அவன்!
வேறொரு கனவுக்காய்!
வேறொரு ஆசைக்காய்!//



கவிதை மிக நன்றாக உள்ளது நிசி!

ஏக்கம் கலந்த அழகு நயம்!

வழிப்போக்கன் said...

அண்ணா...
கவித சூப்பர்..
அருமயான வரிகள்..
யதார்த்தமாயுள்ளது..

நிலாரசிகன் said...

//அருமை ஓவியம்

அழகு சேர்க்கின்றன வரிகள்
//
வழிமொழிகிறேன்

ஷீ-நிசி said...

நன்றி யாழினி!
நன்றி வழிப்போக்கன்!
நன்றி நிலாரசிகன்!

ஜகதீஸ்வரன் said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

அன்புடன்
ஜகதீஸ்வரன்

ஜகதீஸ்வரன் said...

ஓவியமும் கவிதையும் அருமை,மிக அருமை.
அன்புடன்
ஜகதீஸ்வரன்

" உழவன் " " Uzhavan " said...

இக்கவிதையில் நிறைய முரண்பாடுகள் தெரியுதே..

சில வார்த்தைகள் பேசிய உடனேயே பெண்கள் தங்கள் தொலைபேசி எண்ணைத் தருகிறார்களா என்ன? அதுவும் ஏற்கனவே நிச்சயமானவள்.
//என் பேச்சும், செயலும்
என் காதலை
அவளுக்கு வெளிப்படுத்தின!//
இது தெரிந்துமா நிச்சயமானவள் மெளனம் காத்தாள்?

//உன்னில் வசித்திட,
அவள் தகுதியானவளல்ல!//

அவளுக்காக காதல் கருவைச் சுமந்து, பெற்றெடுத்துவிட்டு, பின்பு ஏன் இந்த வரிகள்? ச்சீ இந்த் பழம் புளிக்கும் கதையா??

//துடிக்கின்ற இதயம்
அன்று கொஞ்சம் அழுதது!

அழுகின்ற கண்களோ
அன்று கொஞ்சம் துடித்தது!// இவை மிக ரசித்த வரிகள்.

அன்புடன்
உழவன்

தாரணி பிரியா said...

இதுல என்னமோ உதைக்குது ஷீ நிசி. தவறா நினைச்சுகிட்டது அந்த பையனோட தப்புதான். அந்த பொண்ணை குறை சொல்லறது போல இருக்கே. இயல்பா பேசற விதத்தை காதல் அப்படின்னா எடுத்துக்கறது

ஷீ-நிசி said...

நன்றி ஜகதீஷ்!

--------

உழவன் மற்றும் தாரணி! உங்களின் கருத்துக்களுக்கு நன்றி! உங்கள் கருத்துக்கள் ஏன் உடைந்த ஜாடி கவிதையில் பதித்திருக்கிறீர்கள். கவிதையின் தலைப்பு கிட்டத்தட்ட அதைதான் குறிக்கிறது என்பதை சிம்பாலிக்காக சொல்கிறீர்களா?! :)

நன்றி உங்கள் இருவருக்கும்!

த.ஜீவராஜ் said...

//மீட்டினால்தானே வரும்
வீணையின் ஒலி; -இங்கே
தொலைபேசியில் எண்களை
அழுத்தினாலே வருகிறது!//

//இதோ! உறங்கபோகிறான் அவன்!
வேறொரு கனவுக்காய்!
வேறொரு ஆசைக்காய்//


அருமையான வரிகள்.
அழகான படம்

வாழ்த்துக்கள் நிசி

♥♥♥ Karthik ♥♥♥ said...

////
உம்! அப்புறம்! என்ற
வார்த்தைகள் மட்டும்
கண்டுபிடிக்கபடாமலிருந்தால்..
///

supera irukku...

செ.பொ. கோபிநாத் said...

//சுனாமிக்கும், சூறாவளிக்கும்
தப்பியதில்லை குடிசைகள்!

அடங்கியபின்,
மீண்டும் அங்கேயே
குடிசைபோடும்,
அசராத கடல் மைந்தர்கள்!//

//வாகனம்,
காட்டிலே பழுதானால்
காலார நடக்கலாம்!

கடலிலே பழுதானால்?!//

யதார்த்தத்தோடு உங்கள் வரிகள் கொஞ்சம் அசுரத்தனமாகவே பதிவு செய்திருக்கின்றன.
அருமை! அருமை!
http://spggobi.blogspot.com/

ராமலக்ஷ்மி said...

//ஆசைகளும், கனவுகளும்
அழகிய ஜாடிபோல்!

உடைந்துவிட்டால்,
உற்றுநோக்காதீர்கள்!

இதோ! உறங்கபோகிறான் அவன்!
வேறொரு கனவுக்காய்!
வேறொரு ஆசைக்காய்!//

அருமை. வலைச்சரம் மூலமாக வந்தேன். கல்கியால் கவுரவிக்கப் பட்டதற்கும் வாழ்த்துக்கள்!

ஷீ-நிசி said...

நன்றி ஜீவராஜ்
நன்றி கார்த்திக்
நன்றி கோபிநாத்
நன்றி ராமலஷ்மி!