Wednesday, 1 April 2009

நிலவு களவு போனது





நேற்றிரவு,
நிலவை யாரோ
களவாடிவிட்டார்களாம்;

இனி அங்கே ஒளி வீசிட
நிலவிற்கு பதிலாய்
நீ செல்ல வேண்டுமாம்!

நட்சத்திரங்களெல்லாம்
இன்று காலைமுதல்
என்னை நச்சரிக்கின்றன;

முடியாது என்று
புறமுதுகு காட்டினேன்;

நட்சத்திரங்களெல்லாம்
கண்ணீர் விட்டன;

முதன் முதலாக அன்று
பூமியிலிருந்து
மழை பெய்திட ஆரம்பித்தது!!

அழுகையில் மனமிளகி
அரைமனதாக ஒப்புக்கொண்டு;
அவைகளிடமே கேட்டேன்..

நீங்கள் பறிகொடுத்த
நிலவில் கறை இருந்திடுமே;
நான் அனுப்பும் நிலவில்
துளி கறையும் காணப்படாதே!

உங்கள் சூரியத்தலைவன்
கண்டுபிடித்தால் -உங்களை
சுட்டெரித்திடுவானே என்று!?

விடை தெரியாமல்
விழிகளெல்லாம் நனைந்தன
கண்ணீரால் நட்சத்திரங்களுக்கு;

வினாவெழுப்பிய நானே
விடையளித்தேன்!

நட்சத்திரங்களெல்லாம்
முகம் பிரகாசிக்க
புன்னகைத்தன!

என்ன தெரியுமா?

நான் அனுப்பும் நிலவிற்கு
கறையாய் -நானே
அவளுடன் ஒட்டிக்கொள்கிறேன் என்று!!!

___________________________________

கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

ஆம்

இல்லை

60 comments:

Suresh said...

உங்க நிலா கவிதை அதில் எடுத்தாண்ட வார்த்தைகள் எல்லாம் அருமை ...

கடைசியில் நிங்களே கறையாய் என்று ஒரு தன் அடக்கம் தான் உங்களுக்கு...

நிங்க மேலும் அந்த நிலவை அழங்கரிக்கும் ஒரு மின்னல்

//நான் அனுப்பும் நிலவிற்கு
கறையாய் -நானே
அவளுடன் ஒட்டிக்கொள்கிறேன் என்று!!!//

சொல்லரசன் said...

//நீங்கள் பறிகொடுத்த
நிலவில் கறை இருந்திடுமே;
நான் அனுப்பும் நிலவில்
துளி கறையும் காணப்படாதே!//

கறை படியாத கற்பனைக்கு வாழ்த்துகள்.

மிஸஸ்.தேவ் said...

நல்லா இருக்கு நிலா கவிதை.

ஆ.முத்துராமலிங்கம் said...

//முதன் முதலாக அன்று
பூமியிலிருந்து
மழை பெய்திட ஆரம்பித்தது!!//

//நீங்கள் பறிகொடுத்த
நிலவில் கறை இருந்திடுமே;
நான் அனுப்பும் நிலவில்
துளி கறையும் காணப்படாதே!//

ராஜ் சார் அருமையான புனைவு.
கவிதை அழகு சார்.

நட்புடன் ஜமால் said...

\\இனி அங்கே ஒளி வீசிட
நிலவிற்கு பதிலாய்
நீ செல்ல வேண்டுமாம்!\\

அருமை நண்பா!

நட்புடன் ஜமால் said...

முதன் முதலாக அன்று
பூமியிலிருந்து
மழை பெய்திட ஆரம்பித்தது!!\\

அருமையான கற்பனை

மிகவும் அருமை நண்பரே

நட்புடன் ஜமால் said...

\\நட்சத்திரங்களெல்லாம்
முகம் பிரகாசிக்க
புன்னகைத்தன!

என்ன தெரியுமா?

நான் அனுப்பும் நிலவிற்கு
கறையாய் -நானே
அவளுடன் ஒட்டிக்கொள்கிறேன் என்று!!!\\

அன்பு அதிகம் அன்பாய்

புதியவன் said...

மிக அழகிய நிலாக் கவிதை ஷீ-நிசி

//நான் அனுப்பும் நிலவிற்கு
கறையாய் -நானே
அவளுடன் ஒட்டிக்கொள்கிறேன் என்று!!!//

முடித்திருக்கும் விதம் வெகு அழகு...

குடந்தைஅன்புமணி said...

கவிதையும், படமும் மிகவும் அருமை.

அகநாழிகை said...

//நான் அனுப்பும் நிலவிற்கு
கறையாய் -நானே
அவளுடன் ஒட்டிக்கொள்கிறேன் என்று!!!//

அருமையான கவிதை. அதெப்படியோ பெண்களைப் பற்றி எதை எழுதினாலும் அழகாகி விடுகிறது. காதல் கவிதைகளை இரசிக்கவும் ஒரு அழகான மனம் தேவையாயிருக்கிறது... அல்லது படிக்கும் போதே அழகாய் மனம் ஆகிவிடுகிறது.
கலக்குற... ஷீ-நிசி.

Anbu said...

கலக்கல் அண்ணா...
எளிமையான வரிகள் அண்ணா...

ரொம்ப அழகாக இருக்கிறது

கார்த்திகைப் பாண்டியன் said...

அது எப்படிப்பா.. பிள்ளைங்களை நினச்சு எழுதுனா மட்டும் உங்களுக்கு அருவியா கொட்டுது.. கவிதை?

//நட்சத்திரங்களெல்லாம்
கண்ணீர் விட்டன;

முதன் முதலாக அன்று
பூமியிலிருந்து
மழை பெய்திட ஆரம்பித்தது!!//

அருமை நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நான் அனுப்பும் நிலவிற்கு
கறையாய் -நானே
அவளுடன் ஒட்டிக்கொள்கிறேன் என்று!!!//

எங்க போனாலும் விடுறதில்லை? நடக்கட்டும்..

கார்த்திகைப் பாண்டியன் said...

கிளாஸ்ல இருந்த மனுஷன ஒரு நிமிஷம் பதற அடிச்சிட்டீங்களே நண்பா.. இதுக்கு உங்கள நாலு நாள் உள்ள வைக்கணும்.. சேட்டையை ரசித்தேன் நண்பா..

வேத்தியன் said...

நல்லா இருக்குங்க...
வாழ்த்துகள்...

நாணல் said...

//நான் அனுப்பும் நிலவிற்கு
கறையாய் -நானே
அவளுடன் ஒட்டிக்கொள்கிறேன் என்று!!!//

நல்லா இருக்கே... எப்படி இப்படி எல்லாம் ...:)

அபுஅஃப்ஸர் said...

ஆகா நட்சத்திரங்களுடன் உரையாடல்

அருமை நண்பரே

அபுஅஃப்ஸர் said...

//நான் அனுப்பும் நிலவிற்கு
கறையாய் -நானே
அவளுடன் ஒட்டிக்கொள்கிறேன் என்று!!!
//

ரசித்தேன் இந்த வரிகளை

வாழ்த்துக்கள்

வால்பையன் said...

//நட்சத்திரங்களெல்லாம்
கண்ணீர் விட்டன;

முதன் முதலாக அன்று
பூமியிலிருந்து
மழை பெய்திட ஆரம்பித்தது!!//

எல்லாம் ஒகே மேலுள்ள வரிகளை தவிர!
அங்கே லேசாக லாஜிக் உதைக்கிறதே!

நட்சத்திரங்கள் அழுதால் பூமியிலிருந்து எப்படி மழை பெய்திடும்?

ivingobi said...

அன்பு நண்பரே... நிலவு மட்டும்ம களவு போனது... ?
இல்லையில்லை.... எங்களின் இதயமும் தான்......

வழிப்போக்கன் said...

கவிதை சூப்பர் தோழரே..

ஷீ-நிசி said...

நன்றி சுரேஷ்!

நன்றி சொல்லரசன்...

//கறை படியாத கற்பனை..// அழகிய வார்த்தை நண்பரே!

ஷீ-நிசி said...

நன்றி மிஸஸ் தேவ்!!

நன்றி மு.ரா சார்!

ஷீ-நிசி said...

அடடே! வரிக்கு வரி பின்னூட்டம் போட்டிருக்கீங்க :)

நன்றி ஜமால்!

ஷீ-நிசி said...

நன்றி புதியவன்!

நன்றி அன்புமணி!

ஷீ-நிசி said...

காதல் கவிதைகளை இரசிக்கவும் ஒரு அழகான மனம் தேவையாயிருக்கிறது... அல்லது படிக்கும் போதே அழகாய் மனம் ஆகிவிடுகிறது.
கலக்குற... ஷீ-நிசி.////

பாஸ்... என்ன கவித்துவமா பின்றீங்க... இரசித்தேன்....

நன்றி!

ஷீ-நிசி said...

எங்க போனாலும் விடுறதில்லை? நடக்கட்டும்..////

ஹா! ஹா! அதெப்படி விடமுடியும்... :)

நன்றி கா.பா

ஷீ-நிசி said...

கிளாஸ்ல இருந்த மனுஷன ஒரு நிமிஷம் பதற அடிச்சிட்டீங்களே நண்பா.. இதுக்கு உங்கள நாலு நாள் உள்ள வைக்கணும்.. சேட்டையை ரசித்தேன் நண்பா..////

ஏப்ரல் ஃபூல் க்கு சிக்கின முதல் பலியாடு! :)

நன்றி கா.பா!

ஷீ-நிசி said...

நன்றி வேத்தி!


_______


நல்லா இருக்கே... எப்படி இப்படி எல்லாம் ...:)////

அதெல்லாம் அப்படித்தான் :) நாணல்!

நன்றி நண்பரே!

ஷீ-நிசி said...

நன்றி அபுஅஃப்ஸர்!

_____________

நட்சத்திரங்கள் அழுதால் பூமியிலிருந்து எப்படி மழை பெய்திடும்?////

பூமியிலிருந்து வானம் நோக்கி... என்கிற காட்சிதான் அங்கே கற்பனையாய்! கொஞ்சம் கண்ணை மூடி காட்சி படுத்திப் பாருங்கள்... தண்ணீர் மேல்நோக்கி செல்லும்படியாய் அமைத்திருப்பதை பூங்காக்களில் பார்த்திருப்பீர்கள்தானே!



நன்றி வால்!! பையா!

ஷீ-நிசி said...

நன்றி கோபி!

நன்றி வழிப்போக்கன்!

அன்புடன் அருணா said...

//முதன் முதலாக அன்று
பூமியிலிருந்து
மழை பெய்திட ஆரம்பித்தது!!\\//

வாவ்...அருமையான வித்தியாசமான வரிகள்.அழகிய மழைக்கவிதை...படித்ததும்....மனம் களவு போயிற்று...
அன்புடன் அருணா

கலை - இராகலை said...

அட எனக்கு தெரியாம போச்சே!

கலை - இராகலை said...

///நான் அனுப்பும் நிலவிற்கு
கறையாய் -நானே
அவளுடன் ஒட்டிக்கொள்கிறேன் என்று!!!///

இந்த வரிகள் தான் எனக்கு ரொம்ப பிடிச்சது

ஷீ-நிசி said...

நன்றி அருணா!

நன்றி கலை!

ச.முத்துவேல் said...

கவிதை கலக்கல்.வைரமுத்துவை நினைவுபடுத்தும் கற்பனைவளம்,பாணி.
/முதன் முதலாக அன்று
பூமியிலிருந்து
மழை பெய்திட ஆரம்பித்தது!!/
இது மாதிரி நிறைய கலக்கல் இக்கவிதையில்.

ஆதவா said...

ம்ம்ம்ம்..... இந்த நிலவு களவு போனதா, இல்லை களவாடப்பட்டதா???? ஹி ஹி... சும்மா சும்மா!!!

உங்களுடைய டாப் கவிதைகளில் இதுவும் ஒன்று!!! இதை நீங்கள் எழுதிய காலங்களை நான் பின்னோக்கிப் பார்க்கிறேன்!!!!

அன்புடன்
ஆதவா!

ஹேமா said...

ஷி-நிசி அழகான கவிதை.
நேரமின்மையால் ஓடிப்போகிறேன்.

sayrabala said...

ayyo boss pinreenga ponga

urukiten thala

bala

ஷீ-நிசி said...

நன்றி முத்துவேல்!

///இதை நீங்கள் எழுதிய காலங்களை நான் பின்னோக்கிப் பார்க்கிறேன்!!!!//////

ஆம்! நானும்தான்! நன்றி ஆதவா!

ஷீ-நிசி said...

நன்றி ஹேமா! (நேரமிருக்கும்போது வந்து படிக்கவும் :) )

நன்றி சாய்ராபாலா!

SASee said...

கண்ணீர் வடித்த
விண்மீன்களுக்காய்
அவளை வின்னுக்கே
நிலவாய் மாற அனுப்பிவைத்த
தங்களின் கவிதையில்
நட்ச்சத்திர இரக்கம் புரிகிறது!
ஷீ-நிசி அவர்களே......

கவின் said...

அழகான கவிதை!

sakthi said...

நீங்கள் பறிகொடுத்த
நிலவில் கறை இருந்திடுமே;
நான் அனுப்பும் நிலவில்
துளி கறையும் காணப்படாதே!//

wow really nice sir

sakthi said...

நட்சத்திரங்களெல்லாம்
கண்ணீர் விட்டன;

முதன் முதலாக அன்று
பூமியிலிருந்து
மழை பெய்திட ஆரம்பித்தது!!/

arumai intha uvamai

gayathri said...

நான் அனுப்பும் நிலவிற்கு
கறையாய் -நானே
அவளுடன் ஒட்டிக்கொள்கிறேன் என்று!!!

super pa

ஷீ-நிசி said...

நன்றி சசி!

நன்றி கவின்!

ஷீ-நிசி said...

நன்றி சக்தி! வெகுவாய் ரசித்திருக்கிறீர்கள்!


நன்றி காயத்ரி!

ஊர் சுற்றி said...

நீங்க கடைசியா என்ன சொல்லுவீங்கன்னு ரொம்ப யோசிக்க..லாம் இல்ல! :))

அருமையான கடைசி வரிகள்...:)))

ஆ.ஞானசேகரன் said...

//நான் அனுப்பும் நிலவிற்கு
கறையாய் -நானே
அவளுடன் ஒட்டிக்கொள்கிறேன் என்று!!!//

நீங்கள் கறையாய்.. அவள் மனிதில் நிறையாய் ஒட்டியுள்ளீர்கள் நண்பரே

ஷீ-நிசி said...

நன்றி ஊர் சுற்றி!

நன்றி ஞானசேகரன்!

sakthi said...

ஷீ-நிசி said...

நன்றி சக்தி! வெகுவாய் ரசித்திருக்கிறீர்கள்!

nan than nandri sollanum
eppadi oru kavithaiyai padaithathuku

sakthi said...

thinamum intha kavithaiyai padika vendum poala erukunga

sakthi said...

irupathai kuruvathai vida
ellatha ondrai karpanai ill
kanmun niruthuvathu arputha kavigalukku mattume varum
neengal oru arputha kavignar

ஷீ-நிசி said...

சக்தி உங்கள் கருத்துக்கள் என்னை சந்தோஷபடுத்துகிறது. நன்றி சக்தி!

யாழினி said...

WOW கவிதை SuperV !

" உழவன் " " Uzhavan " said...

அழகு!

nilavu said...

hiiii
romba alaga iruku unka kavithai
rompa rompa pudichiruku

nan nilavu kavithai thédum podhu unga kavithai google'a kédaichathu

chooo chwwwett !!

ஷீ-நிசி said...

நன்றி யாழினி

நன்றி அழகு!

நன்றி நிலவு

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

வெள்ளை காகிதம் என்றால் ஒன்றும் தெரியாது. அதில் எங்கோ ஒரிடத்தில் கருப்பு மைதுளி இருப்பின் கண்ணுக்கு புலப்படும் என்பதுபோல் உங்கள் படைப்பில் கறை என்பது மிடுக்காய் தோன்றுகின்றது விண்ணில் இருந்தாலும்.

இவன்,
தஞ்சை.வாசன்