Friday, 6 March 2009

பிள்ளைப்பேறு



ஓர் உயிர்தரிக்க
உதவாதவளா நான்??...

மணமுடித்த மூன்று மாதங்கள்
கேட்டார்கள் சிரித்தபடி!

அடுத்தமாதம் கேட்டார்கள்
கொஞ்சம் அலட்சியபடி!

தேதிக்குப்பின் பிறந்திடும்
ஒவ்வொரு நாளுமே!
தேர்வெழுதிட்ட நிலைதான்!

அடுக்கிவைத்த சீட்டுக் கட்டுகள்
ஓவ்வொருமுறையும்
சரிந்திட்டால்.....

வேலைக்காரியைவிடவும்
கேவலமாய் ஆனேன்
ஒரு வருடத்தில்!

பலிக்கவில்லை
மாமியாரின் ஆசையும்!
சாமியாரின் பூசையும்!

ஒப்புக்கு அழைத்தார்கள்
என்னையும் சுபகாரியங்களுக்கு!

என்னோடு மணமானவர்களுக்கு
கையில் ஒன்று! இடுப்பில் ஒன்று!

உறவுகள் ஓப்பீடு செய்தன...

கருத்தரிக்க இருக்காமலா
கருத்தரித்தேன் பூமியில்?!

கருப்பை இருக்கவேண்டிய
இடத்தில் இறைவன்
வெறு(ம்)ப்பை வைத்தானா?

மனம் அசைபோட்டது...

பிள்ளையில்லா தாய்
இங்கிருக்கிறேன்!

தாயில்லா பிள்ளை
எங்குமிருக்கின்றன!

பெத்தெடுத்து தாயாகலாம்!
தத்தெடுத்தும் தாயாகலாம்!

இதோ நானும் தாயாகிவிட்டேன்!

20 comments:

ஆதவா said...

என் நண்பனின் அக்கா,பிள்ளைப்பேறு இல்லாமல் இருப்பதால் ஏற்படும் வசவுகளை நான் கேட்டிருக்கிறேன்..

மருத்துவமும் ஓர் நிலை வரைதான் உபயோகமாகிறது...

வழக்கமான தரமான படைப்பு ஷீ!!

pukalini said...

சீட்டுகட்டுகள்- திருத்துக.

ஷீ-நிசி said...

நன்றி ஆதவா!

ஷீ-நிசி said...

புகழினி! சீட்டு கட்டுகள் என்று வந்திருக்கவேண்டும் என்று கூறுகிறீர்களா... அல்லது வேறு ஏதேனும் பொருட்பிழை உள்ளதா?!

கருத்திற்கு நன்றி!

கவின் said...

கவிதைல கலக்கிறீங்க அண்ணா
உணர்வு மிகுந்த கவிதை

pukalini said...

சீட்டுக் கட்டுகள்?

ஷீ-நிசி said...

கவின் நன்றிபா....

தொடர்ந்து வா கவின்!

ஷீ-நிசி said...

சீட்டுக் கட்டுகள் என்பதே சரி! புகழினி! தொடர்ந்து கருத்துக்களை தாருங்கள்... நன்றி!

கவின் said...

இப்ப தனே வந்திருக்கம் இனி தொட(ந்)ர்து வருவமல்லே...

ஊர் சுற்றி said...

இந்த பதிவுலதான் தொடர்ந்து எழுதுவீங்களா?
அப்பப்போ வந்துட்டு போறேன். நம்பளையும் ஒரு மனுஷனா மதிச்சிருக்கீங்க. வரலன்னா எப்படி.

கவின் said...

உங்களையும் ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருகிறேன்,எனது பதிவினை பார்கவும்.முடிந்தால் எழுதுமாறும்,முடியாவிட்டாலும் எழுதுமாறும் உரிமையுடன் அழைக்கிறேன்

நண்பன் கவின்

ச.முத்துவேல் said...

/கருத்தரிக்க இருக்காமலா
கருத்தரித்தேன் பூமியில்?! /

போன்ற சில வரிகள்...

நல்லாருக்கு, நோக்கமும் ஆக்கமும்.

ஷீ-நிசி said...

நன்றி நண்பரே! ஊர் சுற்றி உங்க பெயரை கொஞ்சம் சொல்லுங்க!

ஷீ-நிசி said...

நன்றி முத்துவேல்... எனக்கு பிடித்த வரிகளும் கூட அவைகள்!

nTamil said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

ஷீ-நிசி said...

நன்றி ntamil

சுதாகர் said...

தாய்மை அடையத பெண்ணின் எண்ண குமுறலை அப்படியே கவிதையில் வடித்து விட்டீர் நிசி. அருமை. தொடரட்டும் உங்கள் கவிதை மழை.

சுந்தரா said...

தாய்மைக்கு ஏங்கும் பெண்ணின் மனநிலையை அழகாகப் படம்பிடித்திருக்கிறீர்கள் ஷீ நிசி.

கருப்பை இருக்கவேண்டிய
இடத்தில் இறைவன்
வெறு(ம்)ப்பை வைத்தானா?

அழகான வரிகள்..வாழ்த்துக்கள்!

ஷீ-நிசி said...

நன்றி சுதாகர் ஜி!


நன்றி சுந்தரா.... நானும் மிக ரசித்த வரிகள் அவை!

தொடர்ந்து இணைந்திருங்கள்!

ஊர் சுற்றி said...

பாருங்க... எத்தனை நாளுக்கு அப்புறம் உங்களுக்கு பதில் தருகிறேன் என்று. என்னுடைய பெயர் என் மின்னஞ்சலிலேயே இருக்கிறது நிஷி. :)