Friday, 27 March 2009

புத்த ஜோதி



பச்சைக் கிளியொன்று
மிச்ச சிறகுகளோடு
வெளியில் வந்து..

அடுக்கிவைத்த
கட்டுகளைச் சுற்றி உலாவி,
கலைத்துபோட்ட
சீட்டுகளுக்குள்ளே துழாவி,

ஆறறிவு உயிரொன்றின்
எதிர்காலத்தை,
ஐந்தறிவு உயிரொன்று
தேடிக் கண்டெடுத்தது.

சொன்ன சொல் கேட்டால்,
தின்ன நெல் தருபவனிடம்
கொடுத்துவிட்டு,

மீண்டும் திரும்பியது
கூண்டுக்குள்ளேயே!!

போதிமரத்தின் கீழே,
புத்தனமர்ந்தான்!
ஞானியாகினான்...

மீதி மரத்தின் கீழெல்லாம்
இவனமர்ந்தான்.....
??????

___________________________________

கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

ஆம்

இல்லை

40 comments:

கலை - இராகலை said...

//போதிமரத்தின் கீழே,
புத்தனமர்ந்தான்!
ஞானியாகினான்...

மீதி மரத்தின் கீழெல்லாம்
இவனமர்ந்தான்.....
??????////

::::::::::::::::::::::::::::
ஜோதியாகிட்டானோ!
நல்லாயிருக்கு

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆறரிவு உயிரொன்றின்
எதிர்காலத்தை,
ஐந்தறிவு உயிரொன்று
தேடிக் கண்டெடுத்தது.//

அருமை ஷீ-நிஷி..

//போதிமரத்தின் கீழே,
புத்தனமர்ந்தான்!
ஞானியாகினான்...//

கிளி ஜோஷியம் பற்றிய வித்தியாசமான சிந்தனை.. வார்த்தைகள் விளையாடி உள்ளன

ஆதவா said...

அருமை ஷீ!! ஆனால் மரத்தினடி அமர்பவர்களையெல்லாம் புத்தனாக எதிர்பார்ப்பது தவறுதான்... குறைந்தபட்சம் மனிதனாக எதிர்பார்க்கலாம்.

வழக்கம் போலவே கவிதை இனிமை!

ஆதவா said...

வார்த்தைகள் விளையாடி உள்ளன

கார்த்திகைப் பாண்டியன்..... என்ன விளையாட்டு விளையாடியதுன்னு சொல்லுங்களேன்!!! ஹிஹி

ச.முத்துவேல் said...

//போதிமரத்தின் கீழே,
புத்தனமர்ந்தான்!
ஞானியாகினான்...

மீதி மரத்தின் கீழெல்லாம்
இவனமர்ந்தான்.....
??????////

இங்குதான் கவிதை உயிர் பெறுகிறது.
/ஆறரிவு உயிரொன்றின்
எதிர்காலத்தை,
ஐந்தறிவு உயிரொன்று
தேடிக் கண்டெடுத்தது./

நல்லாருக்கு.
துலாவி,-துழாவி
ஆறரிவு -ஆறறிவு
தெரிந்ததை மட்டும் சொல்கிறேன். இதற்கு அர்த்தம், எல்லாம் தெரிந்தவன் என்று என்னைக்
காட்டிக்கொள்வதல்ல.தமிழின்,
உங்களின் மீதுள்ள அக்கறைதான்.

ஷீ-நிசி said...

நன்றி கலை!!

நன்றி கா.பா! :)

நன்றி ஆதவா... அதெல்லாம் எதிர்பார்க்கமாட்டோமுல்ல.. :)

நன்றி முத்துவேல்.... ஒவ்வொருமுறையும் அதிக அக்கறை எடுத்தே பதிக்கிறேன். இருப்பினும் சில தெரிந்த வார்த்தைகளே.... கண்ணை மறைத்துவிடுகின்றன்.

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி அன்பரே!

ஆ.முத்துராமலிங்கம் said...

ஷீ-நிசி சார் அருமை அருமை..

//பச்சைக் கிளியொன்று
மிச்ச சிறகுகளோடு
வெளியில் வந்து..//


//ஆறரிவு உயிரொன்றின்
எதிர்காலத்தை,
ஐந்தறிவு உயிரொன்று
தேடிக் கண்டெடுத்தது.//

//சொன்ன சொல் கேட்டால்,
தின்ன நெல் தருபவனிடம்
கொடுத்துவிட்டு,//

வரிகள் அட்டகாசம்.
கவிதை நன்றாக உள்ளது

வால்பையன் said...

//மீதி மரத்தின் கீழெல்லாம்
இவனமர்ந்தான்.....//

சோம்பேறி புத்தன்களை
உருவாக்க!

sakthi said...

போதிமரத்தின் கீழே,
புத்தனமர்ந்தான்!
ஞானியாகினான்...

மீதி மரத்தின் கீழெல்லாம்
இவனமர்ந்தான்.....
??????////

nice really nice

சொல்லரசன் said...

//மீதி மரத்தின் கீழெல்லாம்
இவனமர்ந்தான்.....
??????//

ஆண்டியானான்

நல்ல கவிதை நண்பரே

கலை - இராகலை said...

//// வால்பையன் said...

//மீதி மரத்தின் கீழெல்லாம்
இவனமர்ந்தான்.....//

சோம்பேறி புத்தன்களை
உருவாக்க!////

நீங்க சரியான வால்

சொல்லரசன் said...

எங்கே காணவில்லை, கா.பா பயம் உங்களுக்கும் வந்துவிட்டதா?

கிருஷ்ணா said...

ஓ பிரம்மாவே..

தலைகளை விட்டுவிட்டு
துண்டுச் சீட்டுகளிலா
எழுதி வைத்தாய்
எங்கள்
தலையெழுத்தை..??

நட்புடன் ஜமால் said...

மரத்தின் பயனல்ல அது

ஞானம் கிடைக்கப்பட வேண்டிய ஆள் போதி மரத்துக்கு கீழே உட்க்கார வைக்கப்பட்டார்.

ஆ.ஞானசேகரன் said...

//ஆறறிவு உயிரொன்றின்
எதிர்காலத்தை,
ஐந்தறிவு உயிரொன்று
தேடிக் கண்டெடுத்தது.//

எப்படிங்கோ? "இங்கே பகுத்தறிவு விற்பபனைக்கு"

ஹேமா said...

ஷி-நிசி உங்களுக்குத் தெரியாதா இப்போ புத்தன் போதி மரத்தடியில் இல்லை.எங்களோடு அகதிகளாய் அகதியாய் இங்குதானே தஞ்சம் கேட்டு இருக்கிறார்.தான் போதித்த போதனைகளைத் திருத்தும் பணியில் ஈடுபட்டும் வருகிறார்.

ஷீ-நிசி said...

நன்றி மு.ரா நண்பரே!

சரியாக நிதானித்தாய் வால்பையா!
நன்றி அருண்!! :)

நன்றி சக்தி

ஷீ-நிசி said...

நன்றி சொல்லரசன்! :) ஆமாம்ல!
அனுபவஸ்தருங்க சொன்னா கேட்டுக்கனும்ல!! :)

அடடே கிருஷ்ணா...நல்லாருக்குங்க!

ஷீ-நிசி said...

நன்றி ஜமால்....

நன்றி ஞானசேகரன் நண்பரே!

நன்றி ஹேமா! உங்கள் வேதனை அறியமுடிகிறது!

புதியவன் said...

//ஆறறிவு உயிரொன்றின்
எதிர்காலத்தை,
ஐந்தறிவு உயிரொன்று
தேடிக் கண்டெடுத்தது.//

சில மனிதர்களின் அவலமான நம்பிக்கையை சொல்லும் வரிகள்...

//போதிமரத்தின் கீழே,
புத்தனமர்ந்தான்!
ஞானியாகினான்...

மீதி மரத்தின் கீழெல்லாம்
இவனமர்ந்தான்.....
??????//

புத்தனைக் கூட இவர்கள் பித்தனாக்கி விடுவார்கள்...

வித்தியாசமான கண்ணோட்டத்திலான அருமையான கவிதை ஷீ-நிசி...

கவின் said...

கடைசி வருகள் அபாரம்!

SASee said...

//ஆறறிவு உயிரொன்றின்
எதிர்காலத்தை,
ஐந்தறிவு உயிரொன்று
தேடிக் கண்டெடுத்தது.//

//போதிமரத்தின் கீழே,
புத்தனமர்ந்தான்!
ஞானியாகினான்...

மீதி மரத்தின் கீழெல்லாம்
இவனமர்ந்தான்.....
??????//

புத்தன் கண்ட ஜோதிடம்..
கொஞ்ச மிச்சமாய் நடக்கிறது!
இவன் கண்ட ஜோதிடம்
மிச்ச கொஞ்சத்தையும் கெடுக்கிறது!

அகநாழிகை said...

ஷீ-நிசி, வழக்கம்போலவே கவிதை அருமை. வித்தியாசமான சிந்தனை. வாழ்த்துக்கள்... அற்புதம்.
(இணைய பிரச்சனை ஓரளவு சரியாகியுள்ளது.)

- பொன். வாசுதேவன்


ஆதவா said...
/என்ன விளையாட்டு விளையாடியதுன்னு/

எனக்கும் சொல்லுங்க... ஷீ-நிசி.
(வீட்ல வேற ஆள் இல்ல... பாத்து ராசா...)

thevanmayam said...

ஆறறிவு உயிரொன்றின்
எதிர்காலத்தை,
ஐந்தறிவு உயிரொன்று
தேடிக் கண்டெடுத்தது.
////

அருமை நண்பரே!!

ஜகதீஸ்வரன் said...

சொன்ன சொல் கேட்டால்,
தின்ன நெல் தருபவனிடம்
கொடுத்துவிட்டு,

மீண்டும் திரும்பியது
கூண்டுக்குள்ளேயே!!

மிக மிக அருமையான வரிகள்.எல்லோருக்கும் கடைசி வரிகள் பிடித்துப் போக எனக்கு பிடித்தது,கிளியின் செயல் செயல்தான்.

அன்புடன்
ஜகதீஸ்வரன்.
http://www.jackpoem.blogspot.com/

தாரணி பிரியா said...

//ஆறறிவு உயிரொன்றின்
எதிர்காலத்தை,
ஐந்தறிவு உயிரொன்று
தேடிக் கண்டெடுத்தது//

இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு ஷீ நிசி

சந்ரு said...

//போதிமரத்தின் கீழே,
புத்தனமர்ந்தான்!
ஞானியாகினான்...

மீதி மரத்தின் கீழெல்லாம்
இவனமர்ந்தான்.....
??????////


சூப்பருங்க கலக்கிட்டிங்க பாஸ்............ நீங்க யாரு நம்ம பாஸ் .........

ஜீவா said...

அன்பு நண்பரே! புத்தனுக்கு போதிமரம், ஜோதிட பித்தனுக்கு ஏது மரம்.
சொன்ன சொல் கேட்டால் தின்ன நெல் தருவான் இந்த வரிகளை நான் மிகவும் ரசித்தேன், அருமை நண்பரே.
அன்புடன்
ஜீவா

ஷீ-நிசி said...

நன்றி புதியவன்!

நன்றி கவின்!

ஷீ-நிசி said...

நன்றி சசி!

எனக்கும் சொல்லுங்க... ஷீ-நிசி.
(வீட்ல வேற ஆள் இல்ல... பாத்து ராசா...)

ஆஹா! :) நன்றி அகநாழிகையாரே!

ஷீ-நிசி said...

நன்றி தேவா!

நன்றி ஜகதீஷ்!

நன்றி ப்ரியா!

நன்றி சந்ரு!

நன்று ஜீவா!

கலை - இராகலை said...

எங்க போய்டிங்க? வேறு ஏதவது விருந்தா? ஹிஹிஹி

ஷீ-நிசி said...

வாரம் வாரம் சென்னை போயிடறதால் வாரவிடுமுறைகளில் வர முடிவதில்லை கலை!

நாணல் said...

//ஆறறிவு உயிரொன்றின்
எதிர்காலத்தை,
ஐந்தறிவு உயிரொன்று
தேடிக் கண்டெடுத்தது.//

அழகான முரண்பாடான விஷ்யம்... :))

கவிதை நல்லா இருக்கு... வார்தைகளோட அழகா விளையாடி இருக்கீங்க.... :)

யாழினி said...

ம்... நன்றாக இருக்கிறது!

Poornima Saravana kumar said...

ஆறறிவு உயிரொன்றின்
எதிர்காலத்தை,
ஐந்தறிவு உயிரொன்று
தேடிக் கண்டெடுத்தது.
//

அருமை!

gayathri said...

ENNAGA ANNA NERAYA KILI JOSIYAM PAPENGALA

ஷீ-நிசி said...

நன்றி நாணல்!

நன்றி யாழினி!

நன்றி பூர்ணிமா!

நன்றி காயத்ரி! (கிளி ஜோசியம்லாம் பார்த்ததே இல்லைங்க :)

sakthi said...

/போதிமரத்தின் கீழே,
புத்தனமர்ந்தான்!
ஞானியாகினான்...

மீதி மரத்தின் கீழெல்லாம்
இவனமர்ந்தான்.....
??????////

rasithen

sakthi said...

/ஆறரிவு உயிரொன்றின்
எதிர்காலத்தை,
ஐந்தறிவு உயிரொன்று
தேடிக் கண்டெடுத்தது.//

nijam sudukindrathu