Thursday, 26 March 2009

பட்டாம்பூச்சி விருது!

22/03/2009 அன்று நண்பர் வேத்தி பட்டாம்பூச்சி விருது அளித்தார்.
அவருக்கு என் நன்றிகள்!

என்னிடம் சேர்ந்த பட்டாம்பூச்சி - பட்டாம்பூச்சிகளாய் பறக்கவேண்டும்..நான் இந்த விருதை மூன்று பேருக்கு அளிக்கவேண்டும். கீழே புகைப்படத்தில் இருக்கும் மூன்று அன்பர்களுக்கும் இந்த விருதை அளிக்கலாம் என்று முடிவெடுத்தேன்.



அகநாழிகை!
அகநாழிகை என அழைக்கபடும் பொன்.வாசுதேவன். ரசனையான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். கதை கவிதைகள் என எல்லா தளங்களிலும் முத்திரை பதிப்பவர். படிப்பவர்களை சலிப்படைய செய்திடாத நடையில் கதையெழுதும் ஆற்றல் கொண்டவர். உதா: "யமுனாவின் மனநோய்" என்ற கதை. இவரிடமிருந்து இன்னும் பல சிறந்த படைப்புகளை எதிர்பார்க்கிறேன். நீங்களும் இவருடைய தளத்தை உலாவுங்கள்.

வாழ்த்துக்கள் வாசுதேவரே!

சுரேஷ்!
சக்கரை என்ற ப்ளாக் தளத்தில் பல்வேறு ரசனையான பதிவுகளை தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் எழுதி கலக்கிவரும் நண்பர். அனுபவம், அரசியல் நையாண்டி, கவிதை கிறுக்கல்கள் என பல்வேறு பிரிவுகளில் தன் அனுபவங்களை தொடர்ந்து எழுதி வருகிறார். நீங்களும் அவ்வபோது இங்கே விஜயம் செய்யுங்கள்!

வாழ்த்துக்கள் சுரேஷ்!
கலை-இராகலை என்ற இவரின் வலைத்தளமே மிக அழகாக, தெளிவாக, கண்டபடி இல்லாமல் ஒரு ஒழுங்காக இருக்கும். வீடு சுத்தமாக இருந்தால்தானே விருந்தினரின் வருகை அதிகம் இருக்கும். வாழ்க்கைக்கு பயனுள்ள பல பதிவுகளை பகிர்ந்துகொள்பவர். இவரின் "தியானம்" பற்றிய பதிவு யாவருக்குமே பயனளிக்ககூடியது. தொடர்ந்து பல பயனுள்ள பதிவுகளை படைக்க வாழ்த்துகிறேன். உங்கள் பார்வையும் இத்தளத்தை பார்வையிடட்டும்.

வாழ்த்துக்கள் கலை!

உங்கள் தளத்தில் இந்த பட்டாம்பூச்சியை பறக்கவிட்டு, பட்டாம்பூச்சியை தொட்டால் இந்த பதிவுக்கு வருமாறு தொடர்பு கொடுத்துவிடுங்கள். நீங்கள் உங்களுக்கு பிடித்த மற்ற மூன்று ப்ளாகர்களுக்கு இந்த விருதை அளித்திடுங்கள்.

விருது பெற்ற தோழர்களுக்கு என் வாழ்த்துக்கள்!

அன்புடன்
ஷீ-நிசி

21 comments:

புதியவன் said...

வாழ்த்துக்கள் ஷீ-நிசி

வாழ்த்துக்கள் அகநாழிகை

வாழ்த்துக்கள் சுரேஷ்

வாழ்த்துக்கள் கலை - இராகலை

thevanmayam said...

வாழ்த்துக்கள்!!!
பட்டாம்பூச்சி விருதுக்கு!!!

தேவா..

thevanmayam said...

தாங்கள் கவிதைகளில் ஆர்வம் உள்ளவர் என்பதால் என் கவிதைகள் சில்: கருத்துரை தரவும்!!http://abidheva.blogspot.com/2009/01/5.html
http://abidheva.blogspot.com/2009/01/8.htm

Dr.தேவா

ஆ.முத்துராமலிங்கம் said...

வாழ்த்துக்களும் பாராட்டுகளும் ஷீ-நிசி

வாழ்த்துக்கள் அகநாழிகை

வாழ்த்துக்கள் சுரேஷ்

வாழ்த்துக்கள் கலை - இராகலை

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் தங்களுக்கும்

தங்களிடமிருந்து பெற்றவர்களுக்கும்

Suresh said...

நண்பர் ராஜ் அவர்களே ..
ரொம்ப ரொம்ப நன்றி ...
இது கண்டிப்பா ரொம்ப சந்தோசத்தையும் ஊக்கதையும் கொடுத்திருக்கு
இத பத்தி ஒரு பதிவு :-) இருக்கு
வார்த்தைகள் வர வில்லை :-) அண்ணே கையும் ஓடலே காலும் ஓடலே :-)
( கால் ஓடும் கை எப்படி ஓடும் ? இப்படி யாரும் கேட்டு மொக்கை போடதிங்க )
வடிவேல் கணக்கா ...
எனக்கா எனக்கா பொலம்ப விட்டுடிங்களே :-)
பத்து முறை கில்லி பார்த்து கொண்டேன் :-)

வேத்தியன் said...

வாழ்த்துகள், கொடுத்தவருக்கும் பெற்றவர்களுக்கும்...

கார்த்திகைப் பாண்டியன் said...

அதுக்குள்ளே கொடுத்தாச்சா.. வாழ்த்துக்கள் வாசு(அகநாழிகை), சுரேஷ் மற்றும் கலை..

அகநாழிகை said...

எனது எழுத்தின் மீது உங்கள் நம்பிக்கைக்கும்,
அன்புக்கும் மிக்க நன்றி… ஷீ-நிசி.

நண்பர்கள் சுரேஷ், கலை-இராகலை இருவருக்கும் வாழ்த்துக்கள்.

- பொன்.வாசுதேவன்

Suresh said...

நண்பர்கள் அகநாழிகை, கலை-இராகலை இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

குடந்தைஅன்புமணி said...

வாழ்த்துகள் தங்களுக்கும்

தங்களிடமிருந்து பெற்றவர்களுக்கும்

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் ஷீ-நிசி..

SASee said...

வாழ்த்துக்கள் கவி நிஷி அவர்களே

கலை - இராகலை said...

அடடா என்னை நம்பி விருது வழங்கி என்னை ஊக்கப்படுத்தும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் நண்பரே!

அதோடு புதிய நண்பர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.

நண்பர்கள் அகநாழிகை, சுரேஷ் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ரொம்ப சந்தோஷமா இருக்குங்க!!!!!!

கலை - இராகலை said...

வாழ்த்துக்கூறிய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Suresh said...

வாழ்த்துக்கூறிய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Suresh said...

http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_27.html
Padichittu solunga

பட்டாம்பூச்சி said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

கவின் said...

வாழ்த்துக்கள் பெற்றவருக்கும், வாங்கியவருக்கும்!

கமல் said...

நண்பா......உங்கள் கவிதைகளுக்குளேயே கரைந்து விடலாம் போல இருக்கு....

அந்தளவு தூரம் நல்ல எளிமையான சொல்லாடல்களினை உங்களது கவிதைகளில் காணக்கூடியதாக உள்ளது...



வாழ்த்துக்கள் நண்பரே...


தொடர்ந்தும் உங்கள் கவிதைகளால் எங்கள் அனைவரையும் கட்டிப் போடுவீர்கள் என்று நம்புகின்றேன்..!


தொடருங்கள். நண்பரே......!

ஷீ-நிசி said...

அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள்!