Monday, 23 March 2009

அவளைப் பற்றி!



1.

வானவில்லில்
கருப்பு நிறம் இல்லையாம்;
கருப்பு நிறத்தில் மட்டுமே
இரண்டு வானவில்லை காண்கிறேன்!

அடியே -உன்
புருவங்களைத்தானடி சொல்கிறேன்!





2.

நாம் தானே
வலை விரிப்போம்
மீன் பிடிக்க;

மீன்கள் ரெண்டும்
வலை விரிக்கின்றன
எனைப் பிடிக்க!

உன் விழிகளைத்தானடி சொல்கிறேன்!



3.


வழிந்து விழும் அருவிகள் தானே
தலையை நனைத்திடும்! -இங்கு
தலையிலிருந்துதான் அருவிகளே
விழுகின்றன!

உன் கூந்தலைத்தானடி சொல்கிறேன்!!

___________________________________

கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

ஆம்

இல்லை

41 comments:

thevanmayam said...

வானவில்லில்
கருப்பு நிறம் இல்லையாம்;
கருப்பு நிறத்தில் மட்டுமே
இரண்டு வானவில்லை காண்கிறேன்!

அடியே -உன்
புருவங்களைத்தானடி சொல்கிறேன்!///

கவிதை கலக்கல்!
படங்கள் மிக அருமை!

ஆதவா said...

ம்ம்... அப்படி இப்படியுமா, லே அவுட் செட்டாயிடுச்சு!!!
------------------

கருப்பு வானவில்,
மீன் விரிக்கும் வலை
வழிந்து விழும் அருவி என்று கலக்கியிருக்கீங்க. (உங்களுடைய புதிய கவிதையா?) இதற்கு முன்னர் படித்தமாதிரி தோணலையே!!)

தொடருங்கோ,... தொடருங்கோ!!

கலை - இராகலை said...

//வானவில்லில்
கருப்பு நிறம் இல்லையாம்;
கருப்பு நிறத்தில் மட்டுமே
இரண்டு வானவில்லை காண்கிறேன்!

அடியே -உன்
புருவங்களைத்தானடி சொல்கிறேன்!//

அட கருப்பு கலர் இல்லதான்! சூப்பரா இருக்கே!

ஹேமா said...

சரி......
இங்கேயும் ஒரு காதல் கிறுக்கல்(ன்).

அபுஅஃப்ஸர் said...

படத்திற்கு கவிதையா இல்லை கவிதைக்கு படமா

அபுஅஃப்ஸர் said...

//வானவில்லில்
கருப்பு நிறம் இல்லையாம்;
கருப்பு நிறத்தில் மட்டுமே
இரண்டு வானவில்லை காண்கிறேன்!//

கலக்கல் வரிகள் தல‌

அபுஅஃப்ஸர் said...

//நாம் தானே
வலை விரிப்போம்
மீன் பிடிக்க;

மீன்கள் ரெண்டும்
வலை விரிக்கின்றன
எனைப் பிடிக்க!
//
அழகான ரசனைகள் ரசிச்சேன்

அபுஅஃப்ஸர் said...

//வழிந்துவிழும் அருவிகள் தானே
தலையை நனைத்திடும்! -இங்கு
தலையிலிருந்துதான் அருவிகளே
விழுகின்றன//

ஃபோட்டோவிற்கு ஏற்ற வரிகள், நல்ல கலெக்ஷென்

ஷீ-நிசி said...

நன்றி தேவன்மயம்!

நன்றி ஆதவா! (ஆமாம், செட்டாக்கிட்டோம்ல)

ஷீ-நிசி said...

அட கருப்பு கலர் இல்லதான்! சூப்பரா இருக்கே!////


நன்றி கலை! (வானவில்லில் கருப்பு இல்லைன்றதை இப்பத்தான் கவனிக்கிறீங்களா?! :)

ஷீ-நிசி said...

சரி......
இங்கேயும் ஒரு காதல் கிறுக்கல்(ன்).///

கிறுக்கன் -னா கவிதை படைக்கும் ஆண்களைக் குறிக்கும்!

அப்ப கிறுக்கல்னா??!! - கவிதைகளைக் குறிக்குமா? - இல்லை கவிதை படைக்கும் பெண்களைக் குறிக்குமா?!

இதிலருந்து தெரியுது - கவிதைகள்னாலே அது பெண்கள்தான்! :)

சிந்தி........க்க வைக்கறீங்க ஹேமா!

நன்றி :)

ஷீ-நிசி said...

நன்றி அபுஅஃப்ஸர்!!

கவிதை எழுதிவிட்டு அத்ற்குப்பின் தான் அதற்கேற்ற புகைப்படங்களை தேடி இணைத்தேன்!

புதியவன் said...

மூன்று தேன் துளிக் கவிதைகளும் அழகு...

//நாம் தானே
வலை விரிப்போம்
மீன் பிடிக்க;

மீன்கள் ரெண்டும்
வலை விரிக்கின்றன
எனைப் பிடிக்க!

உன் விழிகளைத்தானடி சொல்கிறேன்!//

இது வெகு அழகு ஷீ-நிசி...

ஷீ-நிசி said...

நன்றி புதியவன்

ஆ.முத்துராமலிங்கம் said...

ராஜ் சார்
இக் கவிதைகள் எப்போது எழுதியது
முதல் கவிதையை யேதொ ஒரு பாடலில் இதன் சாயலில் கேட்ட நியாவகம்.

//நாம் தானே
வலை விரிப்போம்
மீன் பிடிக்க;

மீன்கள் ரெண்டும்
வலை விரிக்கின்றன
எனைப் பிடிக்க!//
இது கூட நெல்லை ஜெயந்தாவின் தினை மயக்கத்தில்
//அவள்
கண்களை பார்த்தால்
மீன்!
கண்களால்
அவள் பார்த்தால்
தூண்டில்!//
இக்கவிதையை நிவாகப் படுத்துகின்றது.
மூன்றமவது புதிது
இன்னும் யோசித்து எழுதியிருக்களாம் ஏன்றே சொல்வேன் நான்.

ஷீ-நிசி said...

நன்றி முத்துராமலிங்கம் நண்பரே!

இந்தக் கவிதை என்னுடைய இன்னொரு தளமான shenisi.blogspot என்ற தளத்தில் ஏப்ரல் 2007 -லேயே எழுதப்பட்ட கவிதை.

http://shenisi.blogspot.com/2007/04/blog-post_4980.html

கவிதையின் கரு ஒன்றாய் இருப்பதற்கு நான் என்ன பதிலளிக்கமுடியும்?

நெல்லை ஜெயந்தாவிடம் கூட யாராகிலும் இப்படி கேட்கலாம்...

நான் எழுதும் கவிதைகளைப் பொருத்தமட்டில் என் சிந்தனைக்கு எட்டியவைகளை மட்டுமே பதிவாக்கி பார்வைக்கு வைக்கிறேன்..

என்னுடைய கல்லூரி நாள் கவிதை மற்றும் தாய்மை கவிதை (தாய்மை கவிதை இங்கே இன்னும் பதிக்கவில்லை) நானே வேறொருவரின் பெயரில் இணையதளத்தில் பார்த்து வேதனை அடைந்திருக்கிறேன்...

இதற்கு தீர்வு விரைவில் புத்தகம் வெளியிடுவது மட்டுமே....

நன்றி தோழரே உங்களின் கருத்துக்களுக்கு!

வேத்தியன் said...

ஆஹா அசத்தலான ஆரம்பம் ஷீ...

வேத்தியன் said...

நாம் தானே
வலை விரிப்போம்
மீன் பிடிக்க;

மீன்கள் ரெண்டும்
வலை விரிக்கின்றன
எனைப் பிடிக்க!

உன் விழிகளைத்தானடி சொல்கிறேன்!//

ஆஹா சூப்பர்...
என்ன மீன்???
வழமையான கயல் மீனா???
அல்லது ஏதாச்சும் ஸ்பெஷல் மீனா???
:-)

வேத்தியன் said...

வழிந்து விழும் அருவிகள் தானே
தலையை நனைத்திடும்! -இங்கு
தலையிலிருந்துதான் அருவிகளே
விழுகின்றன!

உன் கூந்தலைத்தானடி சொல்கிறேன்!!//

நீளமான கூந்தல் அருவி போல...
எப்பிடிங்க இதெல்லாம்??
அருமையான வருணனை...
கலக்கல், வழமை போலவே...

ஆ.முத்துராமலிங்கம் said...

உங்களுதைய புத்தகத்தை
எதிர்பார்க்கின்றேன்

Anbu said...

எப்படி இதெல்லாம்!! ரொம்ப சூப்பர்

Anbu said...

படங்கள் மிக அருமை அண்ணா

நட்புடன் ஜமால் said...

\\கருப்பு நிறத்தில் மட்டுமே
இரண்டு வானவில்லை காண்கிறேன்!\\

அற்புத துவக்கம்

Suresh said...

அருமையாய இருந்தது உங்க பதிவு,
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்
வோட்டும் போட்டாச்சு :-)
http://sureshstories.blogspot.com/
நானும் நல்ல பதிவுகள் போட்டு இருக்கான் வந்து பாருங்க
படிச்சு பிடிச்ச வோட்ட போடுங்க :-)

ஆ.ஞானசேகரன் said...

//அட கருப்பு கலர் இல்லதான்! சூப்பரா இருக்கே!//

கருப்பு என்பது கலரற்றது என்பது அறிவியல்.... எல்லா கலரும் சேர்ந்த கலவை வெள்ளை... இதையும் கலர் என்று சொல்ல முடியாது... ஒரு பொருள் சிகப்பு கலர் என்றால் உண்மையில் அந்த பொருளால் கவரமுடியாத கலர் நம் கண்ணை அடைகின்றது, அதனால் அந்த பொருள் சிகப்பாக தெரியும்., உண்மையில் அது சிகப்பு இல்லை.....

அதவிடுங்கோ கவிதைக்கு அறிவியல் தேவையில்லை... கர்பனையும் அழகும் போதுமே.... நல்ல நடை நல்ல காதல்.....வாழ்த்துகள் நண்பரே

Poornima Saravana kumar said...

நாம் தானே
வலை விரிப்போம்
மீன் பிடிக்க;

மீன்கள் ரெண்டும்
வலை விரிக்கின்றன
எனைப் பிடிக்க!
//

இது நல்லா இருக்கே!!!

கிருஷ்ணா said...

நண்பரே..
//வழிந்து விழும் அருவிகள் தானே
தலையை நனைத்திடும்! -இங்கு
தலையிலிருந்துதான் அருவிகளே
விழுகின்றன!

உன் கூந்தலைத்தானடி சொல்கிறேன்!!//

உவமை நன்று. தலையோடு நின்று விட்டீர்களே! இன்னும் மேலே.. ஓ.. கீழே இறங்கி மற்ற அங்கங்களையும் அதே நாகரிகத்தோடு உவமையால் உருவகப்படுத்தி இருக்கலாமே.. ரசித்தேன்..!

கிருஷ்ணா said...

பெண்களின் உருப்போடு ஒப்பிட்டால்.. கறுப்பு வானவில்கூட அழகுதான் என்ற இருண்மைப் பண்பு பலே! பாவம் ஆண்கள்! ஹஹ

"கருவெளி" ராச.மகேந்திரன் [R.Mahendran] said...

உங்களின் இரசிப்பு திறனுக்கு என் (கலை) வணக்கம்...
நேர்த்தியான படத்தேர்வு இன்னும் அழகு...

சொல்லரசன் said...

புருவத்தையும்,விழியையும்,கூந்தலையும் தான்டிய நீங்கள், இதயத்தை தான்ட‌ மறந்தது ஏனோ?
அற்புத(ம்)மான கவிதை

ஷீ-நிசி said...

நன்றி வேத்தியன்

ஆஹா சூப்பர்...
என்ன மீன்???
வழமையான கயல் மீனா???
அல்லது ஏதாச்சும் ஸ்பெஷல் மீனா???
:-)////

விழிமீன்! :) வேத்தி!

ஷீ-நிசி said...

உங்களுதைய புத்தகத்தை
எதிர்பார்க்கின்றேன்///

நானும்தான்!

நன்றி மு.ரா நண்பரே! (முத்துராமலிங்கம்)

ஷீ-நிசி said...

நன்றி அன்பு!

நன்றி ஜமால் நண்பரே!

ஷீ-நிசி said...

நன்றி சுரேஷ்...

நான் உங்கள் ப்ளாகின் ஃபாலோயர் சுரேஷ்...

என் வருகை இருந்துக்கொண்டேயிருக்கும்!

ஷீ-நிசி said...

நன்றி ஞா.சே! (ஞானசேகரன்)

நல்லதொரு அறிவியல் விளக்கம்!

காதல் அறிவியலுக்கெல்லாம் அப்பாற்பட்டது அல்லவா நண்பரே! :)

ஷீ-நிசி said...

நன்றி பூர்ணிமா....

நன்றி கிருஷ்ணா!

நீங்க சொன்னதுக்கப்புறம்தான் யோசிச்சேன்.... அதானே இன்னும் வர்ணித்திருந்திருக்கலாமே....

இனி அவ்வபோது இதன் தொடர்ச்சி வரலாம் நண்பரே!

நன்றி!

ஷீ-நிசி said...

நன்றி கருவெளி!

நன்றி சொல்லரசன்....

அதானே, விரைவில் இதயத்தையும் தாண்டி வர்ணித்திடுவோம் அவளை! :)

SASee said...

ஷீ-நிசி அவர்களே,

அழகுப் பெண்ணின் கவிதை
இந்த ஆண் வடித்த
அழகு வரிகளில் தெரிகிறது!

இது கற் பணை அற்புதம்!

வென்று விட்டீர்கள்!

ஷீ-நிசி said...

நன்றி சசி!

sakthi said...

//நாம் தானே
வலை விரிப்போம்
மீன் பிடிக்க;

மீன்கள் ரெண்டும்
வலை விரிக்கின்றன
எனைப் பிடிக்க!
nalla karpanai

alagiya padangal

attagasam

sakthi said...
This comment has been removed by the author.