Saturday, 21 March 2009

அப்பா
தத்தி தத்தி நடந்தேன்!
கைப்பிடித்து நடக்கப் பழக்கினாய்!

தத்தி தத்தி பேசினேன்!
வாயசைத்துக் கற்றுக் கொடுத்தாய்!

இயற்கை அழைப்புகளால் நான்
ஈரமாக்கிய ஆடைகளை மாற்றி,
வேறு உடை அணிவித்து
அழகுப் பார்த்தாய்!

அன்று,
நான் குழந்தையாய் இருந்தேன்!

எல்லாம் நீயெனக்கு
செய்தாய் கருத்தாய்!


தத்தி தத்தி நடக்கிறாய்!

தத்தி தத்திப் பேசுகிறாய்!

இயற்கை அழைப்புகளால்
ஈரமாக்கினாய் ஆடைகளை....

இன்று
நீ குழந்தையாய் இருக்கிறாய்!

எல்லாம் உனக்கு யாரோ
செய்கிறார்கள் கடமையாய்!

உன்னால் நான் இன்று
மூன்றடுக்கு மாடியில்;
என்னால் நீ இன்று
முதியோர் இல்லத்தில்...

___________________________________

கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

ஆம்

இல்லை

42 comments:

ஆ.முத்துராமலிங்கம் said...

//இன்று
நீ குழந்தையாய் இருக்கிறாய்!//


//உன்னால் நான் இன்று
மூன்றடுக்கு மாடியில்;
என்னால் நீ இன்று
முதியோர் இல்லத்தில்...//

உண்மையான வரிகள்

புதியவன் said...

நாம் குழந்தையாக இருக்கும் போது தத்தி தத்தி நடப்பது பேசுவதும் கால மாற்றத்தில் அப்பா தத்தி தத்தி நடப்பது பேசுவதும் இயற்கையின் விதி அதை மாற்ற முடியாது...

//எல்லாம் உனக்கு யாரோ
செய்கிறார்கள் கடமையாய்!

உன்னால் நான் இன்று
மூன்றடுக்கு மாடியில்;
என்னால் நீ இன்று
முதியோர் இல்லத்தில்...//

இதை மாற்றுவது நம் மனதில் தான் இருக்கிறது...

எளிமையான வார்த்தைகளுடன் யதார்த்தமான கவிதை... அருமை...வாழ்த்துக்கள் ஷீ-நிசி

நட்புடன் ஜமால் said...

\\எல்லாம் உனக்கு யாரோ
செய்கிறார்கள் கடமையாய்!
\\

இந்த வரிகளின் வலி

அடுத்த பத்தியில் விளங்குகிறது ...

ஆதவா said...

ஹே ஹே வந்தாச்சு!!!

ஆதவா said...

வழக்கம் போல அருமை என்று சொல்லாமல்.... இது புதுமை என்றே சொல்லலாம்....

அப்பா கவிதை உங்களுடையதுதான் முதல்... நான் வாசிப்பது!!!

(நேரமில்லை) பிறகு வருகிறேன்

வேத்தியன் said...

என்ன சொல்வது நிசி..
அருமையிலும் அருமை..
(மைன்ட் வொய்ஸ் : வேத்தியா, கவிதைன்னா இப்பிடி தான்டா இருக்கணும்.. தெரிஞ்சுக்கோ..)

வேத்தியன் said...

இந்தக் கவிதைக்கு என்னால் முடிஞ்ச காணிக்கை..
தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போட்டாச்சுங்க...

ஷீ-நிசி said...

நன்றி முத்துராமலிங்கம் நண்பரே!

நன்றி புதியவன்! அதேதான் என் கருத்தும்... நாளைய தந்தைகளான இன்றைய பிள்ளைகளின் கையில்தான் இருக்கிறது.

ஷீ-நிசி said...

நன்றி ஜமால்!!

வா ஆதவா! சரி சரி பொறுமையா படிச்சிட்டு பதிலிடவும்!

நன்றி ஆதவா

ஷீ-நிசி said...

உங்கள் அன்பிற்கு என் நன்றிகள் பல வேத்தி!

ஜீவா said...

அன்பு நண்பா , அப்பா கவிதை, அப்பப்பா எந்தனை அழுகு, என் அப்பா தேய் பிறையானார், நான் வளர்பிறை ஆனேன், இன்று அவர் வாழ்க்கை அம்மாவாசையாய், உங்கள் கவிதையாய் படித்து படித்து நானும் கவிதை எழுத தொடங்கிவிட்டேன், வாழ்த்துக்கள்
அன்புடன்
ஜீவா

ஷீ-நிசி said...

நன்றி ஜீவா!

என்ன கவித்துவமாவே பின்னூட்டம் போட்டுட்டீங்க!!! :)

SASee said...

//எல்லாம் உனக்கு யாரோ
செய்கிறார்கள் கடமையாய்!

உன்னால் நான் இன்று
மூன்றடுக்கு மாடியில்;
என்னால் நீ இன்று
முதியோர் இல்லத்தில்...//


ஆழமாய் வடித்திருக்கிறீர்கள்
அற்புதமாய் மெய்ச்சொல்லி..

இது காலத்தின் கவிதையாய் எனக்கு தெறிகிறது.

Poornima Saravana kumar said...

ஒவ்வொன்றும் வலியைத் தாங்கி வந்த உண்மை வரிகள்!!

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான்.
எல்லாப் பிள்ளைகளும் இது போல இல்லாததும் உண்மை.

இருக்கிற குழந்தைகள் மாறக் காத்திருப்போம்.
அருமையான கவிதை.வெகு யதார்த்தம்.

"கருவெளி" ராச.மகேந்திரன் [R.Mahendran] said...

அனைவரும் அவ்வாறில்லை என்றாலும்...

பொதுவாக தலைமுறை மாறமாற கடமையுணர்வு,பொறுப்புணர்வு, சகிப்புத்தன்மை, விட்டுகொடுத்தல்... போன்ற பல பண்புகள் காணாமல் போய் கொண்டிருக்கின்றன என்பது உண்மைதான்.

இத்தனையையும் அப்பாவின் உறவில் கொண்டுவந்தது உங்கள் சிறப்பு...
வாழ்த்துக்கள்...


http://karuveli.blogspot.com/2008/12/blog-post_14.html

இது எங்கப்பா.... எனக்கு கொடுக்கும் ஞானம் என்றே சொல்வேன்...

ஹேமா said...

ஷி-நிசி,மனதை நனைக்கிறது இயல்பு வார்த்தையில் கவிதை.எஙகள் மனங்களைப் பிரித்தாலே நிறையக் கவிதைகள் எழுதிவிடலாம்.அருமை.

அகநாழிகை said...

//உன்னால் நான் இன்று
மூன்றடுக்கு மாடியில்;
என்னால் நீ இன்று
முதியோர் இல்லத்தில்...//

நல்ல கவிதை ஷீ-நிசி. அப்பாவை சிலாகித்து இதுபோல கவிதையெழுதும் மனம் கொண்டவர்களால் அப்பாவை கவனிக்காமல் கைவிட்டிருக்க வாய்ப்பு குறைவு.

yathra said...

குற்றவுணர்வு கனக்கிறது கவிதையில்,
இப்படித் தானிருக்கிறது வாழ்வு,
கவிதை அதை அருமையாய் தொட்டிருக்கிறது,
நல்லாருக்குங்க

செல்வமுரளி said...

வணக்கமுங்க... அருமையாவே எழுதியிருக்கிங்க

http://www.tamilvanigam.in

சக்தி சக்திதாசன் said...

அன்பின் ஷீ-நிசி ,

அர்த்தமுள்ள அருஐயான் கவிதை. இன்றைய பல பெற்றோர்களின் உண்மை நிலையை வடித்துக் காட்டியிருக்கிறீர்கள்

அன்புடன்
சக்தி

மிஸஸ்.டவுட் said...

//தத்தி தத்தி நடக்கிறாய்!

தத்தி தத்திப் பேசுகிறாய்!

இயற்கை அழைப்புகளால்
ஈரமாக்கினாய் ஆடைகளை....

இன்று
நீ குழந்தையாய் இருக்கிறாய்!

எல்லாம் உனக்கு யாரோ
செய்கிறார்கள் கடமையாய்!//

இந்த வரிகளை நினைத்துப் பார்த்தால், மனம் கனக்கிறது .எளிமையில் அழகு வகைக் கவிதை ,நன்று

nila said...

எல்லாம் உனக்கு யாரோ
செய்கிறார்கள் கடமையாய்!

சிறப்பான வரிகள் இவை... மகனாய் பிறந்தவர்கள் எல்லோர் மனதிலும் தம் வாழ்வில் ஒரு நொடியேனும் வரவேண்டிய வார்த்தைகள்...

(உங்கள் கருத்துக்களுக்கு நன்றி... என்னுடைய மற்ற கவிதைகளைப் படித்தீர்களா?
தங்களுக்கு நேரம் இருப்பின் படித்துப் பார்க்கவும்...)

கவின் said...

வலிகலந்த எளிமையான கவிதை!
கலக்கல்!

இப்னு ஹம்துன் said...

வலிமையான கருத்து - எளிமையான சொற்களில்

வேத்தியன் said...

உடனே வந்து பாருங்க...

அன்புடன் அருணா said...

ம்ம்ம்...மனம் நெகிழ்ந்தது....
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

//சிற்பியின் உளிகளுக்கு சமம்,
உங்கள் சொற்களின் துளிகள்!//

இது ரொம்ப அழகு...
அன்புடன் அருணா

unearth.com said...

Normally I dont read Puthukavithai. Once in a blue moon I see something real in them. The author pointed out the ugliest side of the present society. I hope this might open the minds of the sons before they become fathers. Nizam - Sri Lanka

கலை - இராகலை said...

//எல்லாம் உனக்கு யாரோ
செய்கிறார்கள் கடமையாய்!

உன்னால் நான் இன்று
மூன்றடுக்கு மாடியில்;
என்னால் நீ இன்று
முதியோர் இல்லத்தில்...//

உருக்கமான வரிகள்.

பட்டாம்பூச்சி said...

அருமையிலும் அருமை.

அபுஅஃப்ஸர் said...

மனது வலிக்கும் வரிகள் உங்கள் கவிதையில்

வந்தேன்.. படித்தேன்.. லயித்தேன்...ரசித்தேன்..

வாழ்த்துக்கள்

லோகு said...

//உன்னால் நான் இன்று
மூன்றடுக்கு மாடியில்;
என்னால் நீ இன்று
முதியோர் இல்லத்தில்...//

இல்லாத போதுதா அவங்களோட அருமை நமக்கு தெரியுது...

உங்க கவிதை என்னை அழ வைக்குது..
I Miss U Dad..

பழூர் கார்த்தி said...

அருமையான கவிதை, உண்மையான வரிகள், உணர்வுகள்..

தொடருங்கள் :-)

ஜி said...

ஏற்கனவே வந்த கருவா இருந்தாலும், கவிதை அருமை!!

ஷீ-நிசி said...

நன்றி சசி!

நன்றி பூர்ணிமா!

நன்றி வல்லிசிம்ஹன்!

நன்றி மகேந்திரன்!

நன்றி ஹேமா

நன்றி அகநாழிகை!

நன்றி யாத்ரா!

நன்றி செல்வமுரளி!

நன்றி சக்திதாசன்!

நன்றி மிஸஸ்.டவுட்!

நன்றி நிலா!

நன்றி கவின்!

நன்றி இப்னு ஹம்துன்!

நன்றி அருணா!

Thanks unearth.com!

நன்றி கலை

நன்றி பட்டாம்பூச்சி!

நன்றி அபுஅஃப்ஸர்!

நன்றி லோகு!

நன்றி பழூர் கார்த்தி

நன்றி ஜி

இந்த கவிதையை படித்து ருசித்து, உணர்ந்து ஆழமாய் பின்னூட்ட என் அன்பு உறவுகளே!! உங்கள் அனைவருக்கும் என் இதயத்தின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நண்பர் லோகு miss u dad என்று அவர் உணர்ந்து எழுதின அந்த வரிகளில் இந்த கவிதையின் நோக்கம் நிறைவேறியதாய் உணர்கிறேன்..

உங்கள் ஊக்கமான வரிகளால் என் ஆக்கங்கள் தொடரும்!

நன்றி! நன்றி !நன்றி!

Anbu said...

நன்றாக இருக்கிறது அண்ணா!![தாமதமான பீன்னூட்டத்திற்கு மன்னிக்கவும் அண்ணா]

ஷீ-நிசி said...

நன்றி அன்பு!

மன்னிப்புலாம் எதுக்கு அன்பு!

sakthi said...

ஆதவா said...

நன்றி மறப்பது நன்றன்று!!

பதிவாகவே காட்டிய ஜமாலுக்கு நன்றி!!!

பத்தாயிரம் கும்மிகளை பார்வையிட்டு மட்டுமே செய்திருந்த ஜமாலுக்கு மனமகிழ்ந்த பாராட்டுகள்!!!

வாழ்த்துக்கள்!!!!

nijam sudukindrathu tholare

sakthi said...

வேத்தியன் said...

என்ன சொல்வது நிசி..
அருமையிலும் அருமை..
(மைன்ட் வொய்ஸ் : வேத்தியா, கவிதைன்னா இப்பிடி தான்டா இருக்கணும்.. தெரிஞ்சுக்கோ..)

amanga nanum othukiren

ஷீ-நிசி said...

சக்திக்கு என் நன்றிகள்!

suryajeeva said...

எப்படிங்க அது, முதியோர் இல்லத்தில்.. உண்மையாகவா அல்லது கவிதை அழகுக்காகவா?