Thursday, 19 March 2009

என்னவளோ! அவனவளோ!

நண்பர் ஒருவர் ஒரு கவிதையொன்றை விரும்பி கேட்டார்...

மேற்கோள்:
எனது கல்லூரி நாட்களின் காதலி தற்பொழுது வேறொருவரை மணம் முடித்து நல்ல முறையில் சந்தோஷமாக குழந்தைகளுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கின்றார், ஒருவேளை என்னை மணம் முடித்திருந்தால்கூட இந்த அளவுக்கு சந்தோஷமாக இருந்திருப்பாளோ தெரியவில்லை. அவளது சந்தோஷத்தினை காண எனக்கு ரொம்பவும் சந்தோஷமாகவும் இருக்கிறது, இந்த சந்தோஷத்தை என்னால் தர முடியவில்லையே என்ற வருத்தமும் இருக்கிறது. இந்த சந்தோஷ/வருத்தத்தின் வெளிப்பாட்டை எனக்கு ஒரு கவிதையாக தர முடியுமா?


அந்த நண்பருக்காய் இந்த கவிதை
______________________________________________________________ஆயிரமாயிரம் ஆசைகள்
அமிழ்ந்துபோனதடி அடிமனதில்!

நீ இன்னொருவனின் கரம்
பற்றின அந்த நொடிப்பொழுதில்!

விழிகள் கண்ணீரை வடித்தே
வறண்டு போகின!

வருடங்களோ! உன்னை
நினைத்தே உருண்டு ஓடின!

இதோ!!!

என்னெதிரே வருகிறாள்,
மீண்டும் என் காதல் தேவதை...

அவளையே உரித்தபடி
அவள் கரங்களை பிடித்தபடி!
ஒரு குட்டி தேவதை!

அதிர்ஷ்ட தேவதையை
தோளோடு அணைத்தபடி,
அந்த அதிர்ஷ்டசாலி!

அவள் தங்க இதழ்களில்,
சிந்தி வழிந்தன புன்னகைகள்!

அவள் சங்கு கழுத்தில்,
மின்னி ஒளிர்ந்தன பொன்னகைகள்!

கண்கள் கண்ட காட்சியில்
மனம் புன்னகைத்தது!

என் அடிமனதில்,
அமிழ்ந்திருந்த ஆசைகளனைத்தும்

இதோ!
இவனால்!
இங்கே!
இன்று!

உயிர்த்தெழுந்திருக்கிறது!

நெருங்கிவிட்டாள்
அவனவள்! என்னருகே!

முட்டி கொள்ளுமோ?!
எங்களின் நினைவுகள்!

சற்றேனும் என்னால்,
சிறைப்பட்டு விடுமோ?!
அவளின் சந்தோஷங்கள்!

நொடியும் தாமதிக்காமல்
என் பாதங்களை,
திருப்பிக் கொண்டேன்!

அவள் நிழலும் கூட
என் மீது விழாதபடி..

அதோ!
என்னை கடந்து செல்கிறது!

என் காதல்...................

___________________________________

கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

ஆம்

இல்லை

27 comments:

கலை - இராகலை said...

நான் தான் !!

கலை - இராகலை said...

அட நான் தான் first னு போட வந்தேன் அதுக்குள்ள வந்துடுச்சி காரணம்??

கலை - இராகலை said...

நான் எனக்காக எழுதி கேட்டது போலவே இருந்தது. வாசித்து முடியும் போது எங்கோ பொய் திரும்பி வந்தேன் கண்கள் கலங்கி!

ச.முத்துவேல் said...

சூழலுக்கேற்ப கவிதை எழுதியிருக்கிறீர்கள்.இப்படி எழுதுவது ஒரு தனித் திறமை.ஒரு பலம்.அது உங்களுக்கு நன்றாகவே வாய்த்திருக்கிறது.திரைப்படங்களுக்குப் பாடல் எழுதுவதற்கு இதுமாதிரியான திறனே தேவை.உண்மையாகவே சொல்கிறேன். இத்திறமையை மேலும் வளர்த்துக்கொண்டால், நீங்களும் பெரிய நிலைக்கு வரமுடியும்.மீண்டும் சொல்கிறேன்.இது சம்பிரதாயமான,பாராட்டோ,
புகழ்ச்சியோ அல்ல./அவனவள்/
இந்த சொல் நல்லாயிருக்கு.

ஆ.ஞானசேகரன் said...

நன்றாக உள்ளது

ஆ.ஞானசேகரன் said...

நண்பர் கேட்டாரா? இல்லை!!!!!!

நட்புடன் ஜமால் said...

ஒருவேளை என்னை மணம் முடித்திருந்தால்கூட இந்த அளவுக்கு சந்தோஷமாக இருந்திருப்பாளோ தெரியவில்லை\\

இதுவே காதல்.

நட்புடன் ஜமால் said...

\\நொடியும் தாமதிக்காமல்
என் பாதங்களை,
திருப்பிக் கொண்டேன்!

அவள் நிழலும் கூட
என் மீது விழாதபடி..\\

மிக அருமை...

காதலின் சரியான பார்வை

காதலித்தவரின் மீது உள்ள காதல்

என்றென்றும் மாறாமல் மறையாமல்

ஷீ-நிசி said...

அட நான் தான் first னு போட வந்தேன் அதுக்குள்ள வந்துடுச்சி காரணம்??///


நீங்க நினைக்கும்போதே பதிவாகிடுச்சோ என்னவோ?! :)

நன்றி கலை உங்களின் அன்பிற்கு!

ஷீ-நிசி said...

நான் எனக்காக எழுதி கேட்டது போலவே இருந்தது. வாசித்து முடியும் போது எங்கோ பொய் திரும்பி வந்தேன் கண்கள் கலங்கி!///

முதன்முதலாய் நண்பருக்காக எழுதி படித்துவிட்டு அவர் சொன்னதும் இதுவே... கண் கலங்கியது என்று!

நன்றி கலை!

ஷீ-நிசி said...

முத்துவேல் அவர்களே,
என்னுடைய ஆசையும் அதுவே.. இரண்டு ஆசைகள் நிறைவேற வேண்டும். ஒன்று புத்தகம் போடுவது. இரண்டாவது எதாகிலும் ஒரு திரை இசைப் பாடலுக்காகிலும் பாடல் எழுதவேண்டும் என்பது.

எல்லாம் இறைவன் கையில்தான் உள்ளது.

உங்களின் மனம் திறந்த பாராட்டுகளுக்கு என் நன்றிகள் நண்பரே!

ஷீ-நிசி said...

நண்பர் கேட்டாரா? இல்லை!!!!!!////

நிஜமாத்தாங்க... ஆர்கூட்ல ஒரு கவிதை கம்யூனிட்டில என் கவிதைகள் படித்துவிட்டு எனக்கு தனிமடல் அனுப்பி கேட்டார்.

ஆனால் இதைப்போல வடுக்கள் 75% ஆண்களுக்கு இருக்கும் என்பது என்னுடைய யூகம் :)

நீங்களும் அந்த 75% வருகிறீர்களா?! :)

நன்றி நண்பரே
தொடர்ந்து வாங்க!

ஷீ-நிசி said...

இதுவே காதல்

மிக அருமை...
காதலின் சரியான பார்வை
காதலித்தவரின் மீது உள்ள காதல்
என்றென்றும் மாறாமல் மறையாமல்//

நன்றி ஜமால்....

இதுவே காதல் என்ற உங்களின் ஒற்றை வரியை படித்துவிட்டு சிறிது நேரம் யோசித்தேன்... ஆமாம் இதுதான் காதல் என்று மனதும் ஒத்துகொண்டது. காரணம், அவளை தன்னால் இந்த அளவிற்கு சந்தோஷமாக வைத்திருக்கமுடியுமா என்று யோசித்தான். இவன் கனவில் வாழ்பவன் அல்ல... நிஜத்தை ஏற்றுக்கொள்கிறவன்.

நன்றி ஜமால்!

புதியவன் said...

//நொடியும் தாமதிக்காமல்
என் பாதங்களை,
திருப்பிக் கொண்டேன்!

அவள் நிழலும் கூட
என் மீது விழாதபடி..//

ரொம்ப சோகமான நிகழ்வை அருமையா சொல்லியிருகீங்க ஷீ-நிசி...இந்தக் கவிதையை படித்து உங்கள் நண்பர் அவரின் மனக்காயங்களை சிறிதாவது ஆற்றிக்கொள்ளட்டும்...

ஷீ-நிசி said...

நன்றி புதியவன்...

மனது தற்காலிகமாக வேண்டுமானால் ஆறலாம்..

வலிக்குமென்று தெரிந்தும் உண்டாக்கிக்கொள்ளும் இரணம்தானே காதல்...

இரணம் தொடரும் மரணம் வரையிலும்...

நன்றி புதியவன்

வேத்தியன் said...

சூப்பர் ஷீ...
கலக்கல்...

ஜீவா said...

அன்பு நணபரே - கவிதை என்பது உணர்வுகளின் வெளிபாடு மட்டும் இல்லை, யார் ஒருவர் பிரபஞ்சத்தையும், அதன் அசைவுகளையும் உண்மையாய் ரசிக்கிறார்களோ அவர்களால் மட்டுமே கவிதை எழுத முடியும், அனைத்தையும் அன்போடு ரசிக்கும் திறமையை ஆண்டவன் உங்களுக்கு கொடுத்து உள்ளான், அடித்து தூள் கிளப்புகிறீர்கள் வாழுத்துக்கள்
அன்புடன்
ஜீவா

gayathri said...

நொடியும் தாமதிக்காமல்
என் பாதங்களை,
திருப்பிக் கொண்டேன்!

அவள் நிழலும் கூட
என் மீது விழாதபடி

supper pa

SASee said...

ஷீ நிசி அவர்களே

நீங்கள் இக் கவியை
நடு நிசியில் கற்பறைத்தீர்களோ
தெரியவில்லை
உளிச்சொற்களாய்
இருக்கிறது

மனதை கவர்ந்த கவிதை
எனக்கும் பொருந்துவதாய்
புரிகிறது.

(இன்று உங்கள் வலை எனக்கு புதிது)

ஷீ-நிசி said...

நன்றி வேத்தி!!

ஷீ-நிசி said...

நன்றி ஜீவா, உங்களின் ஆத்மார்த்தமான பாராட்டுதலுக்கு!

ஷீ-நிசி said...

நன்றி காயத்ரி!

நன்றி சசி! நான் நடுநிசியில் எழுதவில்லை..... :)

என் கவிதை உளிச்சொற்களா என்று தெரியாது....ஆனால் நீங்கள் சொன்னதெல்லாம் உங்கள் உள்ளத்தின் சொற்கள் :)

பட்டாம்பூச்சி said...

மிக அருமை :)

ஹேமா said...

கலை சும்மா சொல்லவேணாம்.
உங்களுக்கு நீங்களே எழுதி,அதுக்கு முதலா பின்னூட்டமும் போட்ட முதல் ஆள் நீங்கதான்.

ஹேமா said...

ஷி-நிசி,காதல் கை கூடாவிட்டாலும் தன் நினவுகளோடு கூடிக் கிடப்பதை ஒவ்வொரு வரியிலுள்ள ஏக்கம் அருமையாகக் காட்டிப் போகிறது காதலொடு.

Shakthiprabha said...

மனசு கனக்குது.

எல்லார் வாழ்விலும் என்னவளாய் இருக்கவேண்டிய அவனவள்கள், அல்லது என்னவனாய் இருக்கவேண்டிய அவளவன். இருப்பினும் எல்லோரும் எங்கும் மகிழ்ச்சியாய் இருப்பதொன்றே மனம் நிறைவுக்குறியது.

நானும் அவளும், இவனும் அவனும் ஒன்று சேரும் மாயப் புள்ளிகள்.

ஷீ-நிசி said...

நன்றி பட்டாம்பூச்சி!

நன்றி ஹேமா!

நன்றி சக்திபிரபா!