Tuesday, 17 March 2009

கல்லூரி இறுதி நாள்!





விடைபெறுகின்றன
பட்டாம்பூச்சிகள்!

கற்பித்தவனை
கண்டு ஆசி பெற்றன!
கண்டித்ததையும்
தண்டித்ததையும் மறந்து.....

நெஞ்சிலே,
வலிக்கும் வலிகளோடும்!
கண்களிலே,
துளிர்க்கும் துளிகளோடும்!

உருவங்களுக்கு இடையில்
புருவங்கள் சுருக்கி,
தேடிக்கொண்டிருக்கின்றன -சில
நொறுங்கிய இதயங்கள்!

பழகியதை தேடி பல!
விலகியதை தேடி சில!

கையெழுத்துகளில்,
இனிக்கும் நினைவுகளை
கலந்து எழுதின -எல்லா
மின்மினி பூச்சிகளும்!

பனிப் போரிலிருந்த புறாக்கள்
பலவும் சமாதானமாகின..
இனிப் பாரிலெந்த பகையுமின்றி
உலவுமிந்த சமாதான புறாக்கள்!

நேற்றுவரை
அழகிய நட்பை
சுமந்து அலைந்தோம்!

நாளை முதல்
பழகிய நினைவுகளை
சுமந்து அலைவோம்!

நாம் சுற்றித் திரிந்து
தேன் குடித்த மலர்வனம்
நாளை பறக்க இருக்கும்
பட்டுப்பூச்சிகளுக்காய்..
மணம் வீசும்......

அந்த வனத்தில் வீசிய மணம்
நம் மனதில் வீசும் தினம்...

___________________________________

கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

ஆம்

இல்லை

42 comments:

ஆதவா said...

அழகா இருக்குங்க நிசி, குறிப்பாக சந்த சொற்கள் அருமை.

பழகியதை தேடி பல!

விலகியதை தேடி சில!

இந்தவரிகளின் உள்ளர்த்தம் எவ்வளவு எவ்வள்வு!!! வாழ்த்துக்கள் ஷீ!!

ஆதவா said...

அந்த வனத்தில் வீசிய மனம்
நம் மனதில் வீசும் தினம்...////


கலக்கல்!!!!!

வேத்தியன் said...

கல்லூரி பத்தின கவிதையா???
இதோ வரேன்...

வேத்தியன் said...

// கற்பித்தவனை
கண்டு ஆசி பெற்றன!
கண்டித்ததையும்
தண்டித்ததையும் மறந்து..... //


எவ்ளோ தான் நடந்திருந்தாலும் எல்லாவற்றையும் மறந்து விடுவோம் ...

வேத்தியன் said...

// பழகியதை தேடி பல!
விலகியதை தேடி சில! //


அட அட அட அட...
கலக்கல்...

வேத்தியன் said...

// அந்த வனத்தில் வீசிய மனம்
நம் மனதில் வீசும் தினம்... //


அருமை நண்பா...

வேத்தியன் said...

தமிழ்மணம்,தமிழிஷ்,ntamil ஓட்டு போட்டாச்சு...
:-)

ஷீ-நிசி said...

வேத்தி என்ன பிரிச்சி மேய்ஞ்சிருக்கீங்க :)


நன்றி பா!

ச.முத்துவேல் said...

எடுத்துக்கிட்டிற பாடுபொருளே, நெகிழச் செய்யக்கூடியதுங்கறதால,இயல்பா,அதேசமயம்
அனுபவிச்சு எழுதியிருக்கறீங்க. நல்லாருக்கு.
/மனம் வீசும்....../
/அந்த வனத்தில் வீசிய மனம்/
மனமா? மணமா?
தப்பா நினைக்காதீங்க. நிங்க சொல்றது
இதுல எது?

ஷீ-நிசி said...

Thanks Muthuvel, Neenga solrathu sarithan, manam enpathu thavaruthan. Sari seihu vitten,. Sutti kaatiyamaiku nandri.

யாழினி said...

//நேற்றுவரை
அழகிய நட்பை
சுமந்து அலைந்தோம்!

நாளை முதல்
பழகிய நினைவுகளை
சுமந்து அலைவோம்//

இந்த வரிகள் மிகவும் நன்றாக உள்ளன...

கலை - இராகலை said...

கல்லூரி இறுதி நாள்!"

ஆஹா டொப்பிக்க பாத்ததுமே ஓடோடி வந்தேன். மறுபடியும் பாடசாலை போகனும் போல இருக்கு. இப்பபையாவது போய் படிக்க வேண்டும் என்றுதான்.

கலை - இராகலை said...

//கற்பித்தவனை
கண்டு ஆசி பெற்றன!
கண்டித்ததையும்
தண்டித்ததையும் மறந்து....//

கலை - இராகலை said...

பாடசாலையை விட்டு வந்து 5 வருஷமா ஆகுது. நீங்க?

top highlight

//நாம் சுற்றித் திரிந்து
தேன் குடித்த மலர்வனம்
நாளை பறக்க இருக்கும்
பட்டுப்பூச்சிகளுக்காய்..
மணம் வீசும்......//

புதியவன் said...

கவிதை படித்து கல்லூரி நினைவுகள் மனதில் வந்து செல்வதை தடுக்க முடியவில்லை ஷீ-நிசி...

//உருவங்களுக்கு இடையில்
புருவங்கள் சுருக்கி,
தேடிக்கொண்டிருக்கின்றன -சில
நொறுங்கிய இதயங்கள்!//

இந்த வரிகள் மிக அருமை...

ஷீ-நிசி said...

நன்றி யாழினி!

தொடர்ந்து கருத்துக்களை இடுங்கள் :)

ஷீ-நிசி said...

நான் 10-ஆம் வகுப்பு முடிச்சிட்டு, நேரா I.T.I சேர்ந்துட்டேன். அப்புறம் DME தொலைதூர கல்வி வழியா படிச்சேன். அதனால கல்லூரி வாழ்க்கையை நாம தவறவிட்டுடோமேனு எனக்கு இப்பவும் வருத்தம் உள்ளூர இருந்துட்டுதான் இருக்குது. இதில் வருகின்ற பல வரிகள் என் பள்ளி வாழ்க்கையில் நடந்தவைகளும் கூட.. பள்ளி என்பதே கல்லூரியின் முதல் படிக்கட்டுதானே!!

அட! கல்லூரி போனாதான் அதன் சுவை தெரிஞ்சிக்க முடியுமா என்ன? அந்த சுவையை ரசித்த உள்ளங்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பே இந்த கல்லூரி இறுதி நாள் கவிதை!

நன்றி கலை! நிறைய சிந்திக்க வச்சிட்டீங்க :)

ஷீ-நிசி said...

வாங்க புதியவன்! பலமுறை எனக்கு பிடித்த வரிகளையே நீங்களும் கோடிட்டு காட்டறீங்க....


தொடர்ந்து வருகையிடுங்கள்! :)

நன்றி தோழரே!

gayathri said...

நேற்றுவரை
அழகிய நட்பை
சுமந்து அலைந்தோம்!

நாளை முதல்
பழகிய நினைவுகளை
சுமந்து அலைவோம்//

supper pa

ஷீ-நிசி said...

ஹாய் காயத்ரி!

முதல் வருகைக்கு நன்றி :)

தொடர்ந்து வாங்க!

ஹேமா said...

ஓ...ஷி-நிசி மனசைக் கிளறி விட்டிட்டீங்க.பாடசாலை-பள்ளி ஞாபகங்கள் உதைக்கின்றன.
அழவேணும் போல இருக்கு.

கவின் said...

கலக்கல் வரிகள்.... கல்லூரிநாட்களின் பசுமை... சேகங்களினூடு!

கவின் said...

ஹேமா said...

ஓ...ஷி-நிசி மனசைக் கிளறி விட்டிட்டீங்க.பாடசாலை-பள்ளி ஞாபகங்கள் உதைக்கின்றன.
அழவேணும் போல இருக்கு.
*****************
நல்லா அழுங்க யாரு வேனாம்னு சொன்னா!

ஷீ-நிசி said...

ஹேமா! நோ! நோ! அழப்படாது! :)!!!

நன்றி ஹேமா!

ஷீ-நிசி said...

வாப்பா கவின்! என்ன ஆளை காணலயேன்னு பார்த்தேன்!

நன்றி பா!

நட்புடன் ஜமால் said...

\\நேற்றுவரை
அழகிய நட்பை
சுமந்து அலைந்தோம்!

நாளை முதல்
பழகிய நினைவுகளை
சுமந்து அலைவோம்!\\

அருமை

இரசித்-தேன்

ஷீ-நிசி said...

வாங்க ஜமால்! உங்களின் முதல் வருகையிது!

தொடர்ந்து வாருங்கள்

அன்புடன்

ஷீ-நிசி

நட்புடன் ஜமால் said...

\\தொடர்ந்து வாருங்கள்\\

அவசியம் வருவோம் அண்பரே!

கோவி.கண்ணன் said...

//நேற்றுவரை
அழகிய நட்பை
சுமந்து அலைந்தோம்!

நாளை முதல்
பழகிய நினைவுகளை
சுமந்து அலைவோம்!//

அருமையாக இருக்கிறது !

அகநாழிகை said...

//அந்த வனத்தில் வீசிய மணம்
நம் மனதில் வீசும் தினம்...//

தினமும் இல்லையென்றாலும் அடிக்கடி. மறக்க முடியுமா அந்த இனிய நாட்களை... நல்ல கவிதை. கல்லூரி ஞாபகங்களை நினைக்க வைக்கிறது.

தாரணி பிரியா said...

//உருவங்களுக்கு இடையில்
புருவங்கள் சுருக்கி,
தேடிக்கொண்டிருக்கின்றன -சில
நொறுங்கிய இதயங்கள்//

//பனிப் போரிலிருந்த புறாக்கள்
பலவும் சமாதானமாகின..
இனிப் பாரிலெந்த பகையுமின்றி
உலவுமிந்த சமாதான புறாக்கள்!//

இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு ஷீ‍ நிசி. அருமையா இருக்கு கவிதை.

தாரணி பிரியா said...

ஆனா படிச்சு முடிச்சுட்டு திரும்பவும் கல்லூரியில வேலை பாக்கிற எனக்கு கல்லூரி கொஞ்சம் கசப்பாதானே இருக்கு என்ன செய்ய ")

தாரணி பிரியா said...

அப்புறம் நாங்களும் உங்க ரசிகை ஆகிட்டோமில்ல

ஷீ-நிசி said...

வாங்க கோ.வி நலம்தானே

நன்றி நண்பரே!

ஷீ-நிசி said...

அகநாழிகைக்கு நண்பருக்கு என் நன்றிகள்!

உண்மைதான், யாரால்தான் மறக்கமுடியும் நண்பரே!

ஷீ-நிசி said...

தாரணி... காலேஜ்ல வேலைசெய்யறது.. படிக்கிறபோது இருக்கற சந்தோஷத்திற்கு நிச்சயமாய் ஈடாகாது தான்...

நன்றி தாரணி! நாங்களும் உங்க ரசிகன் தானே :)

Suresh said...

Arumaiaya soli irunthinga...

அந்த வனத்தில் வீசிய மனம்
நம் மனதில் வீசும் தினம்

romba arumai apprum vottu pottachu in sangamam poti maximum than

வழிப்போக்கன் said...

பழகியதை தேடி பல!
விலகியதை தேடி சில!//

இந்த வரிகள் தான் என்னை புல்லரிக்க வைத்தது..

ஷீ-நிசி said...

நன்றி வழிப்போக்கன்!

வெங்கிராஜா said...

உங்களது சங்கமம் போட்டி கதை குறித்த எனது எளிய கருத்துக்களை இங்கே உரைத்திருக்கிறேன். ஒரு முறை வாசித்து பாருங்களேன்.
http://paathasaari.blogspot.com/2009/04/blog-post_01.html

kaviya said...

nan mei silirthen

Siva sankar said...

nice