Monday, 16 March 2009

மெளனமான நேரம்



உன் உதடுகளின் ரேகைளில்
ஜாதகம் பார்த்திட,
என் உதடுகள் பிரியப்படுகின்றன!

உன் காதின் வளைவுகளை
கொஞ்சம் வருடி விட,
என் விரல்கள் பிரியப்படுகின்றன!

உன் கன்னங்களால்....
என் மார்பின் ரோமங்களை!
முத்தமிடு முழுமதியே -நீ
என் இதயத்தின் நிம்மதியே!

இதோ!
உன் இதயம் துடிக்கின்ற சத்தம்
என் இதயத்தில் நீ கேட்கின்றாய்!

எனக்காய் மட்டுமே துடித்திடுமா
என்று என்னை நீ கேட்கின்றாய்!

சீ! என்று

உன் முதுகினை சற்றே
என் கரங்களினிடையில்
சிறையிலிடுகிறேன்...

விந்தை!!
உன்னை சிறையிலிட்டு
உன்னிடமே கைதியானேன்..

உன் கன்னங்கள்
என் இரு உள்ளங்கைகளில்
தஞ்சமடைந்தன!

தலை சாய்த்து
பார்க்கும் என்னை,
தலை உயர்த்தி
பார்க்கிறாய் பெண்ணே!

நம் இரு விழிகளும
பேசிக்கொள்கின்றன!

நம் இரு உதடுகளும்
பார்த்துக்கொள்கின்றன!

நொடியின் கால அளவென்பது
ஒரு சிட்டிகையின் நேரம்!
ஒரு கண்ணிமைக்கும் நேரம்!

இனி
நம் உதடுகள் நெருங்கி
வந்துக்கொண்டிருக்கும்
நேரங்களையும்
சேர்த்துக்கொள்ளலாம்!

இதழ்களுக்கு
இடையிலான இடைவெளி
குறைந்துக்கொண்டேயிருக்கிறது!

இதயத்தில் உண்டான
இதமான வலி
கூடிக்கொண்டேயிருக்கிறது!

சட்டென்ற ஓர் கணத்தில்
இதழ்கள் நான்கும்
இணைந்துக்கொண்டன!

வயதுக்கு வராத கண்களை
இமைகள் நான்கும்
மூடிவிட்டன..

கூந்தல்களினிடையில் விரல்களும்,
விரலிகளினிடையில் கூந்தலும்,
சிக்கிக் கொண்டன!

எதையும் தொலைக்காமலே
எதையோ தேடிக்கொண்டிருந்தன!

ஜாதகம் பார்த்த -என்
உதடுகளிரண்டும் சொன்னது,

உன் உதடுகளுக்கும் ஜாதகம்
தெரிகின்றதாம்....

___________________________________

கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

ஆம்

இல்லை

31 comments:

Purushothaman said...

Very Nice. Well done. Keep it up.

ஸ்ரீமதி said...

அருமை :))

புதியவன் said...

கவிதை நல்லா இருக்கு ஷீ-நிசி...

//விந்தை!!
உன்னை சிறையிலிட்டு
உன்னிடமே கைதியானேன்..
//

இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்...

ஆதவா said...

முழுக்க முழுக்க காதல் தடவப்பட்ட கவிதை. குழந்தையின் கையில் எச்சிலாக ஒழுகுகிறது இருவருக்குமிடையேயான காதல்... அருமையான நேரம்... இது,.. மெளனமான நேரம்.

வழக்கம்போல முத்திரை!!!

ஷீ-நிசி said...

நன்றி ஆதவா!

ஊர் சுற்றி said...

ஜாதகம் பார்க்கறதுல இது புதுமாதிரியா இருக்கே! எந்த மாதிரியான ஜாதகம் இது?

ஷீ-நிசி said...

ஹி! ஹி! அதெல்லாம் சின்ன வயசு பசங்களுக்குத்தான் புரியும்... எங்களை மாதிரி! :)

நன்றி நண்பரே! (சும்மா)

Dhavappudhalvan said...

காதல் வண்டுகள் ஒன்றின் இதழிலிருந்தே மற்றொன்று தேனை உறுஞ்சி கொள்கிறதே

கலை - இராகலை said...

நல்ல வேளை தனியா இருந்து முத்தத்தில் மூழ்கினேன்!!
அருமை!!

கலை - இராகலை said...

//வயதுக்கு வராத கண்களை
இமைகள் நான்கும்
மூடிவிட்டன..//

சூப்பர்.

வேத்தியன் said...

இப்போ தான் வந்தேன்...
கொஞ்சம் வேலை...
பிறகு வந்து படிச்சுட்டு பின்னூட்டம் போடுறேன்...
கட்டாயமா படிக்கிறேன்...

ஷீ-நிசி said...

நன்றி தவப்புதல்வன்....

ஆமாம்! தேன் குடிக்கும் வண்டுகள் அவர்களின் இதழ்கள்! :)

ஷீ-நிசி said...

படிக்காம போயிடுவீங்களா?! :)

ரசிச்சி படிச்சி உங்க கருத்தையும் போடுங்க வேத்தி!

ஷீ-நிசி said...

நன்றி கலை அவர்களே!

தனியா இருக்கும்போது படிக்கனும்... சேர்ந்து இருக்கும்போது படைக்கனும் :)

கலை - இராகலை said...

//
தனியா இருக்கும்போது படிக்கனும்... சேர்ந்து இருக்கும்போது படைக்கனும் :)//

அடடா இதுவும் சூப்பரா இருக்கே நண்பரே!

ஷீ-நிசி said...

நீங்க பயங்கர மூட்ல :) இருக்கீங்க போல.... கலை!

ஹேமா said...

ஷி-நிசி வணக்கம்.நன்றியும் கூட.இப்போ என்னால் பின்னுட்டம் இடமுடியும்.சந்தோஷமாயிருக்கிறது.போன ஒரு கவிதைக்கு தமிழிஸ் ல் பின்னூட்டம் போட்டேன்.

இந்தக் கவிதை காதல் சொட்டச் சொட்ட கவித் தலைப்பே நனைந்து மௌனமாய் தவிக்கிறது.
அருமையான காதல் கவிதை.இனி அடிக்கடி சந்திக்கலாம்.

ஷீ-நிசி said...

ஹாய்! ஹேமா! இதுதான் என் ப்ளாகில் உங்கள் முதல் விமர்சனம் என்று நினைக்கிறேன். :)

நன்றி! இனி அடிக்கடி நீங்கள் வரவேண்டும்! :)

ஆதவா said...

layout மாத்தியாச்சா... நல்லா இருக்குங்க... வெகு சீக்கிரம் லோட் ஆவுது!!

ஷீ-நிசி said...

சீக்கிரம் லோட் ஆகுதா.... பரவாயில்லையே... அப்ப இதையே வச்சிக்கலாம்ல...

நன்றி ஆதவா!

வேத்தியன் said...

வந்துட்டேன்...
படிச்சுட்டு வரேன்...

வேத்தியன் said...

// உன் உதடுகளின் ரேகைளில்
ஜாதகம் பார்த்திட,
என் உதடுகள் பிரியப்படுகின்றன! //


ஓஹோ...
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...
:-)

வேத்தியன் said...

// இதோ!
உன் இதயம் துடிக்கின்ற சத்தம்
என் இதயத்தில் நீ கேட்கின்றாய்! //


அட...

வேத்தியன் said...

// விந்தை!!
உன்னை சிறையிலிட்டு
உன்னிடமே கைதியானேன்.. //


சூப்பர்ப்...
அருமையான வரிகள்...

வேத்தியன் said...

// நம் இரு விழிகளும
பேசிக்கொள்கின்றன! //


காதல்...
காதல்...

வேத்தியன் said...

// நம் இரு உதடுகளும்
பார்த்துக்கொள்கின்றன! //


சந்திச்சிருந்தா இன்னும் நல்லா இருக்கும்...
:-)))

வேத்தியன் said...

// ஜாதகம் பார்த்த -என்
உதடுகளிரண்டும் சொன்னது,

உன் உதடுகளுக்கும் ஜாதகம்
தெரிகின்றதாம்.... //


ரசிச்சேன்...

வேத்தியன் said...

தமிழ்மணம்,தமிழிஷ் ஓட்டு போட்டாச்சு...
:-)

ஷீ-நிசி said...

நல்ல ரசனையான மனிதனய்யா நீர்!

நன்றி வேத்தி!

Subash said...

really nice one

ஷீ-நிசி said...

நன்றி சுபாஷ்!

தொடர்ந்து வருகையிடுங்கள்!