Tuesday, 10 March 2009

நாலிதழ்கள்!
நேற்றிரவு,
நீயும் நானும்
முத்தமிட்டு கொண்டோமே....

அவை நாளிதழ்களில் வந்தன;
தெரியுமா?! என்றான்!

அச்சத்தின்
உச்சத்திற்கே சென்றேன்!!

எனைப்பார்த்து,
புன்னகைத்தபடியே
அவன் கூறினான்!!

உன் இதழ்கள் இரண்டு!
என் இதழ்கள் இரண்டு!

பின்னென்ன..
நாலிதழ்கள்தானே!!!

25 comments:

Joe said...

நேற்றிரவு,
நீயும் நானும்
முத்தமிட்டு கொண்டோமே....
அவை நாளிதழ்களில் வந்தன;
தெரியுமா?! என்றான்!

அச்சத்தின்
உச்சத்திற்கே சென்றேன்!!

So you kissed a boy? ;-)

ஷீ-நிசி said...

இந்த கவிதை ஒரு பெண்ணின் பார்வையில்....

நன்றி ஜோ!

அப்பாவி தமிழன் said...

இங்கே உங்கள் வலைப்பதிவை இணைத்துக்கொள்ளுங்கள் http://www.tamil10.com/topsites/

pukalini said...

அவை நாளிதழ்களில் வந்தன;
தெரியுமா?! என்றான்!
?

ஆ.ஞானசேகரன் said...

வார்த்தையில் விளையாட்டு தமிழில் உள்ள பெருமை

viji said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

திகழ்மிளிர் said...

வார்த்தைகளின்
வண்ணக் கோலம்

அருமை

வாழ்த்துகள்

வால்பையன் said...

அடடே

நல்லாயிருக்கே!
முக்கியமா எனக்கே புரியுதே!

கோவி.கண்ணன் said...

:)

நல்லா இருக்கே, தலைப்பு தவறோ என்றெண்ணினேன்.

"கருவெளி" ராச.மகேந்திரன் [R.Mahendran] said...

கவிகள் வார்த்தையில் விளையாடுவது என்பது இதுதானோ?! நீங்கள் எழுத்தில் விளையாடுகிறீர்கள்..( ல -- ள) நல்ல ஆட்டம்..
-------------------------

இன்னும் கத்துக்க ஆரம்பிக்கவே நிறைய இருக்கு தம்பி!(எனக்கு நானே... மனசுக்குள் கூறியது... உங்களுக்கும் கேட்கட்டுமே! நீங்கள் வாசிக்கும் போது...)

ஜீவா said...

கவி தை தை என்று ஆட்டம் போடுகின்றன உங்கள் எழுத்தில்-அருமை
அன்புடன்
ஜீவா

ஷீ-நிசி said...

புகழினி உங்கள் கேள்விக்குறியின் அர்த்தம் புரிகிறது..

இக்கவிதை ஒரு பெண்ணின் பார்வையில்.

அப்பெண்ணின் காதலன் அவளிடம் குறும்பு செய்ய எத்தனிக்கிறான்... நேற்றிரவு நடந்த சம்பவம் பத்திரிக்கையில் வந்தது என்ற தொனியில் நாளிதழ் என்று கூறுகிறான்... அவளுக்கோ அதிர்ச்சி... நியாயம்தானே இருட்டில் நடப்பவை வெளிச்சத்திற்கு வந்துவிட்டால்.... உடனே அவன் சொன்ன வார்த்தையை கொண்டு அவன் அவளை சமாளிக்கிறான்... இப்பொழுது அவன் வார்த்தை நயத்தை மாற்றிக்கொள்கிறான்.. நாளிதழ் என்று சொன்னதை நாலிதழ் என்று சொல்கிறான். அதற்கு விளக்கமும் அளிக்கிறான்.. உன்னிதழ் இரண்டு என்னிதழ் இரண்டு என்று..

நன்றி புகழினி!

ஷீ-நிசி said...

நன்றி அப்பாவி தமிழன்! நிச்சயம் இணைத்துக்கொள்கிறேன் நண்பரே!

******

ஆம் ஞானசேகரன் அவர்களே, தமிழுக்கே உள்ள சிறப்புகள் இவைகள்! நன்றி தங்களின் வருகைக்கு!!

******

நன்றி விஜி! நிச்சயம் இணைத்துக்கொள்கிறேன்!

******

ஷீ-நிசி said...

நன்றி திகழ்மிளிர் அவர்களே! நல்ல வித்தியாசமான ஆனால் அழகான பெயராகவும் உள்ளது...

தொடர்ந்து உங்கள் கருத்துக்களை தாருங்கள்!

ஷீ-நிசி said...

நன்றி அருண்! (வால்பையன்) அடிக்கடி வரனும்.. புரியுதா இல்லையான்னு தெளிவா சொல்லிடனும்! :)

ஷீ-நிசி said...

நன்றி கோவி. கண்ணன் அவர்களே! உங்களைப்போலவே தலைப்பு தவறென்று எண்ணி பின் படித்து புரிந்தார்கள்.. :)

தொடர்ந்து கருத்திடுங்கள் நண்பரே!

ஷீ-நிசி said...

நன்றி மகேந்திரன் அவர்களே! ஆமாம்! இந்த உலகில் அனைவருமே கத்துக்கொள்வதற்கு எப்பொழுதுமே மீதம் உள்ளது... யாருமே முழுமையடைந்தவர்களல்ல....

நன்கு சிந்திக்கவைத்தது உங்கள் வார்த்தைகள்!

நன்றி நண்பரே!

ஷீ-நிசி said...

ஜீ வா வா னு கூப்பிடத்தான் இப்படி தை தைனு குதிக்கிறது போல என் கவிதை :)

நன்றி நண்பரே!

தொடர்ந்து இணைந்திருங்கள்!

Manjal Kudai said...

நன்றாக இருக்கிறது ...
ரூம் போட்டு திங் பண்ணுவீங்களோ ...

ஷீ-நிசி said...

நன்றி மஞ்சள்... (அதென்னங்க மஞ்சள் குடை)

ரூம் போட்டுலாம் இல்லைங்க... அவ்வளவு வசதியான ஆள் இல்லைங்க :)

இணைந்திருங்கள்!

சுதாகர் said...

சபாஷ். சும்மா நச்சுன்னு இருக்கு நாலிதல்கள்

ஷீ-நிசி said...

நன்றி சுதாகர் ஜி!

புதியவன் said...

//உன் இதழ்கள் இரண்டு!
என் இதழ்கள் இரண்டு!

பின்னென்ன..
நாலிதழ்கள்தானே!!!//

அழகு...மிகவும் ரசித்தேன்...

நிலாரசிகன் said...

நிசி,

இன்றுதான் முதல் முறையாக உங்கள் வலைத்தளம் காண்கிறேன். வடிவமைப்பு நன்று. எழுத்துப்பிழைகளை திருத்துங்கள்
"பொன்னு","நாலிதழ்கள்" போன்றவை உறுத்துகின்றன.

நிறைய கவிதைகள் எழுத வாழ்த்துகிறேன்.

ஷீ-நிசி said...

நாலிதழ்கள் பிழையல்ல.... கவிதையை முழுதாய் படித்தீர்களா நண்பா!!