Thursday, 26 February 2009

விந்தை
கிழிக்கப் பட்ட காகிதங்கள்
கையிலே சுமையாய்;

உதட்டின் விளிம்பின் வரையிலும்
வந்துவிட்ட உமிழ் நீர்;

அவசரகதியில்
இயற்கையின் அழைப்பு;

இருந்தும்,
அவன் எதையுமே இறைக்கவில்லை
சாலையோரத்தில்..

காரணம்!

அவன் நின்றுக் கொண்டிருக்கும்
தேசம் இந்தியா இல்லையே!!!

11 comments:

"கருவெளி" ராச.மகேந்திரன் [R.Mahendran] said...

நெத்தியடியாய் இருக்கிறது... (அப்படி செய்யும் இந்தியர்களுக்கு மட்டும் தானே சொன்னீங்க..)

மனதுக்குள் ஒரே ஒரு வருத்தம்தான்... நாம் ஏன் எப்பொழுதும்... நம் நாட்டில் நாம் ஒழுங்காய் இருப்பதில்லை என்று குறைபட்டு கொள்ள வேண்டும் மாறாய் இப்படியும் யோசிப்போமே...
நம்ம ஊரிலும் அனைத்தையும் சரியாய் செய்பவர்கள் இருக்கிறார்கள்... அது நீங்களாகவும் இருக்கலாம்.

இது என் மனதில் பட்டது... "அனைவருக்கும் அவரவர் நாட்டின் மேல் ஏகப்பட்ட உரிமை இருப்பதாய் நம்புகிறோம்!" அதேசமயம்... அதே அளவு கடமை இருப்பதையும் ஏற்க மறுக்கிறோம்.. இந்நிலை மாறினால் உலகமே சிறக்கும்...

உங்களுக்காக... ஒரு நகைச்சுவையாய் இதுபற்றி நான் எழுதிய ஒரிரு சிறு கதை...

http://negalkalam.blogspot.com/2008/07/blog-post.html

http://negalkalam.blogspot.com/2008/07/1.html

நன்றி...
இணைந்து, இனி நாம் புதிய உலகம் செய்வோம்...

இரண்டாவது கதை நான்கு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது - குறிப்பு...

pukalini said...

இந்தியா சுதந்திர நாடு..

Suresh said...

Nanbare arumaiyana kavithai :-) padikavae santhosama iruku, ethu mathiri india vum marum endra kanavodu irukum nanban

கமல் said...

இருந்தும்,
அவன் எதையுமே இறைக்கவில்லை
சாலையோரத்தில்..

காரணம்!

அவன் நின்றுக் கொண்டிருக்கும்
தேசம் இந்தியா இல்லையே!!!//

நண்பா கவிதையின் சொல்லாடல் அழகு.,.

ஏன் அவ்வளவு இறுக்கமான சட்டங்களா உங்கள் நாட்டில்??

ஷீ-நிசி said...

நன்றி மகேந்திரன் அவர்களே!

////இது என் மனதில் பட்டது... "அனைவருக்கும் அவரவர் நாட்டின் மேல் ஏகப்பட்ட உரிமை இருப்பதாய் நம்புகிறோம்!" அதேசமயம்... அதே அளவு கடமை இருப்பதையும் ஏற்க மறுக்கிறோம்.. இந்நிலை மாறினால் உலகமே சிறக்கும்... /////

நீங்கள் சொன்ன கருத்துக்கள் முற்றிலும் உண்மையே!

ஷீ-நிசி said...

நன்றி சுரேஷ்! என் கனவும் அதுவே!

ஷீ-நிசி said...

கமல்.. என்னுடைய நாடும் இந்தியாதான். இங்கு சட்டங்கள் அவ்வளவு கடுமையாக இல்லாதிருப்பதால்தான்... எல்லோருமே இத்தேசத்தை அவரவர் பங்கிற்கு குப்பைகளால் அலங்கரிக்கிறார்கள்.. இதுவே அவர்கள் பாதம் சிங்கப்பூரிலோ, அமெரிக்காவிலோ இருந்தால் தானாகவே அந்த நாட்டின் சட்டத்திற்கு தங்களை பொருத்திக்கொள்கின்றனர், யாராக இருந்தாலும். அங்கே சட்டங்கள் மதிக்கபடுகின்றன.. இங்கே சட்டங்கள் உதாசீனபடுத்தபடுகின்றன.

உங்கள் கருத்திற்கு நன்றி கமல்!

ஷீ-நிசி said...

புகழினி!!! இந்தியா சுதந்திர நாடுதான்!.. ஆனால் அது ஒரு சுத்தமான நாடாகவும் மாறவேண்டும் என்பதே என்னுடைய ஆவலும்!

கருத்திட்டமைக்கு நன்றி புகழினி!

Suresh said...

//அவன் நின்றுக் கொண்டிருக்கும்
தேசம் இந்தியா இல்லையே!!!//

மிக அருமை சத்தியமா யோசிக்க வைக்கும் வார்த்தைகள், உங்கள் பதிவுகள் இல்லை இல்லை அனைத்தும் கல்வெட்டுகள் ! மிகவிரைவில் நீங்கள் கவிதை புத்தகங்கள் வெளியிட வாழ்த்துக்கள்

ஷீ-நிசி said...

நன்றி சுரேஷ்... உங்களின் ஆழமான பின்னூட்டங்கள் என் கவிதையை இன்னும் அழகூட்டுகின்றன.

தொடர்ந்து வர வேண்டுகிறேன்.

Rajeswari said...

உண்மையான வரிகள் அனைத்தும்..ஆனால் ஏனோ என் மனம் வலிக்கிறது,முழுதும் வாசித்த பிறகு......உண்மையின் நிதர்சனதிலா? அல்லது என் நாட்டின் நிலை இவ்வராகிவிடதே என்றா?