Saturday, 26 April 2008

அழகிய தீவே!





















பூக்களின் வாசம் உரைத்திட
பூவே!! நாவெதற்கு?! -உன்
புன்னகையழகை வரைந்திட
தீவே!! நானெதற்கு?!

கிளிகள் பேசிக்கொள்ளும்
அலகை* காண ஓலியெதற்கு?! -உன்
விழிகள் பேசிக் "கொல்லும்"
அழகை காண மொழியெதற்கு?!

தென்றலது பயணம் செய்ய
எட்டுத்திசைகளெதற்கு?! -உன்
கொஞ்சும் மொழி குரலிருக்க
ஏழிசைகளெதற்கு?!

விண்ணோடு நிலவிருந்தால்
அழகதற்கு!!
என்னோடு நீயிருந்தால்
அழகெனக்கு!!


---------------------------
அலகை (நாசி, மூக்கு)


ஷீ-நிசி

1 comment:

I AM naagaraa said...

வெட்டவெளித் தாளில்
தேவன் எழுதிய
ஒளிக் கவிதையாம்
ஞானப் பெண் பற்றி
கணினித் தாளில்
நீவிர் எழுதிய
கவிதையிலும்
தேவனின் கைவண்ண
ஒளியைக் குறைவின்றிக்
காண முடிகிறதே!

வாழ்த்துக்கள் ஷீ-நிசி.

அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
நான் வழங்கும் மகாயோகம்
என் கவிதைகள்