Thursday, 29 November 2007

உயிர்த்தோழன்!






கைப்பிடி அளவு இதயம்,
கைத்தடி நழுவும் வரையும்,

நிரப்பிக்கொண்டேயிருக்கிறது,
எண்ணற்ற நினைவுகளை -அதில்
கொஞ்சமே கொஞ்சந்தான்,
பெண்ணற்ற நினைவுகள்!!

அனைவருக்குமே,
ரகசிய சிநேகிதன்!!
அவரவர் இதயம் மட்டுந்தான்!

படுக்கையிலே!! -நாம்
படுக்கையிலே.......

துக்கமிகுந்து ஏங்கினாலும்,
ஏக்கமிகுந்து தூங்கினாலும்,

நம் நிலை கண்டு, "துடிப்பது"
"துடித்துக்கொண்டேயிருப்பது"
நம் இதயம் மட்டும்தான்.....

இதயத்தில் ஓட்டையாம்!!!
இருப்பதும் கூட சிறப்புதான்!!

சேமிக்கப்படும் சோகங்களில்,
சிலவாவது செலவாகுமே!!
ஓட்டையின் வழியே.....

இதயம்!!

இறைவன் ஒவ்வொருவனுக்கும்
ஒட்டியனுப்பிய உயிர்த்தோழன்!

நாம் இறந்தபிறகும்
நம்மோடே இறந்துவிடுவதால்..

இதயம்!!

"உயிர்த்தோழன்" தான்!


ஷீ-நிசி

3 comments:

tractus solitarius said...

முதல் இரு வரிகளிலேயே எங்கள் கைப்பிடி அளவு இதயம்உங்கள் கையயக படுத்தி விட்டீர்கள்.....!!!!!

Saleem said...

Dear Friend, The Words are very nice.....
And its explaining our True hearts.....
Congratulations.........

தமிழ்தினா said...

ஆமாம் நண்பா.. இறுதி வரை நம்மோடு வரும் நண்பன் நம் இதயம்தான்...

வாழ்த்துகள்.